வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


திருகோணமலை மறை மாவட்ட குருக்களின் ஆலோசனை குழுக்கூட்டம்

திருகோணமலை மறை மாவட்ட குருக்களின் ஆலோசனை குழுக்கூட்டம் இம்மாதம் 23 /05 / 2017 செவ்வாய் கிழமை உப்புவெளியில் அமைந்துள்ள மறை மாவட்ட மேய்ப்பு பணி மையத்தில் திருமலை ஆயர் தலைமையில் இடம் பெற்றது. [2017-05-26 13:57:32]


பாப்பரசரின் பிரதிநிதியால் மன்னார் மறைமாவட்ட மறையாசிரியர்கள் கௌரவிக்கும் நிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 43 பங்குத் தளங்களில் பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக மறைக்கல்வி கற்பிக்கும் மறையாசிரியர்கள் 190 பேரை கௌரவிக்கும் நோக்குடன் மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையின் அழைப்பை ஏற்று திருத்தந்தையின் இலங்கைக்கான தூதுவர் திருத்தந்தையின் பிரதிநிதி பேராயர் வந்தனைக்குரிய பியர் நுயன் வான்டொட் ஆண்டகை மன்னாருக்கு சனிக்கிழமை (20.05.2017) அன்று விஐயம் மேற்கொண்டார். திருத்தந்தையின் தூதுவர் மன்னார் மறைமாவட்ட பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்துக்கு வருகை தந்து பத்து வருடங்களுக்கு மேலாக மறையாசிரியர்களாக பணியாற்றிய 190 மறையாசிரியர்களை கௌரவித்தார். [2017-05-21 22:25:24]


திருகோணமலை மறை மாவட்ட பாலையூற்று லூார்த்து அன்னை திருத்தலம் . . .

வருடாந்த திருவிழாவும் . . கெபியின் 111 வது வருட பூர்த்தியும் . . .
நிகழ்வுகள் . ! ‎19-05-2017 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது . .
தொடர்ந்து 9 நவ நாட்களிலும் தினமும் மாலை 5.30மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து கூட்டுத்திருப்பலியும் நடைபெறும் . . இந் நவநாட்களில் நற்சிந்தனையும் அருளுரையும் . . . அருட்தந்தைகளான . .
நிர்மல் சூசை அவர்கள் . . . ( பங்கு தந்தை . . . தூய யூதாதேயு திருத்தலம் தேற்றாத்தீவு மட்டக்களப்பு )
அன்புராசா omi அவர்கள் . . . ( . . இயக்குநர் அமைதிக்கரங்கள் முல்லைத்தீவு . . . ) ஜோர்ஜ் திசாநாயக்க அவர்கள் (பங்குத் தந்தை . . சீனக்குடா தூய அந்தோனியார் ஆலயம் . . . )
பீட்டர் அமல்ராஜ் அவர்கள் . . ( பங்குத்தந்தை . . . தரணிக்குளம் வவுனியா . . )
சுகுனேந்திரன் குருஸ் ( பங்குத்தந்தை உவர்மலை குழந்தை இயேசு ஆலயம் திருகோணமலை . )
அனிஸ்டன்( SJ ) அவர்கள் ( இயக்குநர் இயேசு சபை குருமடம் திருகோணமலை )
மதுராங்கன் குருஸ் அவர்கள் . . ( பங்குத்தந்தை தூய லூார்த்து அன்னை திருத்தலம் பாலையூற்று திருகோணமலை )
ஆகியோர்களினால் நிகழ்த்தப்படும் . .
இறுதி நாள் திருவிழா கூட்டுத்திருப்பலி நிகழ்வுகள் . . .
‎28-05-2017 ஞாயிறு காலை 7மணிக்கு . . திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய . . நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் தலைமையில் இடம்பெறும் . .
மேலும் . . . .‎27-05-2017 சனிக்கிழமை . அதிகாலை 5.30 மணிக்கு திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்திலிருந்து லூார்த்து அன்னை திருத்தலம் நோக்கி சிறப்பு பாத யாத்திரையும் ஆயரின் தலைமையில் இடம்பெற உள்ளது . .
இறுதி நாள் நிகழ்வுகளில் . . . ‎(28-05-2017) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை ஆயரின் தலைமையில் . . நாம் வளர்ச்சி அடைகிறோம் ( றெஹபோத் ) எனும் தலைப்பில் மாபெரும் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற உள்ளது . .
அணைவரும் வருக அன்னையின் அருள் பெறுக என அன்புடன் அழைக்கின்றனர் பங்குத்தந்தையும் பங்கு மக்களும் . . . [2017-05-21 22:24:42]


மட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தை சுவாமிநாதன் அவர்களினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது. இதன்போது வடகிழக்கில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் உரிய பதில்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த விபரங்களை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு பாராளுமன்றத்தின் ஊடாக வெளியிட வேண்டும். இதனை யார் செய்தார்கள் என்ற விசாரணைகளுக்கு முதல் இலங்கையில் எத்தனை படுகொலைகள் நடைபெற்றுள்ளது. அதில் எத்தனை இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற உண்மைகளை தற்போதுள்ள கூட்டாட்சி அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது திறந்தவெளியில் அரசியல் சாயம் இல்லாமல் பொது அமைப்புகள் இணைந்து நடத்தியமை தொடர்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தினால் விசேட அறிக்கையொன்றும் விடுக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை பொறுத்தமட்டில் காலத்துக்கு காலம் பல படுகொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அரச படைகள் உட்பட நாட்டில் உள்ள பல ஆயுதக் குழுக்களினாலும் வேறு பல இனக் குழுமத்தினாலும் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் இந்த நாட்டில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக இவ்வாறான படுகொலைகள் ஊடாக வடகிழக்கில் உள்ள தமிழர்களே இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை சுதந்திரமடைந்து ஒரு வருட காலப்பகுதியில் – தொடக்கப்பட்ட கல்லோயா குடியேற்ற திட்டத்தின் மூலம் பழந்தமிழர் ஊரான பட்டிப்பளையில் தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அன்றைய காலத்தில் சிங்களவர்களுக்கு பத்தாயிரம் ரூபாக்களை வெகுமதியாக வழங்கி குடியேற்றங்களை ஊக்குவித்த அப்போதைய அரசாங்க அதன் அடுத்த உச்சமாக 150 இற்கும் மேற்பட்ட மக்களை கொன்று 1956 இல் கல்லோயா படுகொலையை நிகழ்த்தியதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. அன்று தொடக்கம் கடந்த 2009 ம் ஆண்டு வரை வெளிப்படையான பல படுகொலைகள் வடகிழக்கு பகுதியில் கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.
அவற்றில் எந்த படுகொலைக்கும் இன்று வரை நீதி வழங்கப்பட்டதாக வரலாறு இல்லை. அதனை நோக்கிய எந்த நகர்வையும் இன்றைய நல்லாட்சி அரசும் செய்யவில்லை. 1956 இலிருந்து 2008 வரை நடைபெற்ற 149 முக்கியமான படுகொலைகளை அரசசார்பற்ற அமைப்பு ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கமோ இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மக்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர் போன்று இவர்களது படுகொலைகள் குறித்த விசாரணைகளில் இன்றுவரை கரிசனை கொள்ளவில்லை.
இங்கு நாம் ஒரு நாட்டின் இராணுவத்தை குற்றம் சாட்டவோ அல்லது கொச்சைப்படுத்தவோ முன்வர வில்லை மாறாக ஒரு நாட்டின் பிரஜைகளை சட்டத்திற்கு புறம்பாக கொன்று குவித்த குற்றவாளிகள் மீதே நடவடிக்கை எடுக்க சொல்லுகின்றோம். அது இராணுவமாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஆயுத குழுவாக இருந்தாலும் சரி குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதுவே ஒரு நாட்டினுடைய இறமையுமாகும். இதனை ஒரு அரசு செய்யாது குற்றவாளிகளை காப்பாற்ற முனையுமாக இருந்தால் குறித்த அரசே இந்த நாட்டின் இறைமையை இல்லாமல் செய்கிறது என்று அர்த்தம். அந்த அர்தத்தை திரும்ப திரும்ப தமிழ் மக்களுக்கு கற்பிக்கவே தற்போதுள்ள அரசும் முயற்சிக்கின்றது. முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு வரலாறு இந்த நாட்டில் ஒரு இனத்தின் வரலாறு மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற மனநிலை இனவாத சக்திகளின் உறுதியாக உள்ளன. அதற்கு தீனிபோடும் வகையிலேயே நல்லாட்சி அரசும் செயற்படுகிறது. வடகிழக்கில் பெரும்பான்மை இனமாக வாழும் தமிழ் மக்கள் தங்களது உறவுகள் கொல்லப்பட்டதை நினைத்து ஒன்று கூடி ஒப்பாரிவைக்க கூட உரிமை இல்லை என்ற நிலையை இன்றைய அரசாங்கமும் உருவாக்கியுள்ளது. அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகள் இந்த நாட்டின் இறைமையை மீறுவதாகவே உள்ளது.
உண்மையில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்று இலங்கை அரசு கருதுமாக இருந்தால் இலங்கையில் மிகப்பெருந்தொகையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளான மே 18 ஜ வடகிழக்கு மக்களின் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க இலங்கை அரசு ஆவண செய்வதுடன். கடைசி இது வரை காலமும் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளின் விபரங்களையாவது அரசாங்க பாராளுமன்றத்தில் சமர்பித்து அது குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட சிவில்சமூக அமைப்புக்களாகிய நாம் கூட்டாக வேண்டுகோள் விடுக்கின்றோம். குறித்த படுகொலைகளின் பெயர் விபரங்கள் அடங்கிய விரிவான ஆவணம் ஒன்றையாவது வடகிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தயாரித்து அதனை பாராளுமன்றத்திலும் மாகாண சபையின் அமர்வுகளின் போது சமர்ப்பித்து இந்த நாட்டில் உண்மையாக எத்தனை படுகொலைகள் நடந்துள்ளது. அதில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென வேண்கோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம், அரசசார்பற்ற அமைப்புகளின் இணைப்பான இணையம், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும், பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர். [2017-05-19 00:19:17]


திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திருச்சொருபம் கண்டு பிடிப்பு

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட இறை இரக்க ஆண்டவர் திருச் சொரூபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடம்பன் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை எ.டெஸ்மன் அஞ்சலோ குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கையில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலயத்தின் உட்பகுதிக்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் ஆலயத்தில் உள்ள கண்ணாடிகளை உடைத்து இறை இரக்க ஆண்டவர் திருச் சொரூபத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பங்குத்தந்தை உட்பட கிராம மக்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்திருந்தனர். இந்த நிலையில் இன்று (15) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கருங்கண்டல் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சில இந்து மத நண்பர்கள் காணாமல் போன இறை இரக்க ஆண்டவர் திருச் சொரூபம் குறித்த குளத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த சொரூபத்தை கண்ட குறித்த நபர்கள் உடனடியாக் அடம்பன் பங்குத்தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பங்குத்தந்தை குரு முதல்வர் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தினார். பின்னர் மீட்கப்பட்ட குறித்த திருச் சொரூபம் மீண்டும் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கொண்டு வரப்பட்டு மக்களின பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. [2017-05-16 00:17:55]


இலங்கை இரட்சணிய சபைக்கு மேலும் இரு புதிய அருட்சகோதரர்கள்

இலங்கை இரட்சணிய சபையினருக்கு இன்று ஒரு உன்னதமான நாள், இலங்கையைச் சேர்ந்த சகோ. தரிந்து நுவான், சகோ. சுமித் சுமேத பெர்னாண்டோ ஆகிய இரு அருட் சகோதரர்கள் தங்களது முதல் வார்த்தை பாட்டினை மேற்கொண்டு இரட்சணிய சபையில் இணைந்து கொண்டனர். இந்த புனித நிகழ்வு, 13 /05 / 2017 அன்று பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இரட்சணிய சபையினரின் நவ சந்நியாச இல்லத்தில் நடை பெற்றது.இவர்கள் பணி சிறக்கவும், இவர்களின் துறவற வாழ்வின் மதிப்பீடுகளை ஏற்று வாழ இறைவனின் ஆசீர் இவர்களோடு என்றும் இருக்கவும் இவர்களுக்காக செபிப்பதோடு, எமது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றோம். [2017-05-14 10:36:18]


போர்த்துக்கல் நாட்டு பற்றிமா அன்னையின் காட்சிகளின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டம் யாழ் மறைமாவட்ட பண்டத்தரிப்பு பற்றிமா அன்னையின் யாத்திரைத்தலத்தில் 13 மே 2017

13 மே 2017 அன்று உதயன் பத்திரிகையில் வரவுள்ள ஒரு பக்க விளம்பரத்தை இன்று 12 மே 2017 அன்றே பாருங்கள்
போர்த்துக்கல் நாட்டு பற்றிமா அன்னையின் காட்சிகளின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டம் யாழ் மறைமாவட்ட பண்டத்தரிப்பு பற்றிமா அன்னையின் யாத்திரைத்தலத்தில் 13 மே 2017 அன்று யாழ் ஆயர் மேதகு பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் காலை 7 மணிக்கு நடைபெறும் என பண்டத்தரிப்பு பற்றிமா அன்னையின் யாத்திரைத்தல பரிபாலகர் மைக்கல் சவுந்தரநாயகம் அடிகளார் தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா செய்தி சேவைக்கு அறிவித்துள்ளார். திருப்பலியின் பின்னர் போத்துக்கல் நாட்டில் இருந்து கென்றி ஜெலான் அ.ம.தி அடிகளாரால் அன்று கொண்டு வரப்பட்ட திருச்சொருபம் சரித்திரத்தில் முதற் தடவையாக பவனியாக எடுத்துவரப்படள்ளது என்பது இங்கு சிறப்பு முக்கியமானதாகும் என பண்டத்தரிப்பு பற்றிமா அன்னையின் யாத்திரைத்தல பரிபாலகர் மைக்கல் சவுந்தரநாயகம் அடிகளார் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை இயக்குநர் - பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மற்றும் ரீ.சி.என்.எல். ரீவி - ஆசிரியர் (ரீ.சி.என்.எல்.) தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணையத்தளம் ஊடக வருகை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் -------------------------- [2017-05-14 10:31:17]


கொழும்பு உயர் மறை மாவட்டத்துக்கு மேலும் 15 புதிய குருக்கள்

கொழும்பு உயர் மறைமாவட்டத்தை சேர்ந்த 15 அருட்சகோதரர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டனர். இப்புனித நிகழ்வானது கடந்த சித்திரை மாதம் 29 ம் திகதி சனிக்கிழமை கொழும்பு புனித லூசியா பேராலயத்தில் இடம்பெற்றது. கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயர். அதி வண. கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு புதிய குருக்கள் திருப்பொழிவு செய்யப்பட்டனர். அனைத்து புதிய குருக்களின் பணி வாழ்வு சிறக்க இறைவனை வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம். தமிழ் ஆன்மீக இணையம் [2017-05-04 22:48:09]


“யோசேவாஸ்“ தமிழ்த் திரைப்படம் வெளிவந்துள்ளது.

“யோசேவாஸ்“ தமிழ்த் திரைப்படம் வெளிவந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னா் சிங்களத்தில் எடுக்கப்பட்ட “யோசேவாஸ்“ என்ற பெயாிலான புனித யோசவ்வாஸ் அடிகளாாின் வாழ்க்கை வரலாற்றை உள்ளடக்கிய ஒன்றரை மணித்தியாலத் திரைப்படம் இப்போது தமிழ் மொழி உரையாடல்களுடன் (டப்பிங்) வெளிவந்துள்ளது. இதன் விலை 200 ரூபாய். மன்னாா் மறைமாவட்டப் பங்குத்தந்தையா்கள் இதைப் பெற்று பங்கு மக்களுக்கு வழங்குவதற்கு கலையருவியோடு தொடா்புகொள்ளுங்கள் [2017-05-02 23:04:34]


ஆண்டங்குளம் குமனாயங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புனித தோமையார் தாமரைத்தடாகம்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டங்குளம் குமனாயங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாமரைத்தடாகத்திலான’புனித தோமையார் சிலை’நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட குறித்த தோமையார் சிலை யுத்தத்தின் காரணமாக சேதமடைந்திருந்தது. இன,மத பேதங்கள் இன்றி அனைவரினாலும் எற்றுக்கொள்ளப்பட்ட புனித தோமையார் அவர்களின் சிலையினை மீண்டும் குறித்த பகுதியில் புதிதாக அமைக்க வேண்டும் என பங்குதந்தை அவர்களும் கிராம மக்களும் இனைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புதிய வடிவத்தில் தாமரைத்தடாகத்திலான ‘புனித தோமையார் சிலை’ சுமார் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அவர்களினால் குறித்த சிலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பங்கு மக்கள்,குறித்த கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. [2017-04-28 23:56:10]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்