வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


நானாட்டான் பங்கு மக்கள் இணைந்து வழங்கும் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி.

நானாட்டான் பங்கு மக்கள் இணைந்து வழங்கும் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி "களங்கம் சுமந்த கல்வாரி நாயகன்" என்னும் இயேசுவின் கல்வாரி காவியம் 26வருடங்களுன் பிற்பாடு அரங்கேற்ற உள்ளார்கள். இடம் : புனித ஆரோக்கிய அன்னை ஆலய மைதானம் .நானாட்டான் காலம் : 31.03.2017 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 7.00மணி எனவே ஆண்டவரின் திருப்பாடுகளை தியானிக்க கத்தோலிக்க இறைமக்களை அழைத்து நிற்கின்றார்கள். அதே வேளை இந்த. புனித நிகழ்வு சிறப்பாக நடைபெறவும், கலைஞர்கள் மிகவும் சிறப்பாக காட்சிகளை காண்பிக்கவும், மற்றும் ஒழுங்குகளை மேற்கொண்ட அனைவருக்கும் மறைமாவட்டம் சார்பான நல்வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். எனவே பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் பங்குதந்தை, பங்கு மக்கள் சார்பாக அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள். [2017-03-27 21:35:15]


அருட் தந்தை. H . ஜோசப் சிறில் மைக்கல் அடிகளார் இறைபதம் அடைந்தார்.

இலங்கையின் கொழும்பு உயர் மறை மாவட்டத்தை சேர்ந்த குருவான அருட் தந்தை. H . ஜோசப் சிறில் மைக்கல் அடிகளார் தனது 81 வது வயதில் காலமானார். அருட்தந்தையின் அம்மா இளைப்பாற்றிக்காக செபிக்கும் படியாக வேண்டுவதோடு அருட்தந்தையின் பிரிவால் துயருறும் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். [2017-03-27 21:32:48]


சிலுவையில் இரட்சணியம்......இயேசு ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சி (உடக்குப்பாஸ்)

சிலுவையில் இரட்சணியம்......இயேசு ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சி (உடக்குப்பாஸ்) 150 வருட கால பழமைவாய்ந்த இலங்கையில் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை கிராமத்தில் பாரம்பரிய கலையான உடக்குகளினாலான எம் பெருமான் இயேசு ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சியானது ஆரங்கேற்றப்பட உள்ளது. இடம் : மன் பற்றிமா மத்திய மகாவித்யியாலயம் காலம் : 6,‎7-04-2017 வியாழன், வெள்ளி ஆகிய இரு தினம் நேரம் : மாலை 6;30மணி எனவே ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சிகளை உணர்வுபூர்வமாக கண்டு விசுவாசிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பங்குதந்தையர்கள் பங்கு மக்கள் பேசாலை [2017-03-25 15:14:35]


திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் 150ஆவது வருட ஆண்டு விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுகள் (19) மாலை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சி தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான இரா.சம்பந்தன், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, பாராளுமன்றா உறுப்பினர் இம்றான் மகரூப், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், முன்னாள் ஆயர் ஜோசப் கிங்ஸ்லீ சுவாமிபிள்ளை உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இதன்போது கல்லூரியின் 150வது விழாவை ஒட்டிய முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2017-03-21 23:35:16]


குடும்ப விழாவும் தவக்கால தியானமும்.

இலங்கையில் உள்ள கிளரீசியன் பங்குத்தளங்கள் இணைந்து நடாத்திய குடும்ப விழாவும் தவக்கால தியானமும் பள்ள கெட்டுவ புனித யோசப்வாஸ் பங்கில் உள்ள கந்தசேனையில் இம்மாதம் 18 , 19 திகதிகளில் இடம்பெற்றது. இதற்கு கொழும்பு புதுக்கடை புனித செபஸ்தியார் பங்கு மக்களும், பள்ளகெட்டுவ.புனித யோசப்வாஸ் பங்குமக்களும் வருகை தந்து சிறப்பித்து இருந்தனர். இந்நிகழ்வுகளை கிளரேசிய குருக்களான அருட்பணி. யோய் மரியரெட்ணம். அருட்பணி.ஸ்ரிபன்.சுரேந்திர குமார், அருட்பணி. வரதன் குலாஸ் ஆகியோர் சிறப்பாக வழிநடத்தியிருந்தனர். [2017-03-20 11:52:16]


சிறப்பாக இடம்பெற்ற அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா

பாலைதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் காலை திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டது. பின்னர் அந்தோனியார் திருச்சொருபம் ஏற்றப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது. திருப்பலி பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அந்தோனியாரின் அருளினைப் பெற்றுக்கொண்டனர். [2017-03-20 11:50:52]


மன்னார் மாவட்டத்தின் புதுமைகள் நிறைந்த பரப்புக்கடந்தான் கத்தர் திருத்தலத்தில் வண பிதா போல்றொபின்சன் அடிகளாரின்

"கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்" (உரோ 6:8) மன்னார் மாவட்டத்தின் புதுமைகள் நிறைந்த பரப்புக்கடந்தான் கத்தர் திருத்தலத்தில் வண பிதா போல்றொபின்சன் அடிகளாரின் "தவக்கால சிறப்பு ஆராதனையும் குணமாக்கல் வழிபாடும்" இடம்: பரப்புக்கடந்தான் கத்தர் திருத்தலம் காலம் : 26.03.2017 ஞாயிறு. நேரம் : மாலை 5மணி முதல் "அவர் தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்"(ஏசாயா 53:5) எனவே இதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சரியாக 26.03.2017ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு மன்னார் பஸ் நிலையத்தில் இருந்து கத்தர் கோவிலை நோக்கி பஸ் வண்டிகள் புறப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். எனவே அனைவரையும் இதில் கலந்துக்கொண்டு இறையாசீர் பெற்றுச்செல்ல அழைத்து நிற்கின்றோம். மேலதிக விபரம் தேவைப்படின் ‎0775903356, ‎0718501515 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் நன்றி பரிபாலகர் கத்தர் திருத்தலம் பரப்புக்கடந்தான். [2017-03-15 22:44:04]


இலங்கை ஆயர் பேரவையின் உத்தியோகப்பூர்வ நியமனங்கள்

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் அண்மையில் நடந்து முடிந்த மாநாட்டில் ஆயர் பேரவையின் புதிய தலைவராக பதுளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூலியன் வின்சன் செபஸ்தியன் பர்னாந்து ( SSS) ஆண்டகை அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குருநாகல் மறைமாவட்ட ஆயர் மேதகு ஹெரல்ட் அன்ரனி பெரேரா ஆண்டகை நிதி நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கபட்டுள்ளார். இந்த நியமனங்கள் கடந்த மாதம் 21ஆந் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பணியை பொறுப்பேற்கும் ஆயர் தந்தையர்களுக்கு எமது வாழ்த்துக்களும் செபங்களும் உரித்தாகட்டும். [2017-03-14 22:06:43]


மன்னாா் மறைமாவட்டக் குருக்கள் 65 போ் மட்டில் ....

மன்னாா் மறைமாவட்டக் குருக்கள் 65 போ் மட்டில் தமது வருடாந்த தியானத்தை கடந்த 5 - 10ஆம் திகதி வரை மடு தியான இல்லத்தில் மேற்கொண்டனா். தமிழ் நாடு மதுரை உயா் மறைமாவட்டப் பேராயா் மேதகு பாப்புசாமி அந்தோனி ஆண்டகை அவா்கள் தியான உரைகளை வழங்கினாா். இத்தியான நாட்களில் எமக்காகச் செபித்த அனைவருக்கும் நன்றி. [2017-03-13 20:47:18]


இலங்கை பிரான்சிஸ்கன் (OFM) சபையின் நிர்வாகப் பணியில் புதிய தலைவர்

இலங்கை பிரான்சிஸ்கன் (OFM) சபையின் நிர்வாகப் பணியில் புதிய தலைவர் 1505ம் ஆண்டில் இருந்து இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் மேலைத்தேய போர்த்துக்கேயருடன் முதல் தடவையாக கிறிஸ்தவ விசுவாசத்தை வித்திட்டவர்கள் புனித பிரான்சிஸ்கன் (OFM) சபைத் துறவிகள் என்றால் அது மிகையாகாது. போர்த்துக்கேயருக்குப் பின் நீண்ட கால இடைவெளியைமீண்டும் இத்தாலி நாட்டு பிரான்சிஸ்கன் சபை துறவிகள் வருகையும் அவர்களது சேவையும் மறக்கமுடியாத ஒன்றாகும். காலப ;போக்கில் எமது நாட்டில் ஏற்பட்ட ஒருசில மாற்றங்களினால் 1980களில் பிரான்சிஸ்கன் சபையின் பிரசன்னமும் சேவையும் மறைந்துவிட்டது. இதன் பின்பு 1995ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இத்தாலி நாட்டின் உரோமை தேசத்து கட்டளைக்கிணங்க பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சிஸ்கன் சபை துறவிகள் எமது மண்ணில் கோட்டைப் பகுதியில் தங்கள் பணியையும், குழுவாழ்வையும் புரிந்து வருகிறார்கள். இன்றைக்கு சுமார் ஆறு வருடகாலங்களாக எமது நாட்டை சேர்ந்தவர்கள ; தலைமைத்துவத்தை தாங்கி பணி ஆற்றும் அவ்வேளையில், அண்மையில் இடம்பெற்ற ஐந்தாவது தலைமை அமைப்பு தேர்வில் புதிய நிர்வாக பணி தலைவராக அருட்பணி. அந்தோனிப்பிள்ளை எட்வேட் ஜெயபாலன் (OFM) அவர்களும், அவருடைய ஆலோசகர்களாக அருட்பணி. அருள்நேசம் செபஸ்ரியான் லெம்பேட் (OFM)மற்றும், அருட்சகோதரா.; பற்றிக் சுஜீவ பெரேரா (OFM) அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் இந்த புதிய நிர்வாகப்பணி இனிதே சிறக்க பிரான்சிஸ்கன் சபையினர் இவர்களுக்காக இறைவனின் ஆசீர்வாதத்தையும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றார்கள். தகவல் : அருட்பணி.லின்டன் (OFM) [2017-03-13 20:45:35]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்