வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கர்தினால் கோரிக்கை

பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். உத்தியோகபூர்வமாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரியுள்ளார். டெங்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் உரிய தீர்வுத் திட்டமொன்று அரசாங்கம் முன்வைக்காமைக்கு எதிராக முழு அளவில் போராட்டமொன்றை நடாத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது. எனினும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கைக்கு அமைய பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. [2017-07-04 21:59:48]


ஐந்தாண்டு நிறைவு காணும் மட்டக்களப்பு மறைமாவட்டம்

119 வருடகால வரலாற்றினைக்கொண்ட திருமலை-மட்டக்களப்பு மறைமாவட்ட வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். வாழ்த்துகின்றோம்! 5 ஆண்டு நிறைவில் மட்டக்களப்பு மறைமாவட்டம் THANK GOD HAPPY 5th BIRTHDAY TO CATHEDRAL [2017-07-03 22:10:58]


மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஆன்மீக நெறியுடன் பல்வேறு சிரமங்கள்

மன்னார் ஆயர் - மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஆன்மீக நெறியுடன் பல்வேறு சிரமங்கள் - சவால்கள் போராட்டங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சலடித்து மக்கள் தொண்டனாக உண்மைக்கு சான்றாக இன - மத - ஜாதி வேறுபாடின்றி மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஆற்றிய அளப்பரிய நற்பணிகளை "A Living Hero" (ஓர் வாழும் நாயகன்) என ஓர் நூலாக அமல மரி தியாகி சபையைச் சார்ந்த அருட்பணி கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் தொகுத்துள்ளார். இந்நூல் ஆண்டகை அவர்கள் எழுதிய சில ஆவணங்களினதும் ஆயரைப்பற்றி எழுதப்பட்டிருந்த சில தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. மன்னாரில் வெளியிடப்பட்ட இந்நூல் அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் தலைமையில் கனடாவிலும் வெளியிடப்பட உள்ளது. அருட்பணி கலாநிதி வின்சன்ற் பற்றிக் அடிகளார் OBTEC எனும் தொண்டாற்று நிறுவனத்தை இயக்கி வருகிறார். போரினால் ஊனமுற்றிருக்கும் மக்களுக்காக நடத்தப்படும் இந்நிறுவனத்திற்கு இவ்வெளியீட்டு விழாவில் பெறப்படும் அன்பளிப்புகள் யாவும் வழங்கப்படும். இன உணர்வாளர்களையும் மனிதத்தை நேசிக்கும் அன்பர்களையும் அன்போடு அழைக்கிறோம். [2017-07-02 14:06:09]


கொழும்பு - புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில்...

கொழும்பு - புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் பொதுக்காலத்தின் 13ஆவது ஞாயிறு தின வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வியாகுல மாதா பங்கின், குறிப்பாக திரு இருதய ஆண்டவன் சபையின் 88ஆவது ஆண்டினை முன்னிட்டே குறித்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வழிபாடுகளின் போது இறைவனுக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது. அத்துடன் இறைவனுடைய திருச் சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு இன்றைய நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. [2017-07-02 14:04:23]


கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றம் தமிழ்மொழியில் மாபெரும் திருவிழிப்பு

பேராயா் மெல்கம் கா்தினார் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் துனை ஆயா் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் வழிநடத்தலில் கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றம் தமிழ்மொழியில் ஏற்பாடு செய்யும்
மாபெரும் திருவிழிப்பு
இடம்: புனிதஆசீர்வாதப்பர் கல்லுரி வளாகம் St. Benedicts College Kotahena, Colombo 13
நாள்: 01.07.2017 சனிக்கிழமை
நேரம்: இரவு மணிமுதல்அதிகாலை 5.00 மணிவரை (திருப்பலி உட்பட)
நோய் துன்பங்களுக்காக ஜெபிக்க இந் நற்செய்திப் பெருவிழாவில் ஒன்று கூடுவோம்.
சிறப்புமறையுரை: அருட்தந்தை போல் ரொபின்சன்
மறை வளர ஒன்றிணைவோம். [2017-07-01 13:51:05]


நாளை நடைபெறும் மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நாளை காலை ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது. இதன்போது, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோரும் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் திகதி மாலை மடு ஆலயத்தில், மடு ஆலய பரிபாலகர் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையானவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்துள்ளார். [2017-07-01 12:46:42]


வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான நவ நாட்கள்

வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழாவிற்கான நவ நாட்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படுவதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. வருடா வருடம் நடைபெறும் ஆடி திருவிழாவிற்கு பல பாகங்களிலும் இருந்து மக்கள் வருகைதருவது வழக்கம். இந்த முறையும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள திருவிழாவிற்கு முற்கூட்டியே மக்கள் மடுத்திருத்தலத்திற்கு வந்துக்கொண்டிருப்பதாகவும், இவ்வாறு வருகின்றவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் வண பிதா எமில் அடிகளார் தெரிவித்தார். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளாக போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு, குடிநீர் கடைகள் போன்றவைகளை உரிய அதிகாரிகள் மிகவும் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் அருட்தந்தை அவர்கள் தெரிவித்தார். அத்தோடு ஆலய சுற்றுப்புற சூழல்களில் சத்தம் போடுதல், விளையாடுதல், வியாபாரம், கேலி கூத்துகள் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதென்பதை அறியத்தருகின்றோம். அத்தோடு மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் வானொலி கேட்டல் போன்றன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகும் நவநாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று ஆடி மாதம் 1ம்திகதி நற்கருனை வேஸ்பர் ஆராதனையும், ஆசிரும் இடம் பெறும். அதனை தொடர்ந்து 02.07.2017அன்று காலை திருவிழா திருப்பலியானது தமிழ் சிங்கள மொழிகளில் ஆயர்கள், குருக்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியா ஒப்புக்கொடுப்பார்கள். அதனை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனியும் மடு அன்னையின் ஆசீர்வாதமும் இடம்பெறும் என்பதனையும் அனைத்து பாகங்களிலும் இருந்து மடு அன்னையின் திருத்தலத்திற்கு வருகைதர உள்ள பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம். குறிப்பு : மடு அன்னையின் ஆசீர் பெற உக்கள் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம், அவ்வாறு வர முடியாத பக்தர்கள் இருப்பின் உங்கள் தேவைகளை இதில் பதிவு செய்யும் பொருட்டு விசேடமாக செபிக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம். [2017-06-25 23:29:09]


குருக்களுக்கான செபமாலை பவனி,

உலக குருக்கள் இணையத்தின் அனுசரணையுடன், காலி மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருக்கும், குருக்களுக்கான செபமாலை பவனி மாத்தறையில் உள்ள மாத்தறை மாதா திருத்தலத்தில் இம்மாதம் 23/06/2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து குருக்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம். [2017-06-22 20:36:26]


20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தை

இன்றைய தினம் 20.06.2017 தனது குருத்துவ வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தை அருட்பணி சேவியர் ஜேம்ஸ் அவர்களின் பணிவாழ்வுக்காக இறைவனிடம் வேண்டி,வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். [2017-06-20 22:18:57]


28 ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னைநாள் இயக்குனரும்....

19-06-2017 அன்று தனது குருத்துவ வாழ்வில் 28 ஆண்டுகளை நிறைவு செய்யும், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் முன்னைநாள் இயக்குனரும், தற்போதைய யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனருமான அருட்பணி.அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களின் பணிவாழ்வுக்காக ஆண்டவர் இயேசுவிற்கு நன்றி கூறுவதோடு, அவரது பணிவாழ்வு மேலும் சிறக்க, எமது வாழ்த்துகளை செபங்களுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். [2017-06-20 22:10:25]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்