வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


குருக்களுக்கான செபமாலை பவனி,

உலக குருக்கள் இணையத்தின் அனுசரணையுடன், காலி மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருக்கும், குருக்களுக்கான செபமாலை பவனி மாத்தறையில் உள்ள மாத்தறை மாதா திருத்தலத்தில் இம்மாதம் 23/06/2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்து குருக்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம். [2017-06-22 20:36:26]


20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தை

இன்றைய தினம் 20.06.2017 தனது குருத்துவ வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்யும், மிருசுவில் பங்கின் பங்குத் தந்தை அருட்பணி சேவியர் ஜேம்ஸ் அவர்களின் பணிவாழ்வுக்காக இறைவனிடம் வேண்டி,வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். [2017-06-20 22:18:57]


28 ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னைநாள் இயக்குனரும்....

19-06-2017 அன்று தனது குருத்துவ வாழ்வில் 28 ஆண்டுகளை நிறைவு செய்யும், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் முன்னைநாள் இயக்குனரும், தற்போதைய யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனருமான அருட்பணி.அந்தோனி பெர்ணாண்டோ பெனற் அவர்களின் பணிவாழ்வுக்காக ஆண்டவர் இயேசுவிற்கு நன்றி கூறுவதோடு, அவரது பணிவாழ்வு மேலும் சிறக்க, எமது வாழ்த்துகளை செபங்களுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். [2017-06-20 22:10:25]


ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 40 சிறார்களுக்கு முதல் நன்மை

மன்னார் மறைமாவட்டத்தின் நானாட்டான் பங்கு தூய .ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 40 சிறார்களுக்கு 18.06.2017 அன்று முதல் நன்மை திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டது . இதனை அருட்தந்தை. அருள்ராஜ் அடிகளார் முன்னின்று வழிநடத்தினார். [2017-06-20 21:17:13]


மன்னார் மறைமாவட்ட குரு வண பிதா முரளி அடிகளார் தனது மேற்படிப்பிற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம்.

மன்னார் மறைமாவட்ட குரு வண பிதா முரளி அடிகளார் தனது மேற்படிப்பிற்காக இத்தாலி நாட்டிற்கு பயணம். மன்னார் மறைமாவட்ட குரு வண பிதா முரளி அடிகளார் தனது மேற்படிப்பிற்காக நேற்றைய தினம் இலங்கையில் இருந்து புறப்பட்டு இன்று இத்தாலிநாட்டின் தலைநகரான ரோமிற்கு சென்றடைந்துள்ளார். வண பிதா முரளி அடிகளார் மன்னார் மறைமாவட்டத்தில் தனது ஆன்மிக பணியுடன் இறுதி யுத்த வேளையில் மக்களுடன் மக்களாக களத்தில் நின்று மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வந்த ஒரு உன்னதமான குரு. வண பிதா முரளி அடிகளார் ஆயர் அவர்களின் செயலாளராக இருந்த காலத்தில் ஆயர் இல்ல செயற்பாடுகள், பொது பணிகள், ஆன்மிக காரியங்களின் தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு உன்னதமான குரு. அவர் தனது பணி வாழ்வில் பல சவால்களுக்கு மத்தியிலும் தன்னை அர்ப்பணித்து தனது மேற்படிப்பிற்காக நேற்றைய தினம் ரோம் திருபீடத்தை சென்றடைந்துள்ளார். அருட்தந்தை அவர்களை நேற்றைய தினம் குருக்கள், கத்தோலிக்க ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இனைந்து வழிஅனுப்பி வைத்துள்ள நிலையில் தந்தை அவர்களின் பணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், கத்தோலிக்க ஒன்றியம், கத்தோலிக்க இறைமக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம். இதே வேளை தந்தை மேற்கொள்ளவிருக்கும் மேற்படிப்புக்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையவும், வரும் எல்லா இடையுறுகளையும் ஆசீர்வாதமாக மாற்றவும், எங்கு சென்றாலும் உடல் நல ஆரோக்கியத்துடன் தனது பணியை முன்னெடுக்கவும் இறையாசீர் கூறி வாழ்த்தி நிற்கின்றோம். [2017-06-17 15:46:18]


திருகோணமலை மறைமாவட்ட பேராலய பங்கின் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

திருகோணமலை மறைமாவட்ட பேராலய பங்கின் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மற்றும் நவநாள் நிகழ்வுகள் எதிர்வரும் ‎09-06-2017-வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது . . .
தொடர்ந்து தினமும் மாலை 5.30மணிக்கு திருச்செபமாலையும் 6மணிக்கு நவநாள் திருப்பலி ஆராதனையும் இடம்பெறும் . . .
இந் நவநாட்களில் தினமும், பரிசுத்த வேதாகமம்,, மற்றும் புனிதர்களின் நூல்களிலிருந்து பின்வரும் பல்வேறு தலைப்புக்களில் . .
1. 'இதுவே தகுந்த காலம் ! இன்றே மீட்பு நாள் " .
2. ""வாழ்நாளில் செய்ய முடியாததை மரணப்படுக்கையிலும் செய்ய முடியாது "
3. "என் அன்பில் நிலைத்திருங்கள் " . .
4. " நீங்கள் மிகுந்த கனி தந்து என சீடராய் இருப்பீர்கள் "
5. " நீங்கள் துயறுருவீர்கள் ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் "
6. "அறுவடை மிகுதி , வேலையாட்களோ குறைவு"
7. "விண்ணரசு நெருங்கி விட்டது "
8. "எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"
9. " வாழ்வு தரும் உணவு நானே" ,,எனும் கருத்துக்களை மையப்படுத்தி முறையே . . . அருட்தந்தைகளான....!
"S. மதுராங்கன் குருஸ் " "S.R.ஜெயரெத்தினம்" 'ஜூட் சர்வாணந்தன் " "J.டன்ஸ்ரன் " "B.ஜெயபாலன் O M l " "S S.ஜோன்பிள்ளை " "B.றொபின்சன் போல் " "S.சுகுணேந்திரன் குருஸ் " "ஜோர்ச் திசாநாயக்க " ஆகியோர்களினால் சிறப்பு அருளுரைகளும் நிகழ்த்தப்படும் . . .
‎17-06-2017 சனிக்கிழமை மாலை 5.30மணிக்கு நற்கருணை ஆராதனையும் ஆசீரும் இடம்பெற்று தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனி வழமையான பாதைகளினூடாக இடம்பெறும் . . இப் பவனியில் கலந்த கொள்பவர்கள் தூய வென்னிற ஆடை அனிந்திருத்தல் நன்று . என அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றீர்கள் . .
இறுதி நாள் நிகழ்வுகளான கொடி இறக்கம் கூட்டுத்திருப்பலி நிகழ்வுகள் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கிறிஸ்டி நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படும் . . . .
அனைவரும் வருக " புனிதரின் ஆசி பெறுக . " என அன்புடன் அழைக்கின்றனர் . . அருட் தந்தை ஜூட் ஜோன்சன் அடிகளார் மற்றும் பங்கு மக்கள். . . [2017-06-06 19:58:15]


புனித அந்தோனியார் ஆசீர் பெற அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்

யாழ் மறைமாவட்ட கிளிநொச்சி குமிழமுனை நாச்சிக்குடா புனித அந்தோனியார் ஆலய பங்குத்திருத்தல முதல் நாள் ஆயத்த வழிபாடு கொடியேற்றத்துடன் இன்று 06/06/2017 ஆரம்பமாகியது. திருவிழாதிருப்பலி 13/06/2017 அன்று 6.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனிதரின் ஆசீர் பெற அனைவரையும் அழைத்து நிற்கின்றோம் [2017-06-06 19:53:12]


இன்று மட்/வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இறையாவி பெருவிழா

இன்று மட்/வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இறையாவி பெருவிழா திருப்பலி முடிவில் பங்கு மேய்ப்புபணி சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் வாக்குத்தத்த நிகழ்வு இடம்பெற்றது. இவர்கள் தங்கள் பங்கு சமுகத்திற்கும், மறைமாவட்டத்திற்கும் பங்களிப்பை சிறந்தமுறையில் ஆற்ற இறைவன் என்றும் துணை நிற்க வேண்டி அன்னைமரி மகனை நோக்கி செபத்தினில் வேண்டி நிற்போம். [2017-06-04 18:43:08]


குரு அருட்பணி. அரசரெட்ணம் அடிகளார் 3.06.2017 இறைவனடி சேர்ந்தார்

மட்டக்களப்பு மண்ணில் அரசப்பா என அன்பாக அழைக்கப்படும் மட்டக்களப்பு மறைமாவட்ட குரு அருட்பணி. அரசரெட்ணம் அடிகளார் 3.06.2017 இறைவனடி சேர்ந்தார். அடிகளாரின் ஆன்ம இளைப்பாற்றி வேண்டி செபிக்கின்றோம் [2017-06-04 18:42:22]


குருக்களுக்கான மாதாந்த தியானம்

திருகோணமலை மறை மாவட்டத்தை சேர்ந்த குருக்களுக்கான மாதாந்த தியானம் உப்பு வெளியில் அமைந்துள்ள கத்தோலிக்க மேய்ப்புப்பணி மையத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த சகோதரர். கிறிஸ்துதாஸ் அவர்கள் இதனை வெளிப்படுத்தினார். நற்கருணை ஆசீருடன் இத்தியானம் இனிதே நிறைவு பெற்றது. [2017-06-02 00:28:49]பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்