வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)
யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் திருத்தலங்களை நோக்கிய புனித யாத்திரை - 2017

ஆண்டவர் இயேசு தனது அன்னையாகிய பரிசுத்த கன்னி மரியாளை பத்திமாவிற்கு அனுப்பி உலகிற்கு தனது நற்செய்தியை அறிவித்து, 100 ஆண்டுகள் பூர்த்தியாகும் இந்த ஆண்டில், ஆண்டவர் இயேசுவின் ஆசீரையும் அன்னை மரியாளின் பரிந்துரைகளையும் பெறும் படி, யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியம் திரு யாத்திரைகளை ஏற்பாடு செய்துள்ளது. கேவலார் அன்னையின் திருவிழாவிற்கு அடுத்த வாரம், இவ் திரு யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை ஒக்டோபர் மாத இறுதியில் ஆண்டவர் இயேசு பிறந்து, வாழ்ந்து, எமக்கு மீட்பை பெற்றுத் தந்த இஸ்ராயேல் தேசத்தை நோக்கிய பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் இரு புனித யாத்திரைகளிலும், யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனர் அருட்பணி.நிரூபன் தார்சீசியஸ் அவர்களும் கலந்து எல்லா புனித தலங்களிலும் வழிபாடுகளை நெறிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. [2017-06-16]


பணியகத்தின் புதிய மலர்கள்

அன்புநிறை பெற்றோரே! பெரியோரே!
இவ்வாண்டு முதன்நன்மை பெற்ற உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் போன்றோரின் நிழற்படங்கள் தொடுவானம் பத்திரிகையில், "பணியகத்தின் புதிய மலர்கள்" பகுதியில் வெளி வர வேண்டுமென்று விரும்பினால் இன்றே அனுப்பி வையுங்கள். இன்னும் ஒரு சில இடங்களே உள்ளன. உடனேயே அனுப்பி வையுங்கள். இதற்காக எந்தக் கட்டணமும் அறவிடப்படுவதில்லை. [2017-06-16]


தூய ஆவி திருவிழிப்பு ஆராதனைத் திருவிழா - 03-06-2017

ஆண்டவர் இயேசு வாக்களித்தபடி, தமது சீடர்களுக்கு தூய ஆவியின் அபிசேகத்தை அளித்த அதே பெந்தகோஸ்தே நாளில், தூய ஆவியின் அபிசேகத்திற்காக, முழு இரவு ஆராதனைப் பெருவிழாவை யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இவ் முழு இரவு ஆராதனைப் பெருவிழா வூப்பெற்றால் நகரில் 03-06-2017 அன்று இரவு 20.00 மணிமுதல் காலை 5.30 மணிவரை நடைபெறவுள்ளது. [2017-05-01]


கானக அன்னையின் திருவிழா

கானக அன்னையின் திருவிழா இம்முறை 28.05.2017(ஞாயிற்றுக்கிழமை)அன்று நடைபெறவுள்ளது. போர்க் காலத்தில் யேர்மன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிய கானக அன்னை ஊடாக, இன்று மறுவாழ்வுக் காக ஏங்கும் நம் மக்களுக்கு வழி காட்ட இறைவனிடம் வேண்ட ஒன்று கூடுவோம். [2017-04-17]


முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் புனித அந்தோனியார் திருவிழா

வருடந்தோறும் ஆனி மாதத்தில் முன்சங்கிளட்பாக், முன்ஸ்ரர் மற்றும் ஆலன் நகரங்களில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா இவ் முறையும் வழமைபோல் நடைபெறவுள்ளது. அதன் பிரகாரம் 17.06.2017 அன்று முன்சங்கிளட்பாக் நகரிலும் 13.06.2017 அன்று முன்ஸ்ரர் நகரிலும் 24.06.2017 அன்று ஆலன் நகரிலும் நடைபெறவுள்ளது. [2017-04-18]


புனித வார வழிபாட்டு நிரல் - 2017

வழமை போலவே யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் புனித வார வழிபாடுகளை, யேர்மனியின் அநேக பணித்தளங்களில் ஏற்பாடு செய்துள்ளது. இவ் வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெறுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
[2017-04-01]


2016 ஆம் ஆண்டுக்கான மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டியில் பரிசில்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறுவோர் விபரம்.

எமது இணையத்தளத்தில் சென்ற ஆண்டு நாடாத்தப்பட்ட மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டிக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்ற ஆண்டு உலகளாவிய ரீதியில் மொத்தமாக 965 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் 18 பேர் 100% புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். போட்டி விதிமுறைகளின் படி இவர்களில் மூவர் குழுக்கல் முறையில் வெற்றியாளர்களாக 18.03.2017 அன்று நடைபெற்ற பணியக நிர்வாகிகளுக்கான ஒன்று கூடலில் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசில்களும் பாராட்டு சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன. இவர்களின் விபரங்கள் வருமாறு. [2017-03-26]


எசன் மாநகரில் அருட்பணி.ஜோசப் விக்ரரின் நெறிப்படுத்தலில் இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும் - 17-04-2017

தெய்வீக குண்மளிக்கும் இயேசு சபை இயக்குனரும் அத் துறவுற சபையின் நிறுவுனருமான அருட்பணி.ஜோசப் விக்ரர் அவர்களின் நெறிப்படுத்தலில் எசன் மாநகரில் 17-04-2017 அன்று மதியம் 12:00 மணிக்கு இறைத்தியானவழிபாடும் நற்கருணை ஆராதனையும் நடைபெறவுள்ளது. இவ் வழிபாட்டில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரைப் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். [2017-03-25]


நெவிகஸ் தவக்கால திருயாத்திரை -2017 சிலுவைப் பாதையும் குருத்தோலை ஞாயிறு வழிபாடும்

யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் நெவிகஸ் தவக்கால யாத்திரை வழமைபோல இம்முறையும் 09.04.2017 அன்று நடைபெறும். தவக்காலத்தின் புனித வாரத்தை ஆரம்பிக்கும் இந்நாளில், இப் புனித யாத்திரையில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம். [2017-03-24]


அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரின் குருத்துவப் பொன் விழா 25-02-2017

யாழ் மறைமாவட்டத்தின் முன்னை நாள் குரு முதல்வரும் மூத்த குருவானவருமான அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரின் குருத்துவப் பொன் விழா எதிர்வரும் 25.02.2017 அன்று நன்றித் திருப்பலியுடன் சிறப்பாகக் கொண்டாட யேர்மன் தமிழ் கத்தோலிக்க பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். [2017-02-10]


கேவலார் அன்னையின் திருப்பதியில் கிறிஸ்து பிறப்பு திருவிழா திருப்பலி

கேவலார் அன்னையின் திருப்பதியில் நத்தார் திருப்பலி 25.12.2016 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆண்டவர் இயேசுவின் பிறப்பு திருவிழாவை கேவலார் பதியில் கொண்டாட உங்களை அன்போடு அழைக்கின்றோம்.


[2016-12-17]