இன்றைய புனிதர் பகுதியை தொகுத்து வழங்குபவர்
அருள்திரு. மை. அடைக்கலம் டொனால்டு
கும்பகோணம் மறைமாவட்டம்
தமிழகம், இந்தியா

என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள்.
(லூக்கா 22:30)


இன்றைய புனிதர்

2017-08-18

புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ குருசாகா (St. Luis Alberto Hurtado Cruchaga, Jesuit)

சேசு சபை குரு


பிறப்பு
22 ஜனவரி 1901
சிலி (Chile)

இறப்பு
18 ஆகஸ்டு 1952
சிலி (Chile)

முத்திபேறுபட்டம்: 16 அக்டோபர் 1994 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்

புனிதர்பட்டம்: 23 அக்டோபர் 2005 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

தந்தை: ஆல்பர்ட் ஹூர்டாடோ லரைன் (Alberto Hurtado Larrain)
தாய்: அன்னா குருசாகா டி ஹூர்டாடோ(Ana Cruchaga de Hurtado)
சகோதரன்: மிகுவேல்(Miguel)


இவர் மிகவும் வறுமையான ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். தங்குவதற்கென்று சிறிய வீடுகூட இல்லாமல், எந்தவித அடிப்படை வசதியுமே இல்லாமல் வாழ்ந்தார். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமையில் வளர்ந்தார். இதனைக்கண்ட இயேசு சபை குரு ஒருவர். இவரின் குடும்பத்திற்கு உதவி செய்தார். அக்குருவின் உதவியினால் ஆல்பர்ட் கல்வி பயின்றார். அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வளர்ந்த ஆல்பர்ட் தினமும் திருப்பலியில் பங்கெடுத்தார். தனது பங்குத் தந்தையின் வழிநடத்துதலின்படி, தன் வாழ்வை அமைத்தார். தான் ஓர் குருவாக வேண்டுமென்ற ஆசையை பங்குத்தந்தையிடம் தெரிவித்தார். அவரையே தன் ஆன்மகுருவாகவும் தேர்ந்தெடுத்தார். தான் படிக்கும்போதும் விடுமுறை நாட்களிலும் தன் ஊரை சுற்றியுள்ள குடிசைகளையும் சந்தித்து, மக்களை தேற்றியும் ஆறுதல்படுத்தியும் வந்தார்.

இவர் 1920 ஆம் ஆண்டு படைவீரராக சேர்ந்தார். 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தபின் மீண்டும் கல்லூரியில் சென்று படித்தார். தன் படிப்பை முடித்தபின் இயேசு சபையில் சேர்ந்தார். இயேசு சபையில் பயிற்சியை முடித்தபின் 1933 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்று குருவானார். குருவான பிறகு சாண்டியாகோ என்ற நகரில், கல்லூரியில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கு அவர் ஆசிரியர் பணியை ஆற்றியதோடு பல ஏழைமாணவர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களின் வீடுகளை சந்தித்து, வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். பின்னர், "எல் ஹோகார் டே கிறிஸ்டோ” (L Hogar de Christo) என்ற பெயரில் ஆதரவாளர்களுக்கு ஒரு கருணை இல்லம் தொடங்கினார்.

எப்போதும் அவர் சமூக சிந்தனைகளை கொண்டு செயல்பட்டார். சமுதாயத்தை பற்றியும், ஏழைகளை பற்றியும் சில நூல்களை எழுதியுள்ளார். ஏழைகளின் நண்பரான ஆல்பர்ட் புற்றுநோயால் தாக்கப்பட்டு காலமானார். நோயால் தாக்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும்வரை பொறுமையோடும், மகிழ்வோடும் தன் நோயை ஏற்றுக்கொண்டார். இவர் இறந்தாலும் ஏழைகளின் மனங்களில் உயிருடன் வாழ்ந்தார்.


செபம்:

ஏழைகளின் நண்பனே! யாம் வாழும் இவ்வுலகில் எங்களைவிட எத்தனையோ பேர் சொத்து, சுகமின்றி, தேவையான அடிப்படை வசதியின்றி வாழ்கின்றனர். ஏழை மக்களை எங்களின் நண்பர்களாக ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, வழிகாட்டிட, உம் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்


அகாப்பிட்டஸ் Agapitus von Praeneste

மறைசாட்சி

பிறப்பு: 255/260 பிரேனெஸ்ட் Praeneste, உரோம், இத்தாலி
இறப்பு: 270/275 பிரேனெஸ்ட் (15 வயது). அவுரேலியன் என்ற அரசனால் கொல்லப்பட்டார்
பாதுகாவல்: நோயுற்ற குழந்தைகள், பிரசவ தாய்மார்கள்


ஃப்லோரஸ் மற்றும் லவ்ரஸ் இரட்டையர் சகோதரர்கள்

மறைசாட்சியர்

பிறப்பு: 2 ஆம் நூற்றாண்டு(?), பைசாண்ட்ஸ் Byzanz (இன்றைய துருக்கி)
இறப்பு: 2 ஆம் நூற்றாண்டு(?),இல்லிரிக்கம் Illyricum (இன்றைய போஸ்னியா)
பாதுகாவல்: வீட்டுவிலங்குகள்


ஹெலனா Helena

அரசி

பிறப்பு: 255, பிட்டைனியா Bithynien (இன்றைய துருக்கி)
இறப்பு: 18 ஆகஸ்டு 330, நிக்கோடேமியா, இஸ்மித் Izmid (இன்றைய துருக்கி)
பாதுகாவல்: பிராங்க்ஃபர்ட், ட்ரியர்