இறைவார்த்தை

தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலாத்தியர் 5:22-23)

இறைவார்த்தை

நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்
(மத்தேயு 16:18-19)

     திருச்சபை

இறைத்திட்டத்தில் திருச்சபை

உட்புகுமுன்

கிறிஸ்து அறிவித்த நற்செய்தியின் அடிப்படையில் திருச்சபையின் வாழ்விலே மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும், அதன் விளைவாகக் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமையை வளர்த்து, உலகோடு நெருங்கிய உரையாடல் நடத்த வேண்டும் என்பதே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நோக்கம். இந்நோக்கம் நிறைவேற, முதன் முதலில் திருச்சபை தன்னிடம் தன் தலைவர் கிறிஸ்து காண விழையும் உண்மைச் சாயல் எது என உய்த்து உணர வேண்டும். அவர் தன்னிடம் ஒப்படைத்த பணியையும் தற்கால உலகில் தனது பொறுப்பையும் ஆய்ந்து அறிய வேண்டும். ஆகவேதான் திருச்சபையின் தன்மையையும் பொறுப்பையும் பற்றி தூய ஆவியின் துணையோடு சங்கத்தந்தையர் விவாதித்து உணர்ந்து வெளியிட்ட 'திருச்சபை பற்றிய கோட்பாடு விளக்கம்' சங்க ஏடுகளிலே முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது; ஏனைய ஏடுகளுக்கு மூலமும் அடிப்படையுமாக அமைகின்றது.
காலத்திற்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பிக்கும் திருச்சபையின் பெருமுயற்சியில் ஒரு தீர்வான கட்டத்தைக் குறிக்கின்றது இவ்வேடு. வரலாற்றைப் பொறுத்த அளவில் ''சீர்திருத்தப்'' புரட்சிக்கு எதிர்ப்புரட்சி செய்த காலம்மாறி கிறிஸ்தவ ஒன்றிப்பின் காலம் தொடங்குதைக் காண்கிறோம் இவ்வேட்டில். கோட்பாட்டு விளக்கம் என்ற போதிலும் அருள் பணி சார்ந்த நோக்குடன் கிறிஸ்தவ உண்மைகள் ஆராயப்படுகின்றன. விவிலியக் கண்ணோட்டத்துடன், மீட்பின் வரலாற்றின் அடிப்படையில் அய்வதால், கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, அவரைத் தழுவி நின்று, அவருடைய இரண்டாவது வருகையை எதிர்நோக்கிப் பயணம் செல்லும் தன் உண்மை நிலையைத் திருச்சபை உணர்ந்து எடுத்துரைக்கிறது இவ்வேட்டில்.

ஏட்டின் வரலாறு

வத்திக்கான் சங்கத்தின் வேறு எந்த ஏட்டையும்விட அதிக அளவில் திருத்தம் பெற்று உருவாகிய ஏடு இது. இறையியல் குழு தயாரித்த முதல் விவாதக் கோப்பு முதல் அமர்வின் இறுதியில் (டிசம்பர் 1962) விவாதிக்கப்பட்டது. ''சீர்திருத்தப்'' புரட்சியின் எதிர்ப் புரட்சி விவாதங்களில் உருவான திருச்சபையின் தோற்றமே அதில் காணப்பட்டது. திருச்சபையின் வெளி அமைப்பின் அம்சங்களுக்கும் ஆட்சி அமைப்பிற்குமே அதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. விவிலியத்தின், வரலாற்றின் அடிப்படையில் திருச்சபையின் புதியதொரு தோற்றத்தைக் காண விழைந்தனர் தந்தையர். ஆகவே, இறையியல் பணிக்குழு புதிய விவாதக் கோப்பு ஒன்றைத் தயாரித்தது. இரண்டாம் அமர்வில் விவாதிக்கப்பட்ட இவ்வேடு முதல் 5 இயல்களை கொண்டிருந்தது. ஏனைய 3 இயல்களும் பின்னால் சேர்க்கப்பட்டவை. இரண்டாம் அமர்வின் (1963) விவாதத்தின் அடிப்படையில் பல திருத்தங்களைப் பெற்று இது மாற்றி அமைக்கப்பட்டது. மூன்றாம் அமர்வில் இன்னும் பல திருத்தங்களுடன் இக்கோட்பாட்டு விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1964 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் 5 தந்தையர் மட்டுமே எதிர்த்து வாக்களிக்க, 2151 பேரின் ஆதரவைப் பெற்று இவ்வேடு பிரகடனப்படுத்தப்பட்டது.

ஏட்டின் அமைப்பு

முதல் இரண்டு இயல்கள் திருச்சபை முழுவதன் தன்மையை எடுத்துரைக்கின்றன. திருச்சபை ஒரு மறைபொருள் (இ.1). அதாவது, கிறிஸ்துவில் தூய ஆவியின் மூலம் மக்களோடு கடவுள் கொண்டுள்ள உறவை வெளிக்காட்டி, ''இறைவனோடு உள்ள நெருங்கிய ஒன்றிப்பிற்கும், மனித குலம் முழுவதன் ஒற்றுமைக்குமான அடையாளமும் கருவியுமாக''இ அருளடையாளமாக விளங்குகிறது இத்திருச்சபை. தனி மனிதர் என்ற முறையில் அல்ல, மாறாக ஒரு குழுவாகவே உலகம் மீட்படைய வேண்டும் என்பது கடவுளின் திட்டம். ஆகவே, தம்மை நம்பிக்கையால் ஏற்றுக்கொண்டு தூய வாழ்வால் பணிபுரியும் ஒரு குழுவாகத் தம் மக்களை ஒன்றுசேர்த்தார் கடவுள். எனவே, திருச்சபை கடவுளின் புதிய, தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் (இ.2).
கடவுளின் மக்களாகிய திருச்சபை தனது அமைப்பிலே திருச்சபை ஆட்சியாளர், பொதுநிலையினர் எனும் இரு நிலைகளைக் கொண்டதாய்க் காணப்பெறுகின்றது. கடவுளின் மக்கள் தங்கள் அழைத்தலைத் தக்கமுறையில் நிறைவேற்றும் பொருட்டு அவர்களை வழிநடத்திச் செல்ல கிறிஸ்துவின் ஆணையினால் நியமிக்கப்பெற்றவர்களே இத்திருச்சபை ஆட்சியாளர் (இ.3). திருச்சபை ஆட்சியாளரைப் பற்றிய இரண்டு முக்கியமான உண்மைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. முதலாவது: ஆயரின் திருநிலைப்பாடு ஓர் அருளடையாளம்; ஆகவே, திருநிலைப்பாட்டின் வழியாக திருப்பணி நிலையின் முழுமையை ஆயர் பெற்று தலைமைத் திருப்பணியாளராகத் திகழ்கிறார். இரண்டாவது: தலைமைத் திருப்பணியாளர்களாகத் திகழும் ஆயர்கள் திருத்தந்தையின் தலைமையில் அனைத்துலகத் திருச்சபையை ஆண்டு வழிநடத்தும் பொறுப்பை ஏற்கும் ஆயர் குழுவாக அமைகின்றனர். அடுத்த இயல் பொதுநிலையினரைப் பற்றியது (இ.4). இவர்கள் திருமுழுக்கின்மூலம் திருச்சபையின் நிறைவாழ்வுப் பணியிலே பங்கு பெறுகின்றனர். உலகக் காரியங்களிலே ஈடுபட்டு, கடவுளின் திட்டத்திற்கேற்ப அவைகளைச் சீர்ப்படுத்தி, இறையாட்சியை என்றும் நாடி நிற்பதே இவர்களின் தனிப்பட்ட அழைத்தல்.
திருச்சபையின் வாழ்வு அதன் தூய்மையில் அடங்கி இருக்கின்றது. கிறிஸ்துவோடு ஒன்றித்துத் தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருச்சபை தன்னிலே தவறாத முறையில் தூய்மையானது. ஆகவே, திருப்பணியாளர்கள், துறவிகள் மட்டுமன்று, கடவுளின் மக்களாகிய நம்பிக்கை கொண்டோர் எல்லாரும் தூய நிலைக்கு அழைக்கப்படுகின்றனர் (இ.5). வாழ்க்கையின் எல்லாவிதச் சூழ்நிலைகளையும் கடமைகளையும் நம்பிக்கை கொண்டோர் எல்லாரும் கடவுளிடமிருந்து இனிய முறையில் ஏற்று, அவருடன் ஒத்துழைத்து, தங்களுடைய நல்வாழ்வால் கடவுளின் அன்பை உலகிற்கு எடுத்துரைப்பதன்மூலம் இதே சூழ்நிலைகளின் மத்தியில் நாளுக்குநாள் தங்கள் தூயநிலையில் வளம்பெறுவர். ஆண்டவரின் தனிப்பட்ட அழைத்தலை ஏற்று, இதே தூய நிலைக்குச் சிறந்த சான்றாக நிற்பவர்களே துறவிகள் (இ.6). இவர்கள் நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாக ஏற்று, துறவற நேர்ச்சைப்பாடுகளினால் தங்களை முற்றிலும் கடவுளுக்கு உரிமையாக்குகின்றனர்.
இத்திருச்சபை, ஆண்டவராகிய கிறிஸ்துவின் இரண்டாவது வருகயை எதிர்நோக்கிப் பயணம் செல்லுகிறது (இ.7). ஆகவே, விண்ணுலக மாட்சியில் மட்டுமே அது தனது முழு நிறைவைப் பெறும். எனினும், விண்ணுலக மாட்சியில் இருப்பவர்களோடும், சாவுக்குப்பின் இன்னும் தூய்மைப்படுத்தப் பெறும் நம் சகோதரர் சகோதரிகளோடும் நாம்ஒரே குடும்பம் போல் ஒன்றிக்கின்றோம்.
திருச்சiபியன் வாழ்விற்கும் து{ய நிலைக்கும் குறிக்கோளுக்கும் மாதிரியாக விளங்கும் கன்னிமரியாவைப் பற்றியது இறுதிய இயல் (இ.8). இவர் கிறிஸ்துவின் மீட்பு அலுவலிலே, மீட்பரின் தாய் என்ற முறையில் தனிப்பட்ட பங்கு வகிக்கின்றார். நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் அன்போடும் தம் மகனோடு ஒத்துழைத்ததின் மூலம் இவர் திருச்சபையின மாதிரியாகவும் தனிப்பெரும் அடையாளமாகவும் இலங்குகின்றார். எனவே கன்னிமரியாவுக்கு நாம் செலுத்தும் உண்மைவணக்கம் நம்மை மூவொரு கடவுளின் மாட்சிக்கே இட்டுச் செல்கின்றது.
இவ்வாறு, திருச்சபை தன் தன்மையை நன்கு உணர்வதால், கிறிஸ்துவோது தான் கொண்டுள்ள உறவைத் தெளிவாகக் காண்கிறது. முதன்முதலாக, திருச்சபை தூய ஆவியின் வழி, கிறிஸ்து அளிக்கும் ஓர் அருள் வரமாகத் திகழ்கின்றது; அடுத்து, அது காணக்கூடிய நிறுவனமாகவும் காட்சியளிக்கின்றது. கிறிஸ்துவின் இந்த அருள் மக்களனைவரையும் தூய நிலை அடைய அழைக்கின்றது. இங்குதான் பொதுநிலையினரின் உண்மைநிலை என்ன என்பது பற்றிய திரச்சங்கத்தின் புதிய வளம்செறிந்த கருத்துகளை நாம் காண்கிறோம் (இ.4). அதாவது பொதுநிலையினர் ஒரு திருப்பணிநிலையினராகத்தேர்ந்து கொள்ளப் பெற்று, கிறிஸ்துவின் திருப்பணி, அரச, இறைவாக்கு உரைக்கும் அலவல்களிலே பங்கு பெறுகின்றனர். ஆகவே, பற்பல கடமைகளும் பொறுப்புகளும் அவர்களைச் சார்கின்றன (அ2,5). கடவுளின் மக்களைச் சார்ந்த இவ்வடிப்படைப் பொறுப்பை ஒட்டியே திருச்சபை ஆட்சியாளர், துறவியர் ஆகியவர்களின் கடமைகளை ஆராயப்படுகின்றன.
ஆகவே, திருச்சபை அதன் வெளி அமைப்பின் பொருட்டு ஏற்பட்டதல்ல் மாறாக, திருச்சபையின் வெளி அமைப்பு, அதன் ஒவ்வொரு உறுப்பினரும் ஆவியாரில் நிறைந்த இறை வாழ்வுபெறத் துணைபுரியும் ஒரு கருவியாக விளங்குகின்றது.
பணி.ஏ.எம்.லூர்துசாமி, சே.ச.
கோட்பாட்டியல் பேராசிரியர்,
மார்ச் 1997
அருட்கடல், சென்னை.

 	 இறைத்திட்டத்தில் திருச்சபை பற்றி இறைஅடியாருக்கு 
      அடியார் ஆயர் பவுல் திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
 நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய கோட்பாட்டு விளக்கம்

இயல் 1

திருச்சபை கிறிஸ்துவில் ஓர் அருளடையாளமாய் உளது

1. மக்களின் ஒளி கிறிஸ்து. எனவே, தூய ஆவியில் ஒன்று கூடியிருக்கும் இத்திருச்சங்கம் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவித்து (காண் மாற் 16:15), திருச்சபையின் தோற்றத்தில் மிளிரும் கிறிஸ்துவின் ஒளியை எல்லாமனிதரிடத்திலும் ஏற்றி வைக்க மிகவும் விரும்புகிறது. கிறிஸ்துவில் இத்திருச்சபை ஓர் அருளடையாளம் போல் விளங்குகிறது: அதாவது, இறைவனோடு உள்ள நெருங்கிய ஒன்றிப்பிற்கும் மனித குலம் முழுவதன் ஒற்றுமைக்குமான அடையாளமும் கருவியுமாய் உள்ளது. எனவே, முந்திய திருச்சங்கங்களின் படிப்பினைகளைப் பின்பற்றி, தனது நம்பிக்கை கொண்டோருக்கும் அனைத்துலகிற்கும் தன் இயல்பையும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துலகப் பணியையும் தெளிவாக அறிக்கையிடத் திருச்சபை விழைகிறது. இன்று சமூக, தொழில் நுட்ப, பண்பாடடுப் பிணைப்புகளால் எல்லா மக்களும் மிகவும் இணைந்துவிட்டனர். ''கிறிஸ்துவில் இன்னும் நிறைவான ஓர் ஒன்றிபை;பை எல்லாமனிதரும் பெறுவதற்கும் இன்றையச் சூழ்நிலைகளிலே திருச்சபையின் பணி அவசரமாகத் தேவைப்படுகிறது.''

தந்தை இறைவனின் நிலையான நிறைவாழ்வுத் திட்டம்

2. என்றும் வாழும் தந்தையாகிய கடவுள் தமது ஞானத்திலும் நன்மைத் தனத்திலும் உருவானதும், கைம்மாறு கருதாததும், அறிவுக்கு எட்டாததுமான தம்முடைய திட்டத்தின்படி உலகனைத்தையும் படைத்தார். மனிதரை இறைவாழ்விலே பங்கு பெறும் நிலைக்கு உயர்த்தத் திருவுளங்கொண்டார். ஆதாமில் வீழ்ந்த அவர்களை அவர் கைவிடவில்லை. மாறாக, ''கட்புலனாகாத கடவுளின் சாயல்; படைப்புக்கெல்லாம் தலைப்பேறு'' (கொலோ 1:15) என விளங்கும் மீட்பராகிய கிறிஸ்துவை முன்னிட்டு, ஈடேற்றத்தின் வழிவகைகளை எப்பொழுதும் அவர்களுக்கு வழங்கி வந்தார். ஏனெனில் தந்தை இறைவன் யார்யாரைக் காலங்களுக்கு முன்பே தேர்ந்து கொண்டாரோ அவர்கள் எல்லாரையும் ''தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்''; (உரோ 8:29). கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் எல்லாரையும் தூயத் திருச்சபையில் ஒன்று சேர்க்க முடிவு செய்தார். உலகின் தொடக்கத்திலிருந்தே முன்னுருவாகத் துலங்கிய இத்திருச்சபை இஸ்ரேயல் குலத்தின் வரலாற்றிலும் பழைய உடன்படிக்கை மூலமாகவும் வியத்தகு முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது;1 இறுதிக் காலமாகிய இந்நாட்களில் நிறுவப்பட்டு, தூய ஆவியின் பொழிவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; காலத்தின் முடிவில் இத்திருச்சபை மாட்சியுடன் நிறைவுபெறும். அப்பொபுது திருச்சபைத் தந்தையர்கள் கூறுவதுபோல், ஆதாம் முதலான நீதிமான்கள் எல்லாரும், ''நீதிமானாகிய ஆபேல் முதல் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களில் இறுதியானவர் வரை''2 அனைத்துலகத் திருச்சபையில் தந்தையோடு ஒருங்கு கூட்டப்பெறுவர்.

தந்தை மகனிடம் ஒப்படைத்த பணி

3. ஆகவே, தந்தையால் அனுப்பப்பெற்று மகன் வந்தார்... உலகம் உருவாகுமுன்னரே அவரில் நம்மைத் தேர்ந்தெடுத்து தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள தந்தை முன்குறித்து வைத்தார். ஏனெனில் அவர் அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்க விழைந்தார். (காண் எபே 1:4-5,10). எனவே, கிறிஸ்து தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, விண்ணுலக ஆட்சியை மண்ணுலகிலே தொடங்கி வைத்து, மறைவாயிருந்த தந்தையின் திட்டத்தை நமக்கு வெளிப்படுத்தினார்; தம்முடைய கீழ்ப்படிதலால் நிறைவாழ்வையும் பெற்றுத் தந்தார். இப்பொழுது மறைபொருளாக இருக்கும் கிறிஸ்துவின் ஆட்சியாகிய திருச்சபை கடவுளின் ஆற்றலால் உலகில் காணக்கூடிய முறையில் வளர்கிறது.
சிலுவையில் தொங்கிய இயேசுவின்திறந்த விலாவிலிருந்து வழிந்தோடிய இரத்தமும் நீரும் இதன் தொடக்கத்தையும் வளர்ச்சியையும் அடையாள முறையில் காட்டுகின்றன (காண் யோவா 19:34). ''நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பதால் ஈர்த்துக் கொள்வேன்'' (யோவா 12:32 கிரேக்க மூலம்) என்று ஆண்டவர் சிலுவையில் தமக்கு நிகழவிருந்த சாவைப்பற்றிக் கூறிய சொற்கள் இவற்றை முன்னறிவிக்கின்றன. சிலுவையில் ''நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்'' (1 கொரி 5:7). இச்சிலுவைப்பலி பீடத்தில் கொண்டாடப் பெறும் பொழுதெல்லாம் நமது மீட்புப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஃதோடு கிறிஸ்துவில் ஒரெ உடலாக அமையும் நம்பிக்கை கொண்டோரின் (காண் 1 கொரி 10:17) ஒற்றுமையை நற்கருணை என்னும் அருளடையாளம் காட்டுகிறது; அதனை விளைவிக்கவும் செய்கிறது. கிறிஸ்துவோடுள்ள இந்த ஒன்றிப்பிற்கு எல்லா மனிதரும் அழைக்கப்படுகின்றனர். இக்கிறிஸ்து உலகின் ஒளி. இவரிலிருந்து நாம் வருகிறோம்; இவரால் நாம் வாழ்கிறோம்; இவரையே நாம் நாடுகிறோம்.

திருச்சபையைத் தூய்மையாக்கும் தூய ஆவியார்

4. உலகிலே செய்யுமாறு தந்தை மகனிடம் ஒப்படைத்த வேலையைச் செய்துமுடித்ததும் (காண் யோவா 17:4), திருச்சபையை எந்நாளும் தொடர்ந்து தூய்மையாக்கவும், இதனால் நம்பிக்கை கொண்டோர் எல்லோரும் கிறிஸ்துவின் வழியாக ஒரே ஆவி மூலம் தந்தையை அணுகும் பேறுபெறவும் (காண் எபே 2:18) பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவி அனுப்பப்பெற்றார். இவரே வாழ்வின் ஆவியாக, அதாவது பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வை அளிப்பவராகத்திகழ்கின்றார் (காண் யோவா 4:14; 7:38-39) - சாவுக்குரிய மனிதருடைய உடல்களைக் கிறிஸ்துவில் உயிர்பெறச் செய்யும்வரை (காண் உரோ 8:10-11), பாவத்தால் இறந்தோருக்குள் தூய ஆவியே உயிராயிருக்கும்படி தந்தை செய்கிறார்.
ஆவியார் திருச்சபையையும் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களையும் கோவிலாகக் கொண்டு குடியிருக்கிறார் (காண் 1 கொரி 3:16; 6:19); அவர்களிடமிருந்த வண்ணம் அவர் வேண்டுகிறார்; அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கின்றார் (காண் கலா 4:6; உரோ 8:15-16, 26); முழு உண்மையை நோக்கித் திருச்சபையை வழி நடத்துகிறார் (காண் யோவா 16:13); ஒன்றிப்பாலும் பணியாலும் அதில் ஒற்றுமையை விளைவிக்கிறார்; இன்னும் பலதரப்பட்ட திருச்சபை ஆட்சி சார்ந்த கொடைகளையும் அருள்கொடைகளையும் அதற்கு அளித்து அதனை வழிநடத்துகிறார்; தம் கனிகளால் அதற்கு அணிசெய்கிறார் (காண் எபே 4:11-12; 1 கொரி 12:4; கலா 5:22); நற்செய்தியின் வல்லமையால் திருச்சபை இளமைப் பொலிவோடு துலங்கச் செய்கிறோர்; என்றும் அதற்கு மறுமலர்ச்சி தருகிறார்; அதன் மணமகனான கிறிஸ்துவுடன் முழுமையாய் ஒன்றிக்கத் திருச்சபையை வழிநடத்திச் செல்கிறார்.3 ஏனெனில், 1ஆவியாரும் மணமகளும் சேர்ந்து ஆண்டவராகிய இயேசுவை நோக்கி 'வருக! வருக!' என்கின்றனர் (காண் திவெ 22:17).
இவ்வாறு அனைத்துலகத்திருச்சபை ''தந்தை, மகன், தூயஆவி ஆகியோரிடையே உள்ள ஒற்றுமையோடு ஒன்றிணைந்த ஒரு மக்கள் குலம்''4 எனத் திகழ்கிறது.

இறை ஆட்சி

5. தூய திருச்சபையின் மறைபொருள் அது உருவான விதத்திலிருந்தே தெளிவாகிறது. ஏனெனில், இறையாட்சியின் நற்செய்தியைப் பறைசாற்றி ஆண்டவர் இயேசு தம் திருச்சபையைத் தொடங்கிவைத்தார். இறையாட்சியின் இந்த வருகை பல காலங்களாக விவிலியத்திலேஉ றுதியளிக்கப்பட்டிருந்தது: ''காலம் நிறைவேறி விட்டது; இறையாட்சி நெருங்கி விட்டது'' (மாற் 1:15; காண் மத் 4:17). இந்த ஆட்சி கிறிஸ்துவின் சொல்லாலும் செயலாலும் உடன் இருப்பாலும் மக்களுக்குத் துலங்குகிறது. ஆண்டவருடைய சொல்வயலில் விதைக்கப்பட்ட விதைக்கு ஒப்பிடப்படுகிறது (மாற் 4:14): நம்பிக்கையோடு இதைக் கேட்டு கிறிஸ்துவின் சிறு மந்தையாகிய மக்கள் குழுவோடு சேர்க்கப்படீக்னறவர்களே (லூக் 12:32) இவ்வாட்சியை ஏற்றுக் கொண்டவர்கள். வயலில் விதைக்கப்பட்ட இவ்விதையும் தானாகவே முளைத்து, அறுவடைக்காலம்வரை வளர்கிறது (காண் மாற் 4:26-29). இந்த ஆட்சி உலகில் ஏற்கெனவே வந்துவிட்டது என்பதை இயேசுவின் புதுமைகள் என்பிக்கின்றன. ''நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால், இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது'' (லூக் 11:20; காண் மத் 12:28). முதன்முதலில், இறைமகனும் மானிடமகனுமான கிறிஸ்துவிலே இந்த ஆட்சி வெளிப்படுகிறது. இக்கிறிஸ்து ''தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' (மாற் 10:45)
மனிதருக்காக இயேசு சிலுவையில் துன்புற்று இறந்து, உயிர்த்தெபுந்தபின் ஆண்டவராகவும் மெசியாவாகவும் என்றென்றும் குருவாகவும் நியமிக்கப்பெற்றவராக விளங்குகிறார் (காண் தி.ப. 2:36; எபி 5:6; 7:17-21). தந்தையால் வாக்களிக்கப்பட்ட ஆவியை அவர் தம் சீடர்கள் மேல் பொழிந்தார் (காண் திப 2.33). எனவே, தன்னை நிறுவினவரின் கொடைகளால் நிரப்பப் பெற்றதும், அன்பு, மனத்தாழ்மை மற்றும்தன்னிலை மறுப்பு பற்றி அவர் தந்த கட்டளைகளை வழுவாமல் கடைப்பிடித்து வருவதுமான திருச்சபை, கிறிஸ்துவினுடையதும் கடவுளுடையதுமான ஆட்சியை அறிவித்து, எல்லாமக்களிடமும் அதைநிறுவும் பணியை ஏற்றுக்கொண்டது. இந்த ஆட்சியின் முளையாகவும், தொடக்கமாகவும் இவ்வாட்சியின் நிறைவுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது; தன் தலைவரோடு மாட்சியில் ஒன்றுசேர்தலைத் தன் திறனனைத்தையும் கொண்டு பெரிதும் விரும்பி எதிர்பார்க்கிறது.

திருச்சபைக்குப் பல்வேறு உருவகங்கள்

6. பழைய ஏற்பாட்டில் ஏற்கெனவே உருவகங்கள் வழியாக இந்த ஆட்சி வெளிப்படுத்தப் பெற்றது. இன்றும் திருச்சபையின் உள்ளியல்பு பற்பல உவமைகளால் தெளிவாகிறது. இவ்வுவமைகள் இடையரின் வாழ்விலிருந்தோ, பயிர் செய்வோர் வாழ்விலிருந்தோ எடுக்கப்பட்டவையாய் அமையலாம்; கட்டடக்கலைத் துறையிலிருந்தோ குடும்ப வாழ்விலிருந்தோ, திருமண உறுதி செய்வதிலிருந்தோ பெறப்பெற்றதாய் இருக்கலாம். இவையனைத்தும் இறைவாக்கினரின் நூல்களில் முன்னமே கூறப்பெற்றுள்ளன.
திருச்சபை ஓர் ஆட்டுக்கொட்டில். அதில் நுழைவதற்கு இன்றியமையாத ஒரே வாயில் கிறிஸ்து (யோவா 10:1-10). அதுவே மந்தை என அழைக்கப்படும் ஒரு மக்கள் குழு ஆகும். தாமே அதன் ஆயனாக இருக்கப்போவதாகக் கடவுளே முன்னறிவிததுள்ளார் (காண் எசா 40:11; எசே 34:11 தொ.). அதன் ஆடுகளை மனித ஆயர்களே கண்காணித்து வருகின்றனர். எனினும், தம்முயிரைத் தம் ஆடுகளுக்காகக் கொடுத்துவிட்ட (காண் யோவா 10:11; 1 பேது 5:4 கிறிஸ்துவே அவற்றை வழிநடத்தி, அவற்றிற்கு உணவளித்து வருகிறார்.
திருச்சபை கடவுள் பண்படுத்தும் தோட்டம், விளைநிலம் (1 கொரி 3:9). இந்த நிலத்தில்தான் குலமுதுவரைத் தன் தூய வேராகக் கொண்ட தொன்மையான ஒலிவ மரம் வளர்கிறது. இதில்தான் யூதருக்கும் பிற இனத்தாருக்கும் இடையே ஒப்புரவு நிகழ்ந்தது. இன்னும் நிகழும் (உரோ 11:13-26). திருச்சபை தேர்ந்துக் கொள்ளப்பட்ட திராட்சைச் செடியாக விண்ணக நிலக்கிழாரால் நடப்பட்டிருக்கிறது (மத் 21:33-43 ஒத்; காண் எசா 5:1 தொ.). உண்மையான திராட்சைச் செடி கிறிஸ்து; கொடிகளாகிய நமக்கு வாழ்வும் வளமையும் வழங்குபவர் அவரே. நாம் திருச்சபை வழியாக அவரில் நிலைத்திருக்கிறோம். அவரின்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது (யோவா 15:1-5).
திருச்சபை கடவுளின் கட்டடம் என்றும் பன்முறை கூறப்பட்டிருக்கிறது (1 கொரி 3:9). கட்டுவோரால் புறக்கணிக்கப்பட்டிருப்பினும், மூலைக்கல்லாக அமைந்துவிட்ட ஒரு கல்லுக்கு ஆண்டவர் தம்மை ஒப்பிட்டிருக்கிறர் (மத் 21:42 ஒத்; 1 பேது 2:7; திபா 117:22). இந்த அடித்தளத்தின் மீதுதான் திருத்தூதர்களால் திருச்சபை கட்டி எழுப்பப்பட்டுள்ளது (காண் 1 கொரி 3:11). இந்த அடிப்படையிலிருந்துதான் திருச்சபையும் ஊன்றி நிற்கும் உறுதியையும் நிலைபெறும் தன்மையையும் பெற்றுள்ளது. இக்கட்டடம் கீழ்வரும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பெறுகிறது: கடவுளின் வீடு, அதாவது அவர்தம் வீட்டார் வாழும் இடம் (1 திமோ 3:15); தூய ஆவி வழியாகக் கட்டப்பட்டு வரும் கடவுளின் உறைவிடம் (எபே 2:19-22); மனிதர் நடுவே கடவுள் குடியிருக்கும் உறைவிடம் (திவெ 21:3); இன்னும் சிறப்பாகத் திருக்கோவில்; கற்களால் கட்டப்பட்ட கோவில்களும் இத்திருக்கோவிலையையே அடையாள முறையில் காட்டுகின்றன என்று திருச்சபை தந்தையர்கள் புகழ்ந்துரைத்துள்ளனர். திருவழிபாடும் இதையே திருநகரத்திற்கும் புதிய எருசேலமிற்கும்5 பொருத்தமாக ஒப்பிடுகிறது. ஏனெனில், இதன் உயிருள்ள கற்களாக இவ்வுலகில் நாம் கட்டி எழுப்பப்படுகின்றோம் (காண் 1 பேது 2:5). தன் மணமகனுக்காக அணி செய்யப்பட்ட மணமகளைப்போல (திவெ 21:1-2). உலகம் புதுக்கோலம் பூணும் காலத்திலே, வானகம் விட்டு, கடவுளிடமிருந்து இறங்கிவரும் திருநகரமென்று யோவானும் இதையே கருதுகின்றார்.
மேலும், திருச்சபை ''விண்ணக எருசலேம்'' என்றும் ''நமக்கு அன்னை'' என்றும் அழைக்கப்பெறுகிறது (கலா 4:26; காண் திவெ 12:17); மாசற்ற ஆட்டுக்குட்டியின் மறவற்ற மணமகளாகவும் உருவகிக்கப் பெறுகிறது (திவெ 19:7; 21:2, 9; 22:17). கிறிஸ்து ''திருச்சபைக்கு அன்பு செய்து ... அதை ... தூயதாக்குவதற்குத் தம்மையே ஒப்புவித்தார்'' (எபே 5:25-26). மீற முடியாத ஓர் உடன்படிக்கையால் அதைத் தம்மோடு இணைத்திருக்கிறார்; இடைவிடாது ''திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார்'' (எபே 5:29); அது தூய்மைப்படுத்தப் பெற்ற பிறகு அதைத் தம்மோடு இணைக்கவும் தம்முடைய அன்பிலும் நம்பிக்கையிலும் அது பணிந்திருக்கவும் விரும்பினார் (காண் எபே 5:24); இறுதியாக, கடவுளும், தாமும் நம்மேல் கொண்ட அறிவுக்கு எட்டாத அன்பை நாம் அறிந்து கொள்ள வேண்டி, திருச்சபையைத் தம் விண்ணுலகக் கொடைகளால் என்றென்றைக்கும் நிரப்பியுள்ளார் (காண் எபே 3:19). திருச்சபை ஆண்டவரிடமிருந்து அகன்று இம்மண்ணுலகில் பயணம் போகும் வேளையில் (காண் 2 கொரி 5:6) வேற்று நாட்டில் தான் வாழ்வதாகவே கருதுகிறது. எனவேதான், கடவுளின் வலப் பக்கத்திலே கிறிஸ்து அமர்ந்திருக்pன்ற மேலுலகு சார்ந்தவற்றை அது நாடவும் அவைபற்றி எண்ணவும் செய்கிறது. அங்கு தன் மணவாளனோடு மாட்சியில் தோன்றும் வரை திருச்சபையின் வாழ்வு கிறிஸ்துவோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது (காண் கொலோ 3:1-4).

திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல்

7. இறைமகன், தம்மோடு இணைக்கப்பட்ட மனித இயல்பில்இறந்து, உயிர்த்தெழுந்து, சாவை வென்று மனிதரை மீட்டார்; அவர்களைப் புதிய படைப்பாக உருமாற்றினார் (காண் கலா 6:15; 2 கொரி 5:17). எல்லா மக்களிடமிருந்தும் கூட்டிச் சேர்க்கப்பட்ட தம் சகோதரர், சகோதரிகளுக்கு ஆவியாரை வழங்கி அறிவுக்கு எட்டா முறையிலே அவர்களைத் தம் உடலாக அமைத்தார்.
துன்பங்களுக்கு ஆளாகி மாட்சிபெற்ற கிறிஸ்துவுடன் ஒன்றித்திருக்கும்நம்பிக்கை கொண்டோர் எல்லாருக்கும் அருளடையாளங்கள் வாயிலாக இவ்வுடலில் மறைந்த ஆனால் உண்மையான முறையில் கிறிஸ்துவின் வாழ்வு வழங்கப் பெறுகிறது;6 திருமுழுக்கால் நாம் கிறிஸ்துவைப் போலாகிறோம். ''நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்'' (1 கொரி 12:13). இத்திருச்சடங்கு கிறிஸ்துவின் இறப்போடும் உயிர்த்தெழுதலோடுமுள்ள ஒன்றிப்பைக் குறித்துக் காட்டி விளைவிக்கிறது: ''. . . அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்'' (உரோ 6:4-5). நற்கருணை அப்பத்தைப் பிட்டு உண்பதன்மூலம் ஆண்டவரின் உடலில் உண்மையாகவே பங்கு பெறுகிறோம். இதன்மூலம்நாம் அவரோடும், ஒருவர் ஒருவரோடும் ஒன்றிக்கிறோம். ''அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்'' (1 கொரி 10:17). இவ்வாறு நாம் எல்லாரும் அந்த உடலின் உறுப்புகள் ஆக்கப்பெறுகிறோம் (காண் 1 கொரி 12:27). நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கின்றோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம் (உரோ 12:5).
மனித உடலின் உறுப்புக்கள் பலவாயினும் அவை அனைத்தும் ஒரே உடலாய் உள்ளன. இதுபோலவே நம்பிக்கை கொண்டோரும் கிறிஸ்துவில் ஒரே உடலாய் உள்ளனர் (காண் 1 கொரி 12:12). கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புவதிலும் உறுப்புகளுக்குள்ளும் பல்வேறு பணிகளுக்குள்ளும் வேறுபாடு உண்டு. ஆவியார் ஒருவNர் அவர் தம்முடைய வளமைக்கும், பணிகளின் தேவைக்கும் ஏற்பத் திருச்சபையின் நலனுக்காக வௌ;வேறான தம் அருள் கொடைகளை வாரி வழங்குகிறார் (காண் 1 கொரி 12:1-11). இந்த கொடைகளுள் திருத்தூதருக்கு அளிக்கப்பட்ட அருள் முதலிடம் வகிக்கிறது. அருள் கொடைகளால் நிரப்பப் பெற்றவர்களைக்கூட அதே ஆவியார் திருத்தூதர்களின் அதிகாரத்திற்கு உட்படுத்தினார் (காண் 1 கொரி 14). அதே ஆவியார் தம்மாலும் தம் ஆற்றலாலும் உறுப்புகளினிடையே உள்ள இணைப்பாலும் உடலை ஒன்றுபடுத்துகிறார்; நம்பிக்கை கொண்டோரிடையே அன்பை விளைவித்து அதைத் தூண்டுகிறார். எனவே, ஓh உறுப்பு துன்புற்றால் அதனுடன் எல்லா உறுப்புகளும் சேர்ந்து துண்புறும்; ஓர் உறுப்பு பெருமைபெற்றால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்து மகிழ்வுறும் (காண் 1 கொரி 12:26).
கிறிஸ்துவே இவ்வுடலின் தலை. அவரே கட்புலனாகக் கடவுளது சாயல்; அனைத்தும் அவர் வழியாய்ப் படைக்கப்பட்டன. அனைவருக்கும் முந்தியவர் அவரே. அனைத்தும் அவரோடு இணைந்துள்ளன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர்;த் தலைப்பேறு ஆனார் (காண் கொலோ 1:15-18): வலிமைமிக்க ஆற்றலால் விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை அனைத்தையும் அவர் ஆளுகிறார்; நிகரற்ற தம் நிறைவாலும் செயலாலும் இந்த முழு உடலையும் தம் மாட்சிப் பெருக்கால் நிரப்புகிறார் (காண் எபே 1:18-23).7
கிறிஸ்து எல்லா உறுப்புகளிலும் உருவாகும்வரை அவை (காண் கலா 4:19), அவரை ஒத்திருக்க வேண்டும். இதற்காக அவருடன் ஆட்சி செய்யும்வரை அவரது சாயலாக உருமாற்றம் அடைந்து அவரோடு இறந்து, உயிர்த்தெழுந்து நாம் அவரது வாழ்வின் மறை நிகழ்ச்சிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் (காண் பிலி 3:21; 2 திமோ 2:11; எபே 2:6; கொலோ 2:12 முதலியன). நாம் அவருடைய துன்பங்களில் பங்கு பெற்று அவரோடு மகிமையிலும் பங்கு பெறுவதற்காக (காண் உரோ 8:17) இன்னும் உலகில் பயணம் செய்து, துன்ப துயரங்களில் அவரது அடிச் சுவட்டிலே நடந்து, தலையோடு உடல் ஒன்றித்திருப்பது போல அவருடைய துன்பங்களிலும் அவரோடு ஒன்றித்திருக்கிறோம்.
''அவரால்தான் முழு உடலும் தசைநார்களாலும் மூட்டுகளாலும் இறுக்கிப் பிணைக்கப்பட்டு ஊட்டம் பெற்றுக் கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளருகிறது'' (கொலோ 2:19). அவரே தம் உடலாகிய திருச்சபையின் பணிகளுக்குத் தேவையான கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார். இவை வழியாக நாம் அன்பின் அடிப்படையில் உண்மையின்படி செயல்பட்டுத் தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் வளர (காண் எபே 4:11-16 கிரேக்க மூலம்), அவருடைய ஆற்றலால், நிறைவாழ்வடைய ஒருவர்க்கொருவர் உதவுகிறோம்.
இடைவிடாது அவரில் நாம் புதுப்பிக்கப்படுமாறு (காண் எபே 4:23) அவர் நமக்குத் தம் ஆவியாரை வழங்கு இருக்pறார்; இதெ ஆவியாரே தலையிலும் உறுப்புகளிலும்இருந்துகொண்டு முழு உடலுக்கும் உயிரூட்டுகிறார்; அதை ஒன்றாய் இணைக்கிறார்; அதை இயக்குகிறார். எனவேதான் திருச்சபைத் தந்தையர்களால் உயிரின் மூலமான ஆன்மா மனித உடலிலே ஆற்றும் அலுவலுடன் இவரது அலுவரை ஒப்பிட முடிந்தது.8
மனைவியைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செய்யும் கணவரைப்போல, கிறிஸ்து திருச்சபையைத் தம் மணமகளாக அன்புசெய்கிறார். (காண் எபே 5:25-28). திருச்சபையும் தன் தலைவருக்குப் பணிந்து இருக்கிறது. (காண் எபே 5:23-24). ''இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது'' (கொலோ 2:9) தம் உடலலாகவும் முழுமையாகவுமிருக்கும் திருச்சபை வளர்ந்து, கடவுளின் முழு நிறைவையும் பெறும் வண்ணம் (காண் எபே 3:19) அதைத் தம் தெய்வீகக் கொடைகளால் அவர் நிரப்புகிறார் (காண் எபே 1:22-23).

திருச்சபை கட்புலனாகும், அருள் சமூகம்

8. ஒரே இணைப்பாளரான கிறிஸ்து இந்த உலகிலே நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றைக்கொண்ட சமூகமான தமது தூயத் திருச்சபைக்குக் காணக்கூடிய ஓர் அமைப்பை அளித்து அதைத் தொடர்ந்து காத்து வருகிறார்;9 இதன் வழியாக உண்மையையும் அருளையும் எல்லாருக்கும் அவர் வழங்குகிறார். இது பல்வேறுபட்ட உறுப்புகளைக் கொண்டு நிறுவப்பட்ட சமூகமாகவும் இலங்குகிறது; மண்ணகத் திருச்சபையாகவும் விண்ணக நலன்களால் நிரப்பப்பட்ட திருச்சபையாகவும் திகழ்கிறது. எனினும் இவற்றை வேறுபட்ட இரு எதார்த்தங்களாகக் கருதக் கூடாது; மாறாக இவை மானிட மற்றும் தெய்வீகக் கூறுகளைக் கொண்ட ஒரே கட்டமைப்பையே உருவாக்குகின்றன.10 எனவேதான், மனிதரான வாக்கின் மறை நிகழ்ச்சிக்கு ஏற்ற உவமையாக இது ஒப்பிடப்பெறுகிறது. கடவுளின் வாக்கு தமதாக்கிய மனித இயல்பு எவ்வாறு நிறைவாழ்வின் உயிருள்ள ஒரு கருவியாக அவரோடு பிரிக்க முடியாதவாறு இணைந்து அவருக்குப் பணிபுரிகின்றதோ, அவ்வாறே திருச்சபையின் சமூக அமைப்பும், அதற்கு உயிரூட்டுபவரான கிறிஸ்துவின் ஆவியாருக்கு அவ்வுடல் வளர்ச்சி பெற உதவுகிறது (காண் எபே 4:16)11
இதுதான் கிறிஸ்துவின் ஒரே திருச்சபை. இதைத்தான் நம்பிக்கை அறிக்கையிலே நாம் ஒரே, தூய, பொதுவான, திருத்தூதுத் திருச்சபையென வெளிப்படையாக அறிக்கையிடுகிறோம்.12 அருள்பணி புரிவதற்கே நம் மீட்பர், தாம் உயிர்த்தெழுந்த பிறகு பேதுருவிடம் இத்திருச்சபையை ஒப்படைத்தார் (காண் யோவா 21:17). அவரிடத்திலும் ஏனைய திருத்தூதர்களிடத்திலும் இதைப் பரப்பவும் வழிநடத்தவும் வேண்டிய பணியை ஒப்படைத்தார் (காண் மத் 28:18 தொ.). இதையே எக்காலத்திற்கும் உண்மைக்குத் ''தூணும் அடித்தளமுமாய்'' (1 திமோ 3:15) அமைத்தார். இவ்வுலகில் ஒரு சமூகமாக நிறுவப் பெற்றதும் ஒழுங்குமுறையில் அமைந்ததுமான இந்தத் திருச்சபை பேதுரு வழிவருபவராலும், அவரோடு ஒன்றித்திருக்கும் ஆயர்களாலும் வழிநடத்தப்படும் கத்தோலிக்கத் திருச்சபையில் உளது.13 இதன் அமைப்பிற்கு வெளியே தூய்மைநிலை, உண்மை ஆகியவற்றின் வுறுகள் பல காணப்பட்டபோதிலும், இவை கிறிஸ்துவின் திருச்சபைக்கே உரித்தான கொடைகள் என்ற முறையிலே கத்தோலிக்க ஒற்றுமைக்குத் தூண்டுதலாயிருக்கின்றன.
கிறிஸ்து வறுமையிலும் துன்பத்திலுமே மீட்புப் பணியைச் செய்து முடித்தார். அதுபோலு மீட்பின் பலன்களை மனிதருக்கு வழங்க, திருச்சபையும் அதே பாதையில் அடியெடுத்து வைக்கவே அழைக்கப்பெறுகிறது. ''கடவுள் வடிவில் விளங்கிய'' கிறிஸ்து இயேசு ''தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்'' (பிலி 2:6-7). மெலும் அவர், நமக்காக ''டிசல்வராயிருந்தும் . . . ஏழையானார்'' (2 கொரி 8:9). அதுபோல, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை ஆற்றத் திருச்சபைக்கு மனித வளங்கள் தேவைப்பட்ட போதிலும், மண்ணுலக மாட்சியைத் தேடுவதற்கென்று அது ஏற்பட்டதல்ல் மாறாக, மனத் தாழ்மையையும், தன்னல மறுப்பையும் தனது முன்மாதிரியால் பரப்புவதற்காகவே திருச்சபை நிறுவப்பட்டுள்ளது. ''ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், உள்ளம் நொறுங்கியோரைக் குணப்படுத்தவும்''ழூ (லூக் 4:18), ''இழந்து போனதைத் தேடி மீட்கவுமே'' (லூக் 19:10) தந்தையால் கிறிஸ்து அனுப்பப்பெற்றார். அதுபோலவே திருச்சபையும் மனித வலுவின்மையால் பாதிக்கப்பட்ட எல்லாரையும் அன்புடன் அரவணைக்கிறது. ஏன், வறியவரும் துன்புற்றவருமான தன் நிறுவுனரின் உருவை வறியோரிலும் துன்புறுவோரிலும் காண்கிறது; அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முனைகிறது. அவர்கள் மூலம் கிறிஸ்துவுக்கே தொண்டு ஆற்ற உளங்கொள்கிறது. ''தூயவர், கபடற்றவர், மாசற்றவர்'' (எபி 7:26) என விளங்குபவரும் பாவமே அறியாதவருமான கிறிஸ்து (2 கொரி 5:21) மக்களின் பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு வந்தார் (காண் எபி 2:17) திருச்சபையோ பாவிகளைத் தன்னுள் கொண்டிருப்பதால்தான் தூயதாயிருப்பினும் எப்பொபுழுதும் தூய்மைப்படுத்தப்பட வேண்டிய தேவையைத் தன்னில் கொண்டு மனமாற்றம், சீர்திருத்தம் என்னும் பாதையிலேயே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஆண்டவர் வரும்வரை அவரது சிலுவையையும் சாவையும்அறிக்கையிட்டு (காண் 1 கொரி 11:26), ''உலகின் துன்பங்கள், கடவுளின் ஆறுதல்கள் இவற்றின் நடுவிலே திருச்சபை வழிநடந்து முன்னேறிச் செல்கிறது''.14 உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஆற்றலால் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் தனக்குவரும் இன்னல்களையும் இடுக்கண்களையும் பொறுமையாலும் அன்பாலும் முறியடிக்கவும் கடவுளின் மறைபொருள் இறுதியிலே தன் முழு மாட்சியுடன் தெளிவாக வெளியிடப்படும் வரை, மங்கிய முறையிலானாலும் உண்மையுடன் அதை உலகிற்குக் காட்டவும் திருச்சபை உறுதி பெற்றிருக்கிறது.

இயல் 2
இறைமக்கள்

புதிய உடன்படிக்கையும் புதிய மக்களும்

9. எக்காலத்திலும் எல்லா இனத்தவரிலும் கடவுளுக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர் (காண் தி.ப 10:35). எனினும், தனித்தனியாக ஒருவருக்கொருவர் தொடர்பேதுமற்ற முறையில் மக்களைத் தூய்மைப்படுத்தவும் ஈடேற்றவும் கடவுள் விரும்பவில்லை; மாறாக, தம்மை உண்மையில் ஏற்றுக்கொண்டு, தூய்மையாய் நமக்கு ஊழியம் செய்யும் ஒரு மக்கள் குலமாகவே அவர்களை நிறுவ விழைந்தார். எனவே, கடவுள் இஸ்ரயேல் குலத்தைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்து அதனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்; தம்மையும் தம் திருவுளத் திட்டத்தையும் அதன் வரலாற்றிலே படிப்படியாக வெளிப்படுத்தியதன் மூலம் அம்மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தமக்குகந்த தூயவர்களாக மாற்றினார். கிறிஸ்துவில் நிறைவுபெற வேண்டியிருந்ததும், மனிதரான கடவுளின் வாக்கு அளிக்க வெண்டியிருந்த முழுமையான வெளிப்பாட்டை சார்;ந்ததுமான புதிய, நிறைவான உடன்படிக்கையின் தயாரிப்பாகவும் உருவமாகவுமே இவையனைத்தும் நிகழ்ந்தன. ''இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்த பொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்'' (எரே 31:31-34). இப்புதிய உடன்படிக்கையை அதாவது இப்புதிய ஏற்பாட்டைத் தனது இரத்தத்தால் கிறிஸ்து நிலைப்படுத்தினார் (காண் 1 கொரி 11:25). கடவுளின் புது மக்களாக இருக்கவும், ஊனியல்புக்கு ஏற்ப அல்லாமல், ஆவியிலே ஒற்றுமை பெறவும் யூதரிடமிருந்தும் பிற இனத்தாரிடமிருந்தும் ஒரு குலத்தை அவர் அழைத்தார். ஏனெனில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் அழியக்கூடிய வித்தினால் அல்லால் வாழும் கடவுளின் வார்த்தையான அழியா வித்தினாலேயும் (காண் 1 பேது 1:23), மனிதரால் அல்லாமல் தூய ஆவி, தண்ணீர் ஆகியவற்றினாலேயும் (காண் யோவா 3:5-6) மறுபடியும் பிறந்துள்ளனர். இறுதியாக ஒருகாலத்தில் மக்கள் இனமாகவே இல்லாதிருந்தும் இன்று ''கடவுளுடைய மக்கள்'' என்று ஆகிய இவர்கள் ''தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூயமக்களினத்தார், ''அவரது உரிமைச்சொந்தமான மக்க'ளாக நிறுவப்பட்டிருக்கின்றனர் (காண் 1 பேது 2:9-10).
திருப்பொழிவு பெற்ற இந்த மக்கள் இனம் கிறிஸ்துவைத் தன் தலைவராகக் கொண்டிருக்கிறது. இவரையே ''நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் ஒப்புவித்தார். நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்'' (உரோ 4:25); இப்பொழுது எப்பெயருக்கும் மேலான பெயர் பூண்டு, மாட்சியுடன் விண்ணில் ஆட்சி செய்கிறார். கடவுளின் பிள்ளைகளுக்குரிய மாண்பும் சுதந்திரமுமே இம்மக்களின் சொத்து. இவர்களின் இதயங்களைக் கோவிலாகக் கொண்டு தூய ஆவி குடியிருக்கிறார். கிறிஸ்து நம்மிடம் அன்பு செலுத்தியதுபோல் நாமும் அன்பு செலுத்தவேண்டும் என்னும் புதிய கட்டளையைத் தனக்குச் சட்டமாகக் கொண்டிருக்கிறது இம்மக்கள் குலம் (காண் யோவா 13:34). இறுதியாக, கடவுளின் ஆட்சி இதன் குறிக்கோள். கடவுளாலேயே இவ்வாட்சி உலகில் தொடங்கி வைக்கப்பட்டது. நமது வாழ்வாகிய கிறிஸ்து தோன்றும்போதும் (காண் கொலோ 3:4) ''படைப்பு அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ளும்'' (உரோ 8:21) போதும் அவராலேயே முழுமைபெறவிருக்கின்ற இவ்வாட்சி காலங்களின் முடிவுவரை விரிந்து பரவவேண்டும். எனவே, திருப்பொழிவுபெற்ற மக்கள் இனம் எல்லா மக்களையும் நடைமுறையில் தன்னுள் கொண்டிராது என்பதும் சில வேளைகளில் சிறு மக்கள் குழுவாகவே தோன்றுகின்றது என்பதும் உண்மைதான்; எனினும், இதுவே மக்களின் முழுவதற்கும் ஒற்றுமை, எதிர்நோக்கு, நிறைவாழ்வு ஆகியவற்றின் உறுதியான தொடக்கமாயிருக்கிறது. வாழ்வு, பரமஅன்பு, உண்மை ஆகியவற்றின் ஒன்றிப்பில் இம்மக்கள்குலத்தை அமைத்தார் கிறிஸ்து. அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும் கருவியாகவும் அவர் இதைப் பயன்படுத்துகிறார்; உலகிற்கு ஒளியாகவும் மண்ணுலகிற்கு உப்பாகவும் (காண் மத் 5:13-16) அனைத்து உலகிற்கும்அவர் இதை அனுப்புகிறார்.
பாலை நிலத்தில் வழி நடந்ததும் ஊனிலிருந்து உருவானதுமான இஸ்ரயேல், ஏற்கெனவே கடவுளின் திருப்பேரவை என்று அழைக்கப்பெற்றிருக்கிறது (2 நெகே 13:1); காண் எண் 20:4; இச 23:1 தொ.); அதுபோல் தற்காலத்தில் முன்னேறிச் சென்று, வரப்போகும் நிலையான நகரை நாடும் (காண் எபி 13:14) புது இஸ்ரேயலும் கிறிஸ்துவின் திருச்சபை எனப் பெயர் பெறுகிறது (காண் மத் 16:18). ஏனெனில், கிறிஸ்துவே தமது சொந்த இரத்தத்தால் அதைத் தமாதாக்கிக் கொண்டுள்ளார் (காண் திப 20:28); தம் ஆவியால் அதை நிரப்பியுள்ளார்; காணக்கூடிய, சமூக ஒன்றிப்பிற்குத் தேவையான வழிவகைகளை அதற்குத் தந்துள்ளார். இயேசுவை நிறைவாழ்வு அளிப்பவராகவும், ஒற்றுமை அமைதி ஆகியவற்றின் ஊற்றாகவும் நம்பிக்கை கண்கொண்டு நோக்குபவர்களைக் கூட்டி ஒன்று சேர்த்து கடவுள் திருச்சபையை ஏற்படுத்தினார். அனைவருக்கும் அது நிறைவாழ்வு தரும் ஒற்றுமையின் காணக்கூடிய அருளடையாளமாக அமையும்படி அதை இவ்வாறு நிறுவினார்.15 காலங்களையும் நாட்டு எல்லைகளையும் கடந்து நின்றாலும் அது உலகின்எல்லாப் பகுதிகளிலும்பரவுவதற்காகவே மனித வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. ஊனியல்பின் வலுவின்மையால் நிறைவான பற்றுறுதியிலிருந்து வழுவாமல் தன் ஆண்டவருக்கு ஏற்ற மணமகளாக அது திகழவேண்டும். சிலுவையின் வழி நடந்து, மறைவிலா ஒளியை அடையும்வரை தூய ஆவியால் தூண்டப் பெற்றுத் தன்னையே அது தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்காகவே சோதனைகள், துன்ப துயரங்கள் ஆகியவற்றின் நடுவிலே நடந்து செல்லும்பொழுது ஆண்டவர் தனக்கு வாக்களித்த இறை அருளால் திருச்சபை தேற்றப்படுகிறது.

பொதுத் திருப்பணிநிலை

10. மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்குரு ஆண்டவராகிய கிறிஸ்து (காண் எபி 5:1-5) இவர் இப்புது மக்களை ''ஆட்சி உரிமை பெற்றவர்களாக, தம் கடவுளும் மக்களை ஊழியம் புரியும் குருக்களாக ஏற்படுத்தினார்.'' (திவெ. 1:6 காண் 5:9-10). ஏனெனில், தம் மறுபிறப்பாலும் தூய ஆவியின் பொழிதலாலும் திருமுழுக்குப் பெற்றவர்கள் அருள் இல்லமாகவும் தூய திருப்பணி நிலையினராகவும் திருநிலைப்படுத்தப் பெற்றுள்ளனர். கிறிஸ்தவர்களுக்கேற்ற தம் எல்லாச் செயல்களாலும் ஆவிக்குரியப் பலிகளை நிறைவேற்றுவதற்கும் இருளினின்று அவர்களைத் தம் வியத்தகு ஒளிக்கு (காண் 1 பேது 2:4-10) அழைத்தவரின் ஆற்றல்களைப் பறைசாற்றுவதற்குமெ அவர்கள் இவ்வாறு திருநிலைப்படுத்தப் பெற்றுள்ளனர். எனவே கிறிஸ்துவின் சீடர் அனைவரும் இறைவேண்டலில் நிலையாய் இருந்து கடவுளை ஒன்றாகப் போற்றித் (காண் தி.ப. 2:42-47) தம்மையேக் கடவுளுக்குகந்த தூய, உயிருள்ள பலியாகப் படைக்க வேண்டும் (காண் உரோ 12:1) உலகமெங்கும் கிறிஸ்துவுக்குச் சாட்சி சொல்ல வேண்டும். நிலை வாழ்வில் தாங்கள் கொண்டுள்ள எதிர்நோக்கு குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விளக்கம் கேட்போருக்கு அவர்கள் தக்க விடையளிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் (காண் 1 பேது 3:15)
நம்பிக்கை கொண்டோரின் பொதுத் திருப்பணி நிலையும், தேர்வுத் திருப்பணிநிலை அதாவது திருச்சபை ஆட்சித் திருப்பணி நிலையும் தரத்தில் மட்டுமன்றி இயல்பிலும் வேறுபட்டவனாயினும் அவை ஒன்றிற்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஏனென்றால், அவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய முறையில் கிறிஸ்துவின் ஒரே திருப்பணிநிலையில் பங்குகொள்ளுகின்றன.16 பணியாற்றும் திருப்பணியாளர் தாம் பெற்ற தூய அதிகாரத்தால் திருப்பணநிலை மக்களை உருவாக்குகிறார், ஆளுகிறார், மறுகிறிஸ்துவாக நின்று நற்கருணைப்பலியை நிறைவேற்றுகிறார், எல்லா மக்களின் பெயராலும் கடவுளுக்கு அதை ஒப்புக் கொடுக்கிறார். நம்பிக்கை கொண்டோரோ தம் அரசத் திருப்பணி நிலையால் நற்கருணைப் பலியை ஒன்றித்து ஒப்புக் கொடுக்கின்றார்.17 அருளடயாளங்களைப் பெறுவதிலும் இறைவேடலிலும் நன்றி செலுத்துவதிலும், தம் தூய வாழ்வின் சான்றிலும் ஒறுத்தலிலும் அன்பைச் செயலில் காட்டுவதிலும் இவ்வரசத் திருப்பணி நிலையைச் செயல்படுத்துகின்றனர்.

அருளடையாளங்கள் வழியாகச் செயல்படும் பொதுத்திருப்பணிநிலை

11. திருப்பணிநிலைக் குழுவின் தூயப் பண்பும் உயிர் அமைப்பும், அருளடையாளங்கள் மூலமும் நற்பண்புகள் மூலமும் செயல்படுகின்றன. நம்பிக்கை கொண்டோர் திருமுழுக்கால் திருச்சபையுடன் இணைக்கப்பட்டு, கிறிஸ்தவ சமய வழிபாட்டை நிகழ்த்த அழியா முத்திரையால் குறிக்கப்படுகிறார்கள். கடவுளின் பிள்ளைகளாக மறுபிறப்படைந்த அவர்கள் திருச்சபை வழியாகக் கடவுளிடமிருந்து தாங்கள் பெற்றுக் கொண்ட நம்பிக்கையை மனிதர் முன் வெளிப்படையாக அறிக்கையிடக் கடமைப்பட்டுள்ளனர்.18 உறுதிப் பூசுதல் எனும் அருளடையாளத்தால் இன்னும் நெருங்கிய முறையுலே திருச்சபையுடன் பிணைக்கப்படுகின்றனர். தூய ஆவியின் தனி வல்லமையால் உறுதிப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாகச் சொல்லாலும் செயலாலும் நம்பிக்கைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் கடமைப் பட்டுள்ளனர்.19 கறிஸ்தவ வாழ்வனைத்தின் ஊற்றும் உச்சியுமான அஃதோடு தம்மையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கின்றார்கள்.20 இவ்வாறு ஒப்புக்கொடுப்பதாலும், நற்கருணை உட்கொள்வதாலும் அனைவரும் ஒரே வகையில் அல்லாமல், ஒவ்வொருவரும் தத்தமக்குரிய முறையில், திருவழிபாட்டுச் செயலில் தம் பங்கை நிறைவேற்றுகின்றனர். திருப்பந்தியில் கிறிஸ்துவின் உடலால் ஊட்டம் பெற்று இம்மாண்புமிகு அருளடையாளம் ஏற்ற முறையில் குறித்து வியத்தகு முறையில் விளைவிக்கும் இறை மக்களின் ஒற்றுமையை வாழ்விலே வெளிப்படையாகக் காட்டுகின்றனர்.
ஒப்பரவு அருளடையாளத்தைப் பெறுபவர்கள் கடவுளுக்கு எதிராகத் தாம் செய்த பாவங்களுக்கு, அவரது இரக்கத்தால் மன்னிப்புப் பெறுகிறார்கள்; அஃதோடு அவர்களின் பாவங்களால் புண்படுத்தப்பட்டதும், தனது அன்பாலும் மாதிரியாலும் இறை வேண்டலாலும் அவர்களின் மனமாற்றத்திற்காக உழைப்பதுமான திருச்சபையோடு ஒப்புரவாகிறார். பிணியாளரின் துன்பத்தைத் தணிக்கவும், அவர்களுக்கு வாழ்வளிக்கவும், நோயில் பூசுதலாலும் திருப்பணியாளரின் வேண்டலாலும் திருச்சபை முழுவதும் துன்புற்று மாட்சிபெற்றவரான ஆண்டவரின் அடைக்கலத்தில் அவர்களை வைக்கிறது. (காண் யாக 5:14-16). மேலும், கிறிஸ்துவின் துன்பங்களுடனும் சாவுடனும் மனமுவந்து தம்மைத் தாமே அவர்கள் ஒன்றித்து (காண் உரோ 8:17; கொலோ 1:24; 2திமோ 2:11-12; 1பேது 4:13) இறைமக்களின் நலனுக்கு உதவுமாறு அவர்களை ஊக்குவிக்கிறது. நம்பிக்கை கொண்டோருள்திருப்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பெறுவர்கள் கடவுளின் வார்த்தையாலும் அருளாலும் திருச்சபைக்கு அருள்பணியாளர்களாய் நின்று தொண்டுபுரிய கிறிஸ்துவின் பெயரால் நியமிக்கப் பெற்றிருக்கின்றனர். இறுதியாகக் கிறிஸ்தவ மணமக்கள் திருமணமென்னும் அருளடையாளத்தால் கிறிஸ்துவுக்கும் திருச்சசபைக்கும் இடையிலுள்ள ஒற்றுமை. வளமிக்க அன்பு ஆகிய மறைபொருட்களின் அடையாளமாக நின்று அதில் பங்கு கொள்கின்றனர் (காண் எபெ 5:32) இந்த அருளடையாளத்தால் தங்களது திருமண வாழ்விலும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதிலும் வளர்த்து உருவாக்குவதிலும் தூய்மைநிலை அடைய ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். இதனால் தங்கள் வாழ்க்கை நிலையிலும் படியிலும் இறைமக்களுள் இவர்கள் தமக்குரிய தனிக்கொடையைப் பெற்றுக் கொள்கின்றனர் (காண் 1 கொரி 7:7)21 ஏனெனில், திருமண இணைப்பால் உருவாகிறது குடும்பம்;;;: இக்குடும்பத்தில்தான் மனித சமுதாயத்தின் புதுக் குடிமக்கள் பிறக்கின்றனர். காலங்களின் முடிவுவரை இறைமக்கள் குலம் நிலைத்து நிற்பதற்காக இவர்கள் தூய ஆவியின் அருளால் திருமுழுக்கின் மூலமாக கடவுளின் பிள்ளைகளாக்கப்படுகின்றனர். இல்லத் திருச்சபை என அழைக்கப் படக்கூடுமான குடும்பத்தில் பெற்றோர் தமது சொல்லலாலும் முன்மாதிரியாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதன்முதலில் நம்பிக்கையைப் போதிப்பவர்களாக இருப்பார்களாக. இன்னும் ஒவ்வொருப் பிள்ளைக்கும் உரித்தான அழைத்தலை அவர்கள் பேணிக்காக்கவேண்டும்; திருப்பணிக்கான அழைத்தலாக இருந்தால் அவர்கள் தனிப்பட்ட அக்கரையுடன் அதைப் பேணி வளர்க்கவேண்டும்.
நிறைவாழ்வுதரும் இத்துணைச் சிறந்த வழிவகைகளால் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் வலுவூட்டப்பெறுகின்றனர். இவர்கள் எந்நிலையில் இருப்பினும் எப்படி இருப்பினும் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையிலே, தந்தைக்கொண்டிருக்கும் இதேத் தூய்மைநிலையின் நிறைவிற்கு ஆண்டவரால் அழைக்கப்பெறுகிறார்கள்.

இறைமக்களிடையே நம்பிக்கை உணர்வும் அருள்கொடைகளும்

12. கிறிஸ்துவைப் பற்றிய உயிரோட்டமுள்ள சாட்சியத்தைச் சிறப்பாகத் தமது நம்பிக்கை மற்றும் அன்பு வாழ்வால் பரப்புவதாலும், அவரது பெயரை வாயாரப் போற்றும் புகழ்ச்சிப் பலியை அவருக்குச் செலுத்துவதாலும் (காண் எபி 13:15) கடவுளின் தூய மக்கள் கிறிஸ்துவின் இறைவாக்கு உரைக்கும் அலுவலில் பங்குகொள்கின்றனர். தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று நம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் (காண் 1 யோவா 2:20, 27) தன் நம்பிக்கையிலே தவறமுடியாது. நம்பிக்கை, அறநெறி ஆகியவைப் பற்றி 'ஆயர் முதல் பொதுமக்களின் இறுதியானவர் ஈராக'22 அனைவரும் தம் பொதுக் கருத்தைக் காட்டும்போது மக்கள் அனைவரின் இயல்பு கடந்த நம்பிக்கை உணர்வினால் இத்தனிப்பண்பு வெளிப்படுகிறது. உண்மையின் ஆவியால் தூண்டப்பெற்று வலுப்பெறும் நம்பிக்கை உணர்வுடன் இறைமக்கள் திருச்சபையின் திருஆசிரியத்திற்கு உண்மையுடன் பணிந்து, அதனால் வழிநடத்தப்படும்போது மனித வார்த்தையை அல்ல, மாறாக உண்மையிலேயே இறை வார்த்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள் (காண் 1 தெச 2:13); எக்காலத்துக்குமாகத் தூயவர்களுக்கு வழங்கப்பட்ட நம்பிக்கையை (காண் யூதா 3). தவறாமல் பற்றிக் கொள்கிறார்கள்; தம் தௌ;ளிய அறிவால் அதை ஆழ்ந்து ஆராய்ந்து முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள்.
மேலும், அதே தூய ஆவியார் அருளடையாளங்கள், பணிகள் மூலம் இறைமக்ககளைத் தூய்மைப்படுத்துகிறார்;; அவர்களை வழிநடத்துகிறார்; நற்பண்புகளால் அவர்களுக்கு அணிசெய்கிறார். அவரே தம் கொடைகளைத் தம் விருப்பம் போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கிறார்'' (1 கொரி 12:11). எல்லா நிலைகளிலுமுள்ள நம்பிக்கை கொண்டோருக்கும் சிறப்பான அருள்கொடைகளையும் அவரே வழங்குகிறார்; இவற்றால் பல்வேறு அலுவல்களையும் கடமைகளையும் மேற்கொள்ள அவர்களுக்குத் தகுதியையும் ஆர்வத்தையும் அளிக்கிறார். ''பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது'' (1கொரி 12:7) என்பதற்கு ஏற்பத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் அவர் இத்தினி அருளை வழங்குகிறார். மிகச் சிறந்தனவாயினும் சரி அல்லது சாதாரணமானவையாகவும் விரிவாக வழங்கப்பட்டனவாயினும் சரி, இந்த அருள் கொடைகள் திருச்சபையின் தேவைகளுமக்கு மிக ஏற்றனவையாகவும் பயனுள்ள வையாகவும் இருப்பதால் இறை மக்கள் இவற்றை நன்றியுடனும் மகிழ்வுடனும் பெற்றுக் கொள்ள வேண்டும். தனிச் சிறப்பு வாய்ந்த கொடைகளை மூடத் துணிச்சலுடன் இறைமக்கள் எதிர்பார்க்கக் கூடாது; அளவு கடந்த துணிவு கெர்ணடு அவற்றிலிருந்து திருத்தூது அவுவலில் பலன்களை எதிர்பார்க்கவும் கூடாது. மாறாக, அவை உண்மையானவையா என்பது பற்றியும் அவற்றை ஒழுங்குடன் பயன்படுத்துவது பற்றியும் தீர்மானம் செய்வது திருச்சபையில் தலைமை வகிப்பவர்களுக்கே உரியது. தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுத்துவிடாமல், அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதை ஏற்றுக்கொள்வது சிறப்பாக இவர்களைச் சார்ந்தது (காண் 1 தெச 5: 12, 19-21).

இறைமக்களின் பொதுமைப் பண்பு

13. கடவுளின் புதிய மக்கள் குலத்தில் சேர எல்லா மக்களும் அழைக்கப் பெறுகிறார்கள். எனவே, ஒருங்கிணைந்த இந்த குலம் எக்காலத்திலும் அனைத்துலகிலும் பரவவேண்டும். இவ்வாறே கடவுளின் திட்டம் நிறைவேற முடியும். இக்கடவுள் தொடக்கத்தில் மனிதரை ஒரே குலமாக உருவாக்கிளார்; சிதறி வாழ்ந்த தம் மக்களை இறுதியாக ஒன்றாய்ச் சேர்க்க தம் மகனை அனுப்பினார்; கடவுளின் பிள்ளைகளான புதிய மக்கள் அனைவருக்கும் தலைவராகவும் ஆசிரியராகவும் எல்லோருக்கும் அரசராகவும் குருவாகவும் இருக்குமாறு எல்லாவற்றுக்கும் உரிமையாளராகக் கடவுள் நியமித்தார் (காண் எபி 1:2). இறுதியில், இதற்காகவே ஆண்டவரும் உயிரளிப்பவருமான, தம் மகனின் ஆவியாரைக் கடவுள் அனுப்பினார். திருச்சபை முழுவதும் நம்பிக்கை கொண்ட யாவரும், அவர்கள் ஒவ்வொருவரும், திருத்தூதரும் போதனையின் ஒருமைப்பாட்டிலும் அப்பத்தைப் பிடுவதிலும் இறைவேண்டலிலும் ஒன்றுகூடி அப்பத்தைப் பிடுவதிலும் இறைவேண்டலிலும் ஒன்றுகூடி 'நிலைத்திருப்பதற்குக் காரணம் இதே ஆவியார்தான் (காண் திப 2:42 கிரேக்க மூலம்).
உலகில் எல்லா மக்கள் நடுவிலும் நிலைபெற்ற இறைமக்கள் குலம் ஒன்றே. ஏனெனில், இவ்விறைமக்கள் குலத்தின் குடிமக்கள் எல்லா இனத்தாரிடமிருந்தும் வருகிறார்கள்ஃ இவர்கள் மண்ணுலக இயல்பை அல்ல, ஆனர்ல விண்ணுலக இயல்பைக் கொண்ட ஆட்சியின் குடிமக்கள். ஏனெனில், உலகமெங்கும் சிதறி வாழும் எல்லா நம்பிக்கை கொண்டோரும் தூய அகுஸ்தின் ஒருவர் ஒருவரோடு தொடர்பு கொண்டிருக்கின்றனர்ஃ இவ்வாறு. ''உரோமை ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர் இந்திய மக்கள் தம் உறுப்புகள் என்பதை அறிவார்''23 கிறிஸ்துவின் ஆட்சி இவ்வுலக ஆட்சி அல்ல (காண் யோவா 18:36) என்பதால் திருச்சபையாகிய இறைமக்கள் குலம் இவ்வாட்சியை நிறுவும்போது எந்த மக்களிடமிருந்தும் உலகைச் சார்ந்த எவ்வித செல்வங்களையும் பறித்துக் கொள்வதில்லை; மாறாக மக்களின் ஆற்றல்களையும் வளங்களையும் பழக்க வழக்கங்களையும் அவை நல்லவையாக இருக்குமளவுக்குப் பேணிக் காத்து ஏற்றுக் கொள்கிறது. இவ்வாறு ஏற்றுக் கொள்வதால் அவற்றைத் தூய்மைப்படுத்தி, அவற்றிற்கு வலுவூட்டி உயர்த்துகிறது; ஏனெனில், தன் தலைவரோடு தான் சேரவேண்டும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்கிறது. இத்தலைவருக்கே நாடுகளெல்லாம் உரிமைச் சொத்தாக்கப்பட்டன (காண் திபா 71 (72):10; எசா 60:6-7; திவெ 21:24). இறைமக்களின் அணியாகத் திகழும் இப்பொதுமைப் பண்பு ஆண்டவரின் கொடையாகும். இக்கொடையால் கத்தோலிக்கத் திருச்சபை தூய ஆவியோடு இணைந்து தலைவரான கிறிஸ்துவின் கீழ் அதன் எல்லாச் வெல்வங்களுடன் அதன் தலைவரான கிறிஸ்துவின் கீழ் மீண்டும் ஒன்று சேர்க்கச் செயல் முறையில் எப்போழுதும் முயல்கிறது.24 இப்பொதுமைப் பண்பால் திருச்சபையின் ஒவ்வொரு பகுதியும் தனக்குரிய கொடைகளைப் பிற பகுதிகளுக்கும், திருச்சபை அனைத்திற்கும் தருகின்றது இவ்வாறு ஒருவருக்கொருவர் கொடைகளைப் பகிர்ந்து கொள்வதாலும், ஒற்றுமையில் தம் நிறைவைப் பெற உழைப்பதாலும் திருச்சபை முழுவதும் அதன் ஒவ்வொரு பகுதியும் வளர்ச்சியடைகின்றன. இவ்வாறு, இறைமக்கள் குலம் பல இனத்தாரிடமிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்டது மட்டுமல்ல் அது தன் அமைப்பிலும் பற்பல நிலையினராய் இருப்பதற்கு அவர்களது அலுவல்களே காரணமாக அமையலாம் அல்லது அவர்களது வாழ்கை நிலை, வாழ்க்கை முறை ஆகியவை காரணமாகலாம். தங்கள் சகோதரர், சகோதரிகளின் நரனுக்காகச் சிலர் திருப் பணியாற்றும்போது அவர்களது அலுவல் காரணமாக இப்பன்னிலைத் தன்மை எழுகிறது. பலர் துறவற வாழ்வைத் தழுவி, ஒடுங்கிய வழியில் நடந்து, தூய்மை நிலைமை நாடித் தமது முன்மாதிரியால் தம் சகோதர சகோதரிகளைத் தூண்டும்போதும் வாழ்க்கை முறையால் பன்னிலைத் தன்மை எழுகிறது. ஆக, பேதுருவின் முதன்மைக்குப் பழுதில்லா வகையில் தமக்கே உரிய மரபுகளைக் கொண்டனவும், திருச்சபையுடன் முறையான விதத்தில் ஒன்றித்திருப்பனவுமாகிய தனிப்பட்ட சபைகளும் உள்ளன. பேதுருவின் இந்தப்பணி உரிமை அனைத்துலகிலும் பரந்து நிற்கும் அன்புக்கு குழுவிற்குத் தலைமை வகிக்கிறது.25 அது திருச்சபையின் முறையான வேறுபாடுகளைப் பாதுகாக்கிறது; இவ்வேறுபாடுகள் ஒற்றுமைக்கு ஊறுசெய்யாமல் அதற்கு உதவுமாறு விழிப்பாயிருக்கிறது. ஆவிக்குறிய செல்வங்களையும் திருத்தூதுப் பணியாளர்களையும் உலகுசார் வளங்களையும் பொறுத்தமட்டில் திருச்சபையின் பல்வேறு பகுதிகள் நெருங்கிப்பிணைந்துள்ளன. ஏனெனில், மக்கட்குல உறுப்பினர்கள் தங்கள் வளங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் பெற்றுக் கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்'' (1 பேது 4:10).
அனைத்துலக அமைதியின் முன்னடையாளமாக இருந்து அதைப் பேணி வளர்ப்பது இறைமக்களின் பொதுமை சார்ந்த ஒற்றுமை. இவ்வொற்றுமையில் பங்கேற்க மனிதர் அனைவரும் அழைக்கப் பெறுகின்றனர். கடவுளது அருளால் நிறை வாழ்வு பெற அழைக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் பிறரும், அனைத்துலக மக்களும் இவவொற்றுமையில் பங்கேற்கின்றனர்; அல்லது பங்கேற்க உரிமையுடையவர்கள் ஆகின்றனர்.

கத்தோலிக்க நம்பிக்கை கொண்டோர்

14. எனவே, திருச்சங்கம் முதன்முதலில் கத்தோலிக்க நம்பிக்கை கொண்டோர் மீது தனது கவனத்தைச் செலுத்துகிறது. மக்கள் நிறைவாழ்வு பெறவேண்டுமென்றால் பயணம் செல்லும் இத்திருச்சபை தேவை என விவிலியம் மற்றும் மரபை அடிப்படையாகக் கொண்டு சங்கம் கற்பிக்கிறது. ஏனெனில், ஒரே இணைப்பாளர் கிறிஸ்து; நிறைவாழ்வின் வழியும் அவரே. அவர் திருச்சபையாகிய தம் உடலின் மூலம் நம்மோடு இருக்கிறர். நம்பிக்கை, திருமுழுக்கு ஆகியவற்றின் தேவையை அவரே வெளிப்படையாக வலியுறுத்தி (காண் மாற் 16:16; யோவா 3:5), வாயில் போன்ற திருமுழுக்கின் வழி மக்கள் உடபுகும் திருச்சபை தேவை என்பதையும் உறுதியாக் கூறியுள்ளார். எனவே, க்ததோலிக்கத் திருச்சபை தேவையான ஒன்றாக இயேசு கிறிஸ்து மூலமாகக் கடவுளால் நிறுவப் பட்டிருக்கிறது என்பதை அறிந்தும் அதில் சேராது இருப்பவர்களும் அதில் நிலைத்து வாழ விரும்பாதவர்களும் நிறைவாழ்வு பெறமுடியாது.
கிறிஸ்துவின் ஆவியைப் பெற்று, திருச்சபையின் முழு அமைப்பையும் அதில் நிறைவாழ்வு பெற நிறுவப்பட்டுள்ள எல்லா வழிவகைகளையும் ஏற்று, காணக்கூடிய அதன் அமைப்பின் மூலம் நம்பிக்கை அறிக்கையாலும், அருளடையாளங்களாலும் திருச்சபையின் ஆட்சியாலும், அதனோடு ஒன்றித்திருப்பதாலும் கிறிஸ்துவோடு அதாவது திருத்தந்தை, ஆயர்கள் மூலமாக ஆட்சி செய்யும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பவர்கள் திருச்சபையெனும் சமூகத்தில் முழுமையான உறுப்பினர் ஆகின்றனர். திருச்சபையில் இணைந்திருந்தும் அன்பில் நிலைத்திராது ''உள்ளத்தா''லன்றி ''உடலால்'' மட்டுமே அதன் மடியில் தவழ்கின்றவர்களும் மீட்புப் பெறுவதில்லை.26 தங்களது உயர்நிலை தங்கள் சொந்தத் தகுதியாலல்ல, கிறிஸ்துவின் மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். இவ்வருள் கொடைக்குச் சிந்தனையாலும் செர்லலாலும் செயலாலும் பதிலிறுக்காவிடில் அவர்கள் நிறைவாழ்வு அடைவதில்லை; மாறாகக் கடுமையான தீர்ப்புப் பெறுவர்.27
தூய ஆவியால் தூண்டப்பெற்றுத் திருச்சபையில் சேர வெளிப்படையாக விருப்பம் காட்டும் திருமுழுக்குப் புகுநிலையினர் அவ்விருப்பத்தாலேயே திருச்சபையுடன் இணைந்திருக்கிறார்கள். அவர்களைத் தன் பிள்ளைகளாகத் திருச்சபை தாயன்போடும் பரிவோடும் அரவணைத்துக் கொள்கிறது.

திருச்சபைக்கும் கத்தோலிக்கரல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள பிணைப்புகள்

15. திருமுழுக்குப் பெறுபவர்களுக்குக் கிறிஸ்தவர் என்ற பெயர் அணியாக அமைகிறது. இவர்கள் நம்பிக்கை முழுவதையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அல்லது பேதுருவின் வழி வருபவருடன் ஒன்றித்து உறவு கொண்டிராவிட்டாலும் இவர்களோடு பல வழிகளில் தான் இணைக்கப்பட்டிருப்பதைத் திருச்சபை அறிந்திருக்கிறது.28 ஏனெனில், இவர்களில் பலர் விவிலியத்தைத் தம் நம்பிக்கை, வாழ்க்கை ஆகியவற்றின் மேல்வரிச் சட்டமாக மதித்து உண்மையான சமய ஆர்வம் காட்டுகின்றனர்;; எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளிடமும், இறைமகனுடனும் மீட்பருமான கிறிஸ்துவினிடமும் அன்பு கலந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்;;29 திருமுழுக்கால் அழியாத முத்திரை பெற்றுக் கிறிஸ்துவோடு இணைந்திருக்கின்றனர்;; இன்னும் தங்களின் சபைகளிலோ சபைச் சமூகங்களிலோ உள்ள பிற அருளடையாளங்களை ஏற்று பெற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சபைகள் பலவற்றில் ஆயர்நிலை உண்டு. இவர்களில் பலர் நற்கருணைப் பலியை நிறைவேற்றுகின்றனர்;; கடவுளின் அன்னையான கன்னிமரியாவிடம் பற்றுக்கொண்டு இப்பற்றைப் பேணி வளர்க்கின்றனர்;30 இன்னும் இறைவேண்டல்களிலும் ஆவிக்குறிய பிற நலன்களிலும் பங்கு கொண்டிருக்கின்றனர். இவற்றிற்கு மேலாகத் தூய ஆவியில் உண்மையான ஒரு முறையில் நம்மோடு ஒன்றித்திருக்கின்றனர். இத்தூய ஆவியார் தம் கொடைகளாலும் அருளாலும் தூய்மைப் படுத்தும் தம் ஆற்றலாலும் அவர்களிடமும் செயல்படுகிறார்;; இரத்தம் சிந்தும் அளவிற்குக்கூட அவர்களில் சிலரை உறுதிப் படுத்தியுள்ளார். இவ்வாறு கிறிஸ்துவின் உளத்திற்கேற்ப ஒரே ஆயனின் கீழ் ஒரே மக்கள் குழுவாக அமைதியுடன் அனைவரும் ஒன்று சேர்வதற்காக, ஆவியார் கிறிஸ்துவின் சீடர் அனைவரும் விரும்பிச் செயல்படச் செய்கிறார்.31 தாய்த் திருச்சபையும் இக்குறிக்கோளை அடைய இறைவேண்டல் செய்யவும் எதிர்நோக்கவும் செயலாற்றவும் ஒருபோதும் தவறவில்லை;; தன் முகத்திலே கிறிஸ்துவின் அடையாளம் சுடர்விட்டு ஒளிருமாறு தூய்மையையும் மறுமலர்ச்சியும் பெறத் தன் மக்களைத் திருச்சபை தூண்டுகிறது.

திருச்சபையும் கிறிஸ்தவர் அல்லாதாரும்

16. இறுதியாக, நற்செய்தியை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களும் கடவுளின் மக்களோடு பல்வேறு முறைகளில் தொடர்பு கொண்டவர்களே.32 இவர்களுள் முதல்வருபவர் உடன்படிக்கையையும் வாக்குறுதியையும் பெற்றுக்கொண்ட மக்களே. மனிதர் என்னும் முறையில் கிறஸஸ்துவும் அவர்களிடமிருந்து தோன்றினார் (காண் உரோ 9:4-5). தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் மூதாதயரை முன்னிட்டுக் கடவுளின் அன்புக்கு உரியவர்களாக ஆகிறார்கள். ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை (காண் உரோ 11:28-29). படைத்தவரை ஏற்றுக் கொள்ளும் மக்களையும் நிறைவாழ்வுத் திட்டம் உள்ளடக்கி நிற்கிறது. இவர்களில் ஆபிரகாமின் நம்பிக்கையைத் தாம் கொண்டிருப்பதாக அறிக்கையிட்டு, இரக்கமுடையவரும் இறுதிநாளில் மனிதருக்குத் தீர்ப்புக் கூறுபவருமான ஒரே கடவுளை நம்மோடு சேர்ந்து தொழும் இஸ்லாமியர் முதலிடம் பெறுகிறார்கள். தாங்கள் அறியாத கடவுளைச் சாயல்களிலும் உருவங்களிலும் தேடுபவர்களிடமிருந்தும் அவர் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே (காண் திப 17:25-28), மீட்பராகிய அவர் எல்லா மனிதரும் மீட்புப் பெறவேண்டுமென விரும்புகிறார் (காண் 1 திமோ 2:4). தங்கள் குற்றம் எதுவுமின்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியையும் அவரது திருச்சபையையும் அறியாதவர்கள் நேர்மையான உள்ளத்துடன் கடவுளைத் தேடி, மனச்சான்றின் குரலில் கடவுளில் திருவுளத்தை அறிந்து ஏற்று, அருளின் தூண்டுதலால் அதை வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றால் நிலைவாழ்வைப் பெறுவர்.33 மேலும் தங்களது குற்றத்தினாலன்றி வெளிப்படையாகக் கடவுளை இன்னும் ஏற்றுக் கொள்ளாதவர்களுள், நேரிய நெறியிலே கடவுளின் அருள் துணையோடு நடக்க முயல்பவர்களுக்கும் அனைத்தையும் காக்கும் கடவுள் மீட்பிற்குத் தேவையான உதவிகளைத் தர மறுப்பதில்லை. ஏனெனில் அவர்களிடம் காணப்படும் நன்மைகள், உண்மைகள் அனைத்தையும் நற்செய்திக்குத் தயாரிப்பாகவும்,34 மனிதர் வாழ்வைக் கொண்டிருக்கும் வண்ணம் அவர்களுக்கு உள்ளொளி ஊட்டுபவரால் தரப்பட்டனவாகவும் திருச்சபை மதிக்pகறது. ஆனால், மக்கள் தீயோனால் பல்முறை ஏமாற்றப்பட்டு, பயணற்ற எண்ணங்களில் உழன்று, கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்மையை ஏற்றுக் கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றுக்குப் பணி செய்து படைத்தவரை மறந்தார்கள் (காண் உரோ 1:21,25); அவ்வாறு, கடவுளை மறந்து இவ்வுலகில் வாழ்ந்து இறந்து, பெரும் அவநம்பிக்கைக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே, கடவுளுக்கு மாட்சியும், இவர்கள் அனைவருக்கும் மீட்பும் வரவேண்டும் என விரும்பும் திருச்சபை ''படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' (மாற் 16:15) என்ற ஆண்டவரின் கட்டளையை நினைவில் கொண்டு நற்செய்தி அறிவிப்புப் பணியைப் போற்றி வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.

திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பாணி

17. தந்தை மகனை அனுப்பியதுபோலவே மகனும் ''நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப் பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நபளும் நான் உங்களுடன் இருக்கிறேன்'' (மத் 28:18-20) என்று கூறித் திருத்தூதர்களை அனுப்பினார் (காண் யோவா 20:21). மீட்பளிக்கும் உண்மையை அறிவிக்கும் இக்கட்டளையைத் திருத்தூதர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட திருச்சபை உலகின் கடையெல்லை வரைக்கும் அதை நிறைவேற்ற வேண்டும் (காண் திப 1:8). எனவே, ''நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!'' (1கொரி 9:16) என்ற திருத்தூதரின் சொற்களை அது தனதாக்கிக் கொள்கிறது; ஆகையால் புதுச் சபைகள் முழுமையானவையாக நிறுவப்பட்டு, அவைகளே நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தும் நிலையை அடையும் வரை போதகர்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. கடவுள் தமது திட்டத்தால் கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் நிறைவாழ்வின் ஊற்றாக ஏற்படுத்தியுள்ளார். கடவுளின் இத்திட்டம் பயன்தரும் முறையில் நிறைவேற ஒத்துழைக்குமாறுதூய ஆவி திருச்சபையைத் தூண்டுகிறார். திருச்சபையும் நற்செய்தியைப் போதித்து, அதைக் கேட்போர்களை நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கும் வெளிப்படையாக அதை அறிக்கையிடுவதற்கும் அழைக்கிறது; திருமுழுக்குப் பெற அவர்களைத் தயாரிக்கிறது; தவறுகளுக்கு அடிமைப் பட்டிருக்கும் நிலையிலிருந்து அவர்களை விடுவிக்கிறது; அன்பின் வழியாகக் கிறநிஸ்துவில் நிறைவு பெறும் வரை வளருமாறு கிறிஸ்துவோடு அவர்களை இணைக்கிறது. மனிதரின் இதயத்திலும் மனத்திலும் மக்களின் வழிபாட்டு முறைகளிலும் பண்பாடுகளிலும் மறைந்து கிடக்கும் நல்லவை எவற்றையும் திருச்சபை அழியவிடுவதில்லை; மாறாக, அவைகளின் குறைநீக்கி, உயர்வுறச்செய்து, நிறைவுபடுத்துகிறது. திருச்சபையின் இச்செயல் கடவுளுக்கு மாட்சியையும் அலகைக்குக் குழப்பத்தையும் மனிதருக்கு மகிழ்ச்சியையும் விளைவிக்கிறது. தன்னால் இயன்ற அளவு நம்பிக்கைப் பரப்புவது கிறிஸ்துவின் ஒவ்வொரு சீடருக்கும்உரித்தான கடமை.35 ஆனால், நம்பிக்கைகொள்வோருக்கு எவரும் திருமுழுக்கு அளிக்கலாம் என்றாலும், திருப்பணியாளர் ஒருவரே மறையுடலைக் கட்டியெழுப்பும் அலுவலை நற்கருணைப் பலியின் மூலம் நிறைவுறச் செய்யமுடியும். இவ்வாறு இறைவாக்கினர் வழியாகக் கடவுள் கூறிய செதற்கள் நிறiவேறுகின்றன: ''கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத் தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் தூபமும், தூய காணிக்கையும் செலுத்தப்படுகின்றன'' (மலா 1:11).36 இவ்வாறு உலகமனைத்தும் ஆண்டவரின் உடலும் தூய ஆவியன் கோவிலுமான இறைமக்களாக மாறும்படியும், அனைத்தையும் படைத்த தந்தைக்கு எல்லாருக்கும் தலைவரான கிறிஸ்துவில் மாட்சியும் பெருமையும் கிடைக்கும்படி திருச்சபை மன்றாடுகிறது; அதற்காக உழைக்கிறது.

இயல் 3
திருச்சபையின் ஆட்சியமைப்பும் சிறப்பாக ஆயர்நிலையும்

முன்னுரை

18. ஆண்டவரின் கிறிஸ்து இறைமக்களை ஊட்டி வளர்ப்பதற்காகவும் என்றும் அவர்கள் பெருகுவதற்காகவும் தமது திருச்சபையிலே பல்வேறுபட்ட பணிகளை ஏற்படுத்தினார். உடல் முழுவதன் நலனுக்காகவே இப்பணிகள் உள்ளன. தூய அதிகாரம் பெற்ற பணியாளர் எல்லாரும் தங்கள் சகோதரர் சகோதரிக்குத் தொண்டுபுரிகின்றனர். இறைமக்கள் குலத்தைச் சேர்ந்திருப்பவர்களும் இதனால் உண்மையிலே கிறிஸ்தவருக்குரிய மாண்பைப் பெற்றிருக்கும் அனைவரும் ஒரே குறிக்கோளை அடையத் தன்னுரிமையுடனும் ஒழுங்குடனும் ஒன்றாக உரழத்து நிறைவாழ்வைப் பெறும் பொருட்டே இத்தொண்டு உளது.
என்றும் வாழும் மேய்ப்பரான இயேசு, தந்தை தம்மை அனுப்பியதுபோல தாமும் திருத்தூதர்களை அனுப்பி (காண் யோவா 20:21) தமது தூயத் திருச்சபையைக் கட்டி எழுப்பினார் என்று முதல் வத்திக்கான் திருச்சங்கத்தின் அடிச்சுவட்டிலே நின்று, அஃதோடு சேர்ந்து இத்திருச்சங்கம் கற்பித்து அறிக்கையிடுகிறது. திருத்தூதர்களின் வழித் தோன்றல்களாகிய ஆயர்கள் தமது திருச்சபையிலே உலக முடிவு வரை அருள்பணியாளர்களாக இருக்க வேண்டுமென்று கிறிஸ்து திருவுளங்கொண்டார்; ஆயர் நிலையானது ஒன்றாகவும் பிளவுபடாமலும் விளங்கும்படி தூய பேதுருவை ஏனைய திருத்தூதர்களுக்குத் தலைவராக நியமித்தார்; நம்பிக்கை, ஒற்றுமை ஆகயிவற்றின் நிலையான, காணக்கூடிய ஓர் ஊற்றாகவும் அடிப்படையையும் அவரில் ஏற்படுத்தினார்.37 உரோமை ஆயரது தூய்மையான முதன்மை அதிகாரம் நிறுவப்பட்டது பற்றியும், அதன் நிலையான தன்மை, ஆற்றல் தன்மை பற்றியும், வழுவாது கற்பிக்கும் உரோமை ஆயரின் அதிகாரம் பற்றியும் பேசும் இக்கோட்பாட்டை எல்லா மக்களும் உறுதியாக நம்புவதற்காகத் திரும்பவும் இத்திருச் சங்கம் எடுத்துக்கூறுகிறது. இதைத் தொடர்ந்து கிறிஸ்துவின் பதிலாளும்38 திருச்சபை முழுவதன் காணக்கூடிய தலைவருமான பேதுருவின் வழிவருபவருடன் உயிருள்ள கடவுளின் குடும்பத்தை ஆளும் திருத்தூதர்களின் வழித்தோன்றல்களான ஆயர்களைப் பற்றிய கோட்பாட்டையும், எல்லாருக்கும் முன்பாக வெளிப்படையாக அறிக்கையிட்டுக் கூற இத்திருச்சங்கம் முடிவு செய்துள்ளது.

திருத்தூதர் குழு

19. ஆண்டவர் இயேசு தந்தையை நோக்கி வேண்டிய பின்பு, தாம் விரும்பியவர்களை தம்மிடம் அழைத்தார்ஃ தம்மோடு இருக்கவும் கடவுளின் ஆட்சியைப் பறைசாற்ற அனுப்பவும் அவர்களுள் பன்னிருவரை நியமித்தார் (காண் மாற் 3:13-19; மத் 10:1-42). இந்தத் திருத்தூதர்களை (காண் லூக் 6:13) ஒரு குழுவைப்போல அதாவது நிலையான ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக அமைத்தார். இவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேதுருவின் இக்குழுவிற்குத் தலைவராக நியமித்தார் (காண் யோவா 21:15-17). தமது ஆணையுரிமையிலே பங்குபெற்று எல்லா மக்களையும் தம் சீடர்களாகவும் தூய்மைப்படுத்தவும் வழிநடத்தவும் (காண் மத் 28:16-20; மாற் 16:15; லூக் 24:45-48; யோவா 20:21-23), இவ்வாறு உலக முடிவுரை (காண் மத் 28:20) திருச்சபையைப் பரப்பவும், ஆண்டவரால் வழி நடத்தப்பட்டுப் பணியாற்றி, அதை ஊட்டி வளர்க்கவும் வேண்டுமென்று முதலில் இஸ்ரயேல் மக்களிடமும் திருத்தூதர்களை அனுப்பினார் (காண் உரோ 1:16). இப்பணியில், ''தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்'' (திப 1:8) என்ற ஆண்டவரின் வாக்குறுதிக்கு ஏற்பப் பெந்தகோஸ்து நாளில் அவர்கள் முற்றும் உறுதிப்படுத்தப்பட்டார்கள் (காண் திப 2:1-26). எனவே, திருத்தூதர்கள் எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றி (காண் மாற் 16:20). தூய ஆவியின் தூண்டுதலால் அதற்குச் செவிமடுத்தவர்களிடமிருந்து அனைத்துலகத் திருச்சபையை ஒன்று கூட்டினர். இத்திருச்சபையை ஆண்டவர் திருத் தூதாகளின் மேல் நிறுவி, அவர்களில் முதல்வரான தூய பேதுருவின் மேல் இதைக்கட்டி எழுப்பினார். இதற்கு இயேசு கிறிஸ்துவே தலைமையான மூலைக் கல்லாத் திகழ்கிறார் (காண் திவெ 21:14; மத் 16:18; எபே 2:20).39

திருத்தூதர்களின் வழிவருபவரான ஆயர்கள்

20. கிறிஸ்து திருத்தூதர்களிட் ஒப்படைத்த இந்தத் தெய்வீகப்பணி உலக முடிவுவரை நீட்டிக்கும் (காண் மத் 28:20); ஏனெனில், அவர்களால் வாழையடி வாழையாகக் கொடுக்கப்பட வேண்டிய நற்செய்தி எக்காலத்திற்கும் திருச்சபையினது முழு வாழ்வின் ஊற்றாக அமைகிறது. இதனால்தான் பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இச்சமூகத்திலே திருத்தூதர்கள் தங்கள் வழிவருபவர்களை நியமிக்கக் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.
பணி ஆற்றுவதிலே ஆயர்களுக்குப் பல்வேறு உதவியாளர்கள் இருந்தன்.40 அதுமட்டுமின்றி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி அவர்கள் சாவிற்குப் பின்னும் தொடர்ந்து நடக்க, இறுதி விருப்பப் பத்திரத்தின் வாயிலாக நிகழ்வதுபோல், தாங்கள் தொடங்கிய வேலையை நிறைவு செய்து உறுதிப்படுத்தும் பணியைத் தங்கள் உடனடியான ஒத்துழைப்பாளர்களிடம்41 கொடுத்தனர்; அனைத்து உலக மக்கள் குழுவைக் கவனிக்கும் பொறுப்பையும் அவர்களுக்கு அளித்தனர். மக்கள் குழுவில் தான் கடவுளின் திருச்சபையை ஊட்டி வளர்க்குமாறு தூய ஆவி அவர்களை நியமித்திருந்தார் (காண் திப 20:28). எனவே, திருத்தூதர்கள் இத்தகையோரை நியமித்து, அவர்களைத் திருநிலைப்படுத்தி, அவர்கள் இறந்த பின்பு ஒப்புதல் பெற்ற வேறு சிலர் அவர்களது பணியை மேற்கொள்வதற்கான ஒழுங்கு செய்தனர்.42 திருச்சபையில் அதன் தொடக்கக் காலத்தில் இருந்தே பல்வேறு பணிகள் ஆற்றப் பெறுகின்றன் மரபு கூறும் சான்றுப்படி தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியாக வழிவந்துள்ள43 ஆயர் நிலையில் நியமிக்கப்பட்டு, திருத்தூதுவித்தை வாழையடி வாழையாக அள்ப்பவர்களின் அலுவல் இப்பணிகளுள் முதலிடம் வகிக்கிறது.44 இவ்வாறு தூய இரேனேயுவின் சாட்சிக்கு ஒப்ப, திருத்தூதர்களால் ஆயர்களாக நியமிக்கப்பட்டவர்கள் வழியாகவும், இன்றுவரை தொடர்ச்சியாக வந்திருக்கும் அவர்களின் வழித்தோன்றல்களின் மூலமாகவும் திருத்தூது மரபு உலக முழுவதிலும் வெளிக்காட்டப் பெற்றுப்45 பாதுகாக்கப்படுகிறது.46
மறைக் கோட்பாடுகளைக் கற்பிப்பவர்களாகவும் திருவழிபாட்டில் திருப்பணியாளர்களாகவும் ஆளுகையில் தொண்டர்களாகவும்47 ஆயர்கள் தங்கள் மக்கள் குழுவில் க்வுளுக்குப் பதிலாகத் தலைமை வகிக்கின்றனர்.48 இவ்வாறு திருப்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் என்னும் உதவியாளர்களுடன் சமூகத்திற்குப் பணி புரிவதிலே அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.49 திருத்தூதர்களில் முதல்வரான பேதுருவுக்குத் தனிப்பட்ட முறையிலே ஆண்டவராலும் தரப்பட்டதும், அவரின் வழி வருபவர்களுக்கு வழிவழியாகத் தரப்பட வேண்டியதுமான அலுவல் நிலையானதாக இருக்கின்றது; அதுபோல் திருச்சபையை ஊட்டி வளர்க்கும் திருத்தூதர்களின் பணியும் நிலையானதே. இப்பணி ஆயர்களின் திருக்குழுவால் என்றும் செயல்படுத்தப்பட வேண்டியது.50 எனவே, கடவுள் நிறுவியபடி, ஆயர்கள் திருச்சபையின் அருள்பணியாளர்களாகத் திருத்தூதர்களின் இடத்தைப் பெற்றுள்ளனர்51 என்றும் ஆயர்களுக்குச் செவிசாய்ப்பவர் கிறிஸ்துக்குச் செவிசாய்க்கிறார், அவர்களைப் புறக்கணிப்பவர் கிறிஸ்துவையும், அவரை அனுப்பினவரையும் புறக்கணிக்கிறார் (காண் லூக் 10:16) என்றும் திருச்சங்கம் கற்பிக்கிறது.52

ஆயர்நிலை ஓர் அருளடையாளம்

21. எனவே, ஒப்புயர்வற்ற தலைமைத் திருப்பணியாளரான ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டோத் நடுவில், திருப்பணியாளர்கள் துணையோடு செயலாற்றும் இந்த ஆயர்களில் இருக்கிறார். ஏனெனில், இறைத் தந்தையின் வலப்புறத்திலே வீற்றிருக்கும் அவர், தன் தலைமைத் திருப்பணியாளர்களின் கூட்டத்திலும்53 இல்லாமலில்லை; அனைத்திற்கும் மேலாக அவர்களுடைய தலைசிறந்த பணியின் வழியாகக் கடவுளுடைய வார்த்தையை எல்லா மக்களும் பறைசாற்றுகிறார்; நம்பிக்கையின் அருளடையாளங்களை நம்பிக்கை கொண்டோருக்கு தொடர்ந்து வழங்குகிறார்; தந்தைக்குறிய அவர்களது அலுவலின் மூலம் (காண் 1கொரி 4:14) விண்ணக மறுபிறப்பால் தமது உடலோடு புது உறுப்புகளை இணைக்கிறார்; இறுதியாக, புதிய உடன்படிக்கையின் மக்கள் முடிவில்லாப் பேரின்பத்தை நோக்கிப் பயணம் செய்யும் வேளையிலே அவர்களுடைய ஞானத்தாலும் முன்மதியாலும் இவர்களுக்கு வழிகாட்டி, நடத்திச் செல்கிறார். கடவுளின் மக்கள் குழுவை ஊட்டி வளர்க்கத் தேர்ந்து கொள்ளப்பட்ட இவ்வருள் பணியாளர்கள் கிறிஸ்துவின் ஊழியர்களூகவும் கடவுளின் மறைஉண்மைகளை அறிவிக்கும் பொறுப்பு உடையவர்களாகவும் விளங்குகிறார்கள் (காண் 1 கொரி 4:1). இறையருளைப் பற்றிய நற்செய்திக்குச் சான்று பகர்தல் நீதிக்கான செயல்பாடு ஆகியவற்றில் பெருமையுடன் ஈடுபடுவதிலும் திருப்பணி (காண் 2 கொரி 3:8-9) எனும் பணிகளும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறந்த அலுவல்களை ஆற்ற அவர்கள்மேல் எழுந்துவரும் தூய ஆவியைத் தனிப்பட்ட முறையில் பொழிந்து திருத்தூதர்களைக் கிறிஸ்து வளப்படுத்தியுள்ளார் (காண் திப 1:8; 2:4; யோவா 20:22-23). இந்த ஆவிக்குரிய கொடையைத் தம் உதவியாளர்கள் மீது கைகளை வைத்து அவர்களுக்கு அளித்தனர் (காண் திமொ 4:14; 2 திமொ 1:6-7). இன்றுவரை இக்கொடை வாழையடி வாழையாக ஆயர், திருநிலைப்பாட்டில் தரப்படுகிறது.54 ஆயர் திருநிலைப்பாட்டில் திருப்பணிநிலை என்னும் அருளடையாளத்தின் முழுமை வழங்கப்படுகிறதென்று இத்திருச்சங்கம் கற்பிக்கிறது. இந்த முழுமையே திருவழிபாடு சார்ந்த வழக்கிலும் திருச்சபைத் தந்தையர்களின் கூற்றிலும் திருப்பணி நிலையின் உச்சநிலை என்றும், திருப்பணியின் சிகரமென்றும் அழைக்கப்படுகிறது.55 இந்த ஆயர் திருநிலைப்பாடு தூய்மைப் படுத்தும் அலுவலுடன் கற்பித்தல் மற்றும் வழி நடத்தல் ஆகிய அலுவல்களையும் தருகிறது; இருப்பினும் இயல்பாக, இவற்றைத் திருச்சங்கஆட்சி ஒன்றிப்பில் தலைவரோடும் உறுப்பினரோடும் மட்டுமே செயல்படுத்த முடியும். ஏனெனில், சிறப்பாகத் திரு வழிபாட்டுச் சடங்கு முறைகளிலும் மேலை, கீழைச் சபைகளின் வழக்கிலும் காணப்படும் மரபிலிருந்து, ஒருவர் மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தும் செயலாலும் திருநிலைப்படுத்தும் போது எடுத்தாளும் சொற்களாலும் ஆவியின் அருள்கொடை வழங்கப்படுகிறதென்பதும்56 திருமுத்திரை பதிக்கப்படுகிற தென்பதும்57 தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு, ஆயர்கள் சிறப்பு மிக்க, காணக்கூடிய முறையில் கிறிஸ்துவிற்குரிய ஆசிரியர், அருள்பணியாளர், தலைமைத் திருப்பணியாளர் என்னும் பணிகளைத் தம்மேற்கொண்டு, அவருக்குப் பதிலாக செயலாற்றுகின்றனர்58 புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் திருப்பணிநிலை எனும் அருளடையாளத்தின் மூலமாக ஆயர் குழுவில் ஏற்றுக்கொள்வது ஆயர்களுக்கு உரிமையான ஒன்று.

ஆயர்குழுவும் அதன் தலைவரும்

22. ஆண்டவரின் திட்டத்தால் தூய பேதுருவும் பிற திருத்தூதர்களும் ஒரு திருத்தூதர் குழுவாக அமைந்தனர். இதைப்போன்று பேதுருவின் வழி வருபவரான உரோமை ஆயரும் இதைப்போன்று வழிவருபவர்களான ஆயர்களும் தம்முள் இணைக்கப் பெற்றிருக்கின்றனர். உலகமனைத்திலும் நியமிக்கப்பட்ட ஆயர்கள் ஒருவர் ஒருவருடனும் உரோமை ஆயருடனும் ஒற்றுமை, அன்பு, அமைதி59 ஆகியவற்றால் இணைந்திருந்தினர். மிகத் தொன்மையான இவ்வழக்கமும், முக்கியமான காரியங்களில் பலருடைய கருத்துகளை ஆய்ந்து60 பொதுவாக முடிவுகளெடுத்த61 சங்கங்களும62 ஆயர் குழுவின் பண்பையும் குழு இயல்பையும் காட்டி நிற்கின்றன. காலப்போக்கிலே கூட்டப்பற்ற பொதுச் சங்கங்களும் இவற்றையே தெளிவாக எண்பிக்கின்றன. இன்னும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரைத் தலைமைத் திருப்பணி நிலைக்கு உயர்த்துவதற்குப் பல ஆயர்கள் அழைக்கப் பெற்றனர். முற்காலத்திலேயே புகுத்தப்பட்ட இந்த வழக்கமும் இவற்றையே குறிக்கின்றது. அருளடையாளத் திருநிலைப்பாட்டாலும், குழுத் தலைவருடனும் உறுப்பினருடனும் கொண்டுள்ள திருச்சபை ஆட்சி ஒன்றிப்பினாலும் ஒருவர் ஆயர் குழுவில் உறுப்பினராகிறார்.
பேதுருவின் வழிவருபவரான உரோமை ஆயரைத் தலைவராகக் கருதி அவரோடு இணைந்து இருந்தால்தான் ஆயர் குழு அல்லது குழாமிற்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு, அருள்பணியாளர்கள் மேலும் நம்பிக்கைக் கொண்டோர் அனைவரின் மேலும் உரோமை ஆயருக்கு உள்ள முதன்மை அதிகாரம் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், உரோமை ஆயர் கிறிஸ்துவின் பதிலாளராகவும் திருச்சபை முழுவதற்கும் அருள்பணியாளராகவும் இருப்பதால், திருச்சபையின் மீது முழுமையான, ஒப்புயர்வற்ற உலகமெங்கும் பரந்த அதிகாரம் கொண்டுள்ளார். இவ்வதிகாரத்தைத் தன்னுரிமையுடன் அவர் எப்பொழுதும் செயல்படுத்தலாம். ஆனர்ல கற்பிக்கும் அதிகாரத்திலும், அருள்பணியாளருக்குறிய ஆளுகையிலும் ஆயர் குழு திருத்தூதர் குழு இடைவிடாது நிலைத்து நிற்கிறது என்றே கூறிவிடலாம். தன் தலைவரான உரோமை ஆயரோடு ஒன்றித்து இவ்வாயர் குழு திருச்சபை முழுவதன்மேல் ஒப்புயர்வற்ற, முழு அதிகாரம் கொண்டுள்ளது.63 தன் தலைவரோடு ஒன்றித்திராவிடில் இதற்கு இவ்வதிகாரம் கிடையாது. உரோமை ஆயரின் உடன்பாடு இல்லாமல் இவ்வதிகாரத்தை அது செயல்படுத்த முடியாது. ஆண்டவர் சீமோன் ஒருவரை மட்டுமே திருச்சபையின் பாறையாகவும் திறவுகோல்களைவைத்திருப்பவராகவும் ஏற்படுத்தினார் (காண் மத் 16:18-19); அவரைத் தம் மக்கள் குழு முழுவதற்கும் அருள்பணியாளராகவும் நியமித்தார் (காண் யோவா 21:15 தொ.). பேதுருவுக்குத் தரப்பட்டிருக்கும் தடை செய்வதற்கும் அனுமதிப்பதற்குமான பணி (மத் 16:19) தன் தலைவரோடு இணைந்திருக்கும் திருத்தூதர் குழுவிற்கும் தரப்பட்டிருக்கின்றதென்று தெளிவாகத் தெரிகிறது (மத் 18:18; 28:16-20).64 பலர் சேர்ந்து இக்குழு உருவாவதால் இறைமக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் பொதுமையையும், அவர்கள் ஒரே தலைவரின் கீழ்க் கூடியிருப்பதால் கிறிஸ்துவின் மக்கள் குழுவினது ஒற்றுமையையும் ஆயர்குழு எண்பிக்கிறது. இக்குழுவில் தான் ஆயர்கள், தம் தலைவரின் முதன்மையையும் தலைமையையும் உண்மையுடன் ஏற்றுக்கொண்டு, தமக்குரிய அதிகாரத்தைத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கை கொண்டோரின் நலனுக்காகவும் திருச்சபை முழுமையின் நலனுக்காகவும் செயல்படுத்துகின்றனர். திருச்சபையின் உயிர் அமைப்பையும் அதன் ஒற்றுமையையும் தூய ஆவி தொடர்ந்து வலுப்படுத்துவதால் தான் இவ்வாறு அவர்கள் செயல்படுத்த முடிகிறது. திருச்சபை அனைத்தின் மேலும் இக்குழு கொண்டிருக்கும் ஒப்புயர்வற்ற அதிகாரம் பொதுச் சங்கமென்று பேதுருவின் வழிவருபவரால் உறுதிப்படுத்தப் பெறாத அல்லது ஏற்றுக்கொள்ளப் பெற்றதாகவாவது இல்லாத எதுவும் ஒரு பொழுதும் பொதுச் சங்கம் ஆகாது. இப்பொதுச் சங்கங்களைக் கூட்டுவதும், அவற்றிற்குத் தலைமை வகிப்பதும், அவற்றை உறுதிப்படுத்துவதும் உரோமை ஆயரது தனியுரிமை.65 கீழ்வரும் சூழ்நிலைகளில் இதே குழு அதிகாரத்தை உலகம் முழுவதிலும் வாழும் ஆயர்கள் திருத்தந்தையுடன் செயல்படுத்தலாம்: குழுவின் தலைவரே அவர்களைக் குழுவாகச் செயல்பட அழைத்திருக்க வேண்டும்; அல்லது சிதறி வாழும் ஆயர்களது ஒன்றுபட்ட செயலுக்கு ஒப்புதல் அளித்திருக்கவேண்டும்; அல்லது தன்னுரிமையுடன் அதை ஏற்றுக்கொண்டிருக்கவாவது வேண்டும்.

ஆயர்குழுவில் ஆயர்களுக்கிடையே உள்ள உறவு

23. தனிப்பட்ட சபைகளுடனும் அனைத்துலகத் திருச்சபையுடனும் ஒவ்வொரு ஆயரும் ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ளனர் என்பதிலிருந்தும் அவர்கள் குழுவாக ஒன்றித்திருக்கின்றனர் எனும் உண்மை தெளிவாகிறது. உரோமை ஆயர், பேதுருவின் வழிவருபவர் என்ற முறையில், ஆயர்களுக்கும் நம்பிக்கை கொண்டோரின் கூட்டத்திற்கும் இடையே நிலவும் ஒற்றுமையின் நிலையான, காணக்கூடிய ஊற்றாகவும் அடிப்படையாகவும் அமைகிறார்.66 அனைத்து உலகத் திருச்சபையின் உருவில் அமைக்கப்பெற்ற, தனிப்பட்ட தத்தம் சபைகளில் தனித்தனி ஆயர்கள் ஒற்றுமையின் காணக்கூடிய ஊற்றாகவும் அடித்தளமாகவும் அமைந்து இருக்கின்றனர்.67 தனிப்பட்ட இசசபைகளிலும் இச்சபைகளாலும்தான் தனித்தன்மை வாய்ந்த ஒரே பொதுத் திருச்சபை நிலை நிற்கிறது.68 இக்காரணத்தாலேயே அமைதி, அன்பு, ஒற்றுமையால் ஒவ்வோர் ஈயரும் தமது சபையையும், திருத்தந்தையோடு ஒன்றித்து எல்லா ஆயர்களும் முழுத் திருச்சபையையும் குறிக்கின்றனர்.
தனிப்பட்ட சபைகளில் தலைவராக நியமிக்கப்பெற்ற ஒவ்வோர் ஆயரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள் பகுதியின் மேலன்றிப் பிற சபைகளின் மேலோ அனைத்துலகத் திருச்சபையின் மேலோ அருள்பணி அதிகாரம் செலுத்துவதில்லை. ஆனால் ஆயர் குழுவில் உறுப்பினர் என்ற முறையிலும் திருத்தூதர்களின் முறையான வழிவருபவர் என்ற முறையிலும் அவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்து நிறுவிய படியும் அவரது கட்டளைப்படியும் அனைத்துலகத் திருச்சபையின் மேல் அக்கறை காட்டக் கடமைப்பட்டுள்ளனர்.69 இவ்வாறு அக்கறை காட்டுவதால் அவர்களின் ஆட்சியுரிமை செயல்படுத்தப்படாவிடினும் அது அனைத்துலகத் திருச்சபையின் நலனுக்கு மிகவும் உதவுகிறது. எல்லா ஆயர்களும் நம்பிக்கையின் ஒற்றுமையையும் திருச்சபை முழுவதற்கும் பொதுவான ஒழுங்கு முறைகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்; கிறிஸ்துவின் மறையுடலிடமும், முக்கியமாக வறியோரும் வருந்துவோருமான அதன் உறுப்பினர்கிளடமும், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோரிடமும் (காண் மத் 5:10) அன்பு கொள்ளும்படி நம்பிக்கை கொண்டோருக்குக் கற்பிக்க வேண்டும்; இறுதியாக, நம்பிக்கை பரவுவதற்காகவும், உண்மை முழுவதன் ஒளி எல்லா மனிதருக்கும் தெரிவதற்காகவும், திருச்சபையனைத்திற்கும் பொதுவான எல்லாச் செயல்களையும் அவர்கள் பேணி வளர்க்க வேண்டும். அனைத்துலகத் திருச்சபையின் பகுதியாகத் தமது சபையைச் சரிவர ஆண்டு, சபைகளின் கூட்டுக் குழுவான முழு மறையுடலின் நலனுக்காகப் பயன்தரும் முறையில் அவர்கள் உதவுகிறார்கள் என்பது உண்மையாகும்.70
உலகமெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் அலுவல் அருள்பணியாளர் குழுவைச் சார்ந்தது. திருத்தந்தை செலஸ்தீன் எபேசுப் பொதுச்சங்கத் தந்தையர்களுக்கு நினைவுறுத்தியது போல், பொதுவான பொறுப்பைச் சுமத்தியதன்மூலம் இவர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பொதுவாகக் கட்டளை தந்தார்.71 எனவே, தனிப்பட்ட ஆயர்கள் தமது அலுவல் வாய்ப்பளிப்பதற்கு ஏற்பஈ ஒருவர் ஒருவருடனும் பேதுருவின் வழிவருபவருடனும் பணி ஆற்றும் ஒரு குழுவாக அமையக் கடமைப்பட்டுள்ளனர்; பேதுருவின் வழிவருபவரிடமே கிறிஸ்துவின் பெயரைப் பரப்பும் பெரும்பணி சிறப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.72 ஆகவே, ஆயர்கள் தாமே நேரடியாகவும் நம்பிக்கை கொண்டோரை ஊக்கத்துடன் ஒத்துழைக்குமாறு தூண்டுவதாலும் நற்செய்தி அறிவிக்கப்படும் நாடுகளுக்கு அறுவடையாட்களையும் அருள் வாழ்வுக்குரிய, உலகு சார்ந்த வளங்களையும் தந்துதவ முழுமுயற்சி எடுக்க வேண்டும். இறுதியாக, ஆயர்கள் அனைத்துலக அன்புச் சமூகத்தில், பிற சபைகளுக்கும், முக்கியமாக அடுத்திருப்பவையும் வறியனவுமான சபைகளுக்கும் பழங்காலத்தின் போற்றத்தக்க மரபுக்கு ஏற்பத் தாராளமாகச் சகோதர மனநிலையோடு உதவி அளிப்பார்களாக.
திருத்தூதர்களும் அவர் தம் வழிவந்தவர்களும் பல்வேறு இடங்களில் பல்வேறு சபைகளை நிறுவினர். இவ்வாறு பல்வேறாக நிறுவப்பட்ட சபைகள் காலப்போக்கில் கடவுள் துணையோடு உயிருள்ள உறுப்புகள் இணைந்திருப்பது போல் பல குழுக்களாக இணைந்தன. இக்குழுக்கள் ஒரே நம்பிக்கையும் திருச்சபை அனைத்திற்கும் கடவுள் அளித்த ஒரே அமைப்பையும் தவிர மற்றவைகளில் தங்களுக்கே உரிய ஒழுங்குகளையும் வழிபாட்டு முறைகளையும் இறையியல், அருள்வளம் ஆகியவற்றைச் சார்ந்த மரபுச் செல்வத்தையும் கொண்டு இலங்குகின்றன. இச்சபைகளில் சில, குறிப்பாக மறைத்தந்தையர்களுடைய பழமையான சபைகள், நம்பிக்கையின் அன்னையைப் போல் பிற சபைகளை மகள்களாகப் பெற்றெடுத்தன. இச்சபைகளோடு தாய்ச் சபைகள் அருளடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து, ஒவ்வொரு சபையும் பிற சபைகளின் உரிமைகளையும் கடமைகளையும் மதித்து இன்று வரை அன்பால் இணைந்திருக்கின்றன.73 ஒரே குறிக்கோளை அடைவதற்காகக் கூடிச்செயலாற்றும் தலச்சபைகளின் வேறுபாடு, பிளவுபடாத் திருச்சபையின் பொதுமையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதே முறையில், குழு மனப்பான்மையை நடைமுறையில் செயல்படுத்த ஆயர் குழுக்கள் பயன்தரும் பல்வகையான பணிகளில் இன்று ஈடுபட முடியும்.

ஆயரின் பணி

24. விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரம் ஆண்டவருக்கு அருளப்பட்டிருக்கிறது. இவரிடமிருந்து திருத்தூதர்களின் வழிவருபவர்கள் என்ற நிலையில் ஆயர்கள் எல்லா மக்களுக்கும் கற்பித்து, படைப்பு அனைத்திற்கும் நற்செய்தியைப் பறைசாற்றும் பணியைப் பெற்றிருக்கின்றனர். இவ்வாறு நம்பிக்கையாலும் திருமுழுக்காலும் கட்டளைகளுக்குப் பணந்து நடப்பதாலும் அனைத்துலக மக்களும் நிறைவாழ்வு பெறுவர் (காண் மத் 28:18; மாற் 16:15; திப 26:17-18). இப்பணியை நிறைவேற்ற, ஆண்டவராகிய கிறிஸ்து தூய ஆவியாரை அனுப்புவதாகத் திருத்தூதர்களுக்கு வாக்களித்தார்; அவ்வாறே பெந்தகோஸ்து நாளில் விண்ணிலிருந்து அவரை அனுப்பினார். அவரது ஆற்றலால் திருத்தூதர்கள் உலகின் கடை எல்லைவரைக்கும் நாடுகள் முன்னும், மக்கள் முன்னும், அரசர்கள் முன்னும் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருப்பதே இதன் நோக்கம் (காண் திப 1:8; 2:1 தெர் 9:15). ஆண்டவர் தம் மக்களின் அருள்பணியாளர்கிளடத்தில் ஒப்படைத்த இந்தப் பணி உண்மையான ஊழியமாகும்; விவிலியத்தில் இது 'திருப்பணி' அல்லது தொண்டு எனப் பொருள் பொதிந்த முறையில் அழைக்கப் பெறுகிறது (காண் திப 1:17ம் 25ம்; உதோ 11:13; 1 திமோ 1:12).
திருச்சபையின் ஒப்புயர்வற்ற, அனைத்துலக அதிகாரத்தால் வழக்கிலிருந்து தள்ளப்படாத, முறையான பழக்க வழக்கங்களாலோ, அல்லது இதே அதிகாரத்தால் இயற்றப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களாலோ, அல்லது நேரடியாக பேதுருவின் வழிவருபவராலோ ஆயர்களின் பணி திருச்சபையின் வழிவருபவர் ஆயர்களுக்கு இப்பணியைத் தர மறுத்தாலோ, அவர்களுடன் திருத்தூதர் ஒன்றிப்பு இல்லை என்று கூறினாலோ அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்க இயலாது.74

ஆயரின் கற்பிக்கும் பணி

25. ஆயர்களின் முக்கிய அலுவல்களிலே நற்செய்தியைப் பறைசாற்றுதல் முதலிடம் பெறுகிறது.75 ஏனெனில், நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாகச் செயலாற்றிப் புது சீடர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவருபவர்களாக ஆயர்கள் திகழ்கிறார்கள்; உண்மையான அறிவிப்பாளர்களாக அதாவது கிறிஸ்துவின் அதிகாரத்தைப் பெற்றவர்களாக நின்று தம்மிடம் ஒப்படைக்கப்பெற்ற மக்களுக்கு அவர்கள் கொண்டிருக்கவேண்டியதும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டியதுமான நம்பிக்கையைப் போதிக்கின்றனர்; தூய ஆவியின் ஒளியால் அதற்கு விளக்கம் தருகின்றனர்; இறை வெளிப்பாட்டுக் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் எடுத்து வழங்குகின்றனர் (காண் மத் 13:52); நம்பிக்கை பலன் நல்க வழிகோலுகின்றனர்; தம் மக்கள்குழு தவறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பதில் விழிப்பாய் இருக்கின்றனர் (காண் 2திமோ 4:1-4). உரோமை ஆயருடன் ஒன்றித்துக் கற்பிக்கும் ஆயர்களைத் தெய்வீக, கத்தோலிக்க உண்மையின் சாட்சிகளாக அனைவரும் மதிக்கவேண்டும்; நம்பிக்கை கொண்டோரோ நம்பிக்கையும் அறநெறியையும் பற்றி கிறிஸ்துவின் பெயரால் தங்கள் ஆயர் கூறியதைச் சமய உணர்வோடு பணிந்து ஏற்று அதைக் கடைப்பிடிக்க வேண்டும்; உரோமை ஆயர் அதிகாரத்தை பூர்வமாகப் பேசாவிட்டாலும் அவரது உண்மையான கற்பிக்கும் அதிகாரத்திற்குத் தனிப்பட்ட முறையில் உள்ளத்தாலும் அறிவாலும் சமய உணர்வுடன் நம்பிக்கை கொண்டோர் பணிந்திட வேண்டும்; இவ்வாறு, அவரது ஒப்புயர்வற்ற ஆசிரியத்தை நம்பிக்கை கொண்டோர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்; தெளிவாகத் தெரியும் அவரது கருத்திற்க்கும் உளத்திற்கும் ஏற்ப அவர்தம் முடிவுகளை மனமாரக் கடைபிடிப்பார்களாக. அவரது உள்ளத்தை, முக்கியமாக அவர் வெளியிடும் ஏடுகளின் பண்பிலிருந்தும், ஒரே கோட்பாட்டைப் பன்முறை அவர் எடுத்து விளக்குவதில் இருந்தும், அவர் பேசும் முறையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வோர் ஆயரும் தனித்தனியாக வழுவாவரம் எனும் சிறப்பியல்பைப் பெற்றிருக்கவில்லை என்றாலும் உலகம் முழுவதிலும் சிதறி இருப்பினும் தங்களுக்குள்ளும் பேதுருவின் வழிவருபவருடனும் ஒன்றித்து, நம்பிக்கையையும், அறநெறியையும் சார்ந்தவை பற்றி அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும் நேரத்தில் குறிப்பிட்ட ஒரு கோட்பாடு திண்ணமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஒருமனதாக அவர்கள் கருதினால், அப்போது கிறிஸ்துவின் மறைக்கோட்பாட்டை வழுவாமுறையில் எடுத்து உரைக்கின்றனர்.76 அவர்கள் பொதுச் சங்கங்களில் கூடியிருந்து திருச்சபை முழுவதற்கும் நம்பிக்கையையும் அறநெறியையும் கற்பிக்கிறவர்களாகவும், அவை பற்றி முடிவுகள் செய்பவர்களாகவும் விளங்கும்போது அவர்களது அதிகாரம் இன்னும் தெளிவாகக் காணக்கிடக்கின்றது. அப்பொழுது அவர்கள் தரும் விளக்கங்களை அனைவரும் நம்பிக்கை கொண்டு பணிவோடு ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும்.77
நம்பிக்கை அல்லது அறநெறியைச் சார்ந்த ஒரு கோட்பாட்டை வரையறுத்துக் கூறுவதற்காக, தமது திருச்சபை வழுவாவரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று இறைமீட்பர் விரும்பினர். தூய்மையாகப் பாதுகாக்கப் பெற வேண்டியதும், உண்மையாக விரித்து உரைக்கப் பெற வேண்டியதுமான இறைவெளிப்பாட்டுக் கருவூலம் எத்துணை விரிவு கொண்டுள்ளதோ அத்துணை விரிவு இவவழுவாவரத்திற்கும் உண்டு. ஆயர் குழுவின் தலைவரான உரோமை ஆயர் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் தம் சகோதரர் சகோதரிகளது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் (காண் லூக் 22:32) ஒப்புயர்வற்ற அருள்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருக்கிறார். அவர் நம்பிக்கையையும் அறநெறியையும் சார்ந்தவற்றை வரையறுத்துக் கூறும்போது78 தமது பணிப் பொறுப்பு காரணமாக இவ்வழுவாவரத்தைப் பெற்றுள்ளார். எனவே, அவர் வரையறுத்துக் கூறியவை திருச்சபையின் உடன்பாட்டினாலன்று மாறாகத் தங்கள் இயல்பினாலேயே திருத்தம் பெறமுடியாதவை ஆகின்றன. ஏனெனில், தூய பேதுருவுக்கு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியின் துணையுடன் தான் அவை எடுத்துரைக்கப் பெறுகின்றன. எனவே, nவுறு யாருடைய ஒப்புதலும் அவற்றிற்குத் தேவையில்லை; வேறு யாருடைய முடிவிற்கும் அவற்றை உட்படுத்தவும் இயலாது. ஏனெனில், அப்போது உரோமை ஆயர் தனி மனிதர் என்ற முறையில் தம் முடிவைக் கூறுவதில்லை; மாறாக, அனைத்துலகத் திருச்சபையின் ஒப்புயர்வற்ற ஆசிரியராகவும் இத்திருச்சபைக்குரிய வழுவாவரம் எனும் அருள் கொடையைத் தனிப்பட்ட முறையிலே பெற்று இருப்பவராகவும் கத்தோலிக்க நம்பிக்கைக் கோட்பாடுகளை விரித்துரைக்கிறார் அல்லது பாதுகாக்கிறார்.79 பேதுருவின் வழிவழிவருபவருடன் இணைந்து ஒப்புயர்வற்ற கற்பிக்கும் அதிகாரத்தை ஆயர்குழு செயல்படுத்தும்போது, இந்த ஆயர்குழுவும் திருச்சபையினது வாக்களிக்கப்பட்ட வழுவா வரத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஆயர்குழு வரையறுத்துக் கூறுபவை ஒருபொழுதும் திருச்சபையினது உடன்பாட்டைப் பெறாமல் இருப்பதில்லை. தூய ஆவியின் செயலே இதற்குக் காரணம். தூய ஆவியின் இச்செயலால் தான் கிறிஸ்துவின் முழு மக்கள்குழுவும் நம்பிக்கையின் ஒற்றுமையில் பாதுகாக்கப்பட்டு முன்னேறிச் செல்கிறது.80
உரோமை ஆயர் அல்லது அவருடன் இணைந்த ஆயர்குழு கோட்பாட்டை வரையறுக்கும்போது, இறை வெளிப்பாட்டிற்கு ஏற்பவே அது எடுத்துரைக்கப் பெறுகின்றது. இந்த இறை வெளிப்பாட்டை ஏற்று அதன்படியே அனைவரும் ஒழுகவேண்டும். எழுத்து வடிவிலும் மரபு வழியிலும் வந்துள்ள இவ்வெளிப்பாடானது முறையான ஆயர் வழிவருகையாலும், முக்கியமாக உரோமை ஆயர் காட்டும் அக்கறையாலும் வாழையடி வாழையாகத் தரப்பெறுகிறது. உண்மையில் ஆவியினது வழிகாட்டும் ஒளியால் திருச்சபையில் இது தூய்மையாகப் பாதுகாக்கப் பெற்று, உண்மையாக விரித்துரைக்கப் பெறுகிறது.81 இறை வெளிப்பாட்டைச் சரியாக ஆராய்ந்து, ஏற்ற முறையில் அதை எடுத்துக் கூறுவதற்கு உரோமை ஆயரும் பிற ஆயர்களும் தங்களது பணிப் பொறுப்புக்கும் பொருளின் முக்கியத்துவத்திற்கும் ஏற்றபடி தகுந்த வழிவகைகளுடன் பெருமுயற்சி எடுக்கின்றனர்.82 எனினும் நம்பிக்கையின் தூய கருவூலத்தைச் சார்ந்தவையாகப் புதிய பொது வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.83

ஆயரின் தூய்மைப்படுத்தும் பணி

26. திருப்பணிநிலையின் நிறைவைக் கொண்டிருக்கும் ஆயர் முக்கியமாக நற்கருணையில், ''ஒப்புயர்வற்ற திருப்பணி நிலையின் அருளைப் பகிர்ந்தளிப்பவராக இருக்கிறார்'';84 நற்கருணையை அவரே ஒப்புக்கொடுக்கிறார், அல்லது அதை ஒப்புக்கொடுக்க ஆவன செய்கிறார்;85 இந்நற்கருணையால்தான் திருச்சபை தொடர்ந்து வாழ்கிறது, வளர்கிறது. தங்கள் அருள்பணியாளருடன் இணைந்தவையும் புதிய ஏற்பாட்டில் 'சபைகள்' என அழைக்கப்படுபவையுமான86 நம்பிக்கை கொண்டோரின் முறையான எல்லா வட்டாரச் சபைகளிலும் கிறிஸ்துவின் இத்திருச்சபை உடனிருக்கிறது. ஏனெனில், தங்களது வட்டாரத்தில் தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ளத்துறுதியோடும் (காண் 1தெச 1:5) ஆண்டவரால் அழைக்கப் பட்ட புது மக்களே இச்சபைகள். இச்சபைகளில் கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றுவதனால் நம்பிக்கை கொண்டோர் ஒன்று சேர்க்கப்பெறுகிறார்கள்; மேலும், ''ஆண்டவரின் உடலாலும் இரத்தத்தாலும் சகோதரர் சகோதரிகளாலான குழுவாக எல்லாரும் இணையுமாறு''87 ஆண்டவரது இரா உணவாகிய மறை நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. ஆயர் திருப்பணி ஆற்ற,88 பலிபீடத்தைச் சுற்றிக் குழுமியிருக்கும் எல்லாச் சபைகளிலும் மறையுடலின் அன்பு, ஒற்றுமை எனும் அடையாளம் தெளிவாகப் புலப்படுகிறது. ''மறையுடலின் இவ்வொற்றுமை இல்லையென்றால், நிறைவாழ்வு இல்லை''89 பலமுறைகளில் இச்சபைகள் சிறியனவாகவும் வறியனவாயும் இருந்தபோதிலும் அல்லது சிதறிக் கிடந்தபோதிலும் இவைகளில் கிறிஸ்து உடனிருக்கிறார். இவருடைய ஆற்றலால்தான் ஒரே, தூய பொதுவான, திருத்தூதர் திருச்சபை ஒன்றுகூட்டப் பெறுகிறது.90 ஏனெனில், ''கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் நாம் பங்கு கொள்வதன் விளைவாக எதை உண்கிரோமோ அதுவாக நாம் மாறுவதன்றி வேறெதுவும் நிகழ்வதில்லை''.91
முறையான எல்லா நற்கருணைக் கொண்டாட்டங்களையும் ஒழுங்குபடுத்துபவர் ஆயர். மாட்சிமிகு கடவுளுக்குக் கிறிஸ்தவ சமயத்தின் வழிபாட்டைச் செலுத்துவதும் அதை ஆண்டவருடைய கட்டளைகளுக்கும் திருச்சபையின் சட்டங்களுக்கும் தமது மறைமாவட்டத்திற்காகத் தாமே தீர்மானழத்துள்ள ஒழுங்குகளுக்கும் ஏற்ப நடத்துவதும் ஆயரின் பணிகளாகும்.
இவ்வாறு ஆயர்கள் மக்களுக்காகக் கடவுளை வேண்டுவதாலும், உழைப்பதாலும், கிறிஸ்துவினது தூய்மை நிலையின் நறைவிலிருந்து ஏராளமான, பல்வகையான கொடைகளை வாரி வழங்குகின்றனர்; வார்த்தையின் பணியால் நம்பிக்கை கொண்டோருக்கு நிறைவாழ்வளிக்கும் கடவுளின் வல்லமையை அளிக்கின்றனர் (காண் உரோ 1:16); அருள் அடையாளங்களின் வழியாக நம்பிக்கை கொண்டோரைத் தூய்மைப் படுத்துகின்றனர். தங்கள் அதிகாரத்தால் இவவருள் அடையாளங்களை ஒழுங்காக, பயன்தரும் முறையில் வழங்க வழி செய்கின்றனர்.92 கிறிஸ்துவின் அரசத் திருப்பணிநிலையில் பங்குதரும் திருமுழுக்கு அளித்தலையும் இவர்களே கண்காணித்து வருகின்றனர்; உறுதிப்பூசுதலை வழக்கமாக அளிப்பவர்களுள், திருப்பணி நிலைகளை வழங்குபவர்களும், ஒப்புரவு முயற்சிகளை ஒழுங்கு படுத்துபவர்களும் இவர்களே. திருவழிபாட்டிலும் முக்கியமாகத் திருப்பலியிலும் தம் பங்கை நம்பிக்கையோடும் வணக்கத்தோடும் தம மக்களை நிறைவேற்றுமாறு ஆர்வத்துடன் அவர்களை ஆயர்கள் ஊக்குவித்துக் கற்பிக்கின்றனர். இறுதியாக, தம்மிடம் ஒப்படைக்கப் பெற்றுள்ள மக்கள் குழுவுடன் நிலைவாழ்விற்கு வந்து சேரும்படியாக ஆயர்கள் தம் நடத்தையை எல்லாத் தீமையினின்றும் விலக்கி, இயன்றவரையில் ஆண்டவரது உதவியால் நன்னடத்தையாக மாற்றித் தங்கள் பொறுப்பிலுள்ள மக்களைத் தங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியால் நடத்திச் செல்ல வேண்டும்.93

ஆயரின் அருள்பணி

27. ஆயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பெற்ற தனிப்பட்ட சபைகளைக் கிறிஸ்துவின் பதிலாளர்களாகவும் தூதுவர்களாகவும் இருந்து94 ஆள்கின்றனர்; தங்கள் அறிவுரைகளாலும், ஊக்குவிக்கும் சொற்களாலும், முன்மாதிரியாலும், ஏன், தங்களது செல்வாக்காலும், திருஅதிகாரத்தாலும் இச்சபைகளை ஆள்கின்றனர்; ஆனால், பெரியவர் சிறியவர்போலவும் ஆட்சி புரிபவர் தொண்டு புரிபவர் போலவும் இருக்கட்டும் (காண் லூக் 22:26-27) என்னும் கூற்றi நினைவில்கொண்டு தம் மக்கள் குழுவை உண்மையிலும், தூய்மைநிலையிலும் உருவாக்குவதற்கு இவ்வதிகாரத்தைச் செயல்படுத்துகின்றனர். இவவதிகாரம் ஆயர்களுக்கே உரியது; ஆயர் பணி சார்ந்தது; நேரடியானது. எனினும் இறுதியாகத் திருச்சபையினது ஒப்புயர்வற்ற அதிகாரத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது. திருச்சபையின் அல்லது நம்பிக்கை கொண்டோரின் நலனை முன்னிட்டு ஆயரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பெறலாம். இவவதிகாரத்தால் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்காகவும் சட்டங்கள் இயற்றுவதற்கும் தீர்ப்புகள் வழங்குவதற்கும் வழிபாட்டையும் திருத்தூதுப் பணியையும் சார்ந்த எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஆயர்களுக்கு உரிமையும், ஆண்டவர் முன் கடமையும் உண்டு.
அருள்பணி அதாவது தங்கள் மக்கள் குழுவின் மேல் ஒவ்வொரு நாளும் இடைவிடாது கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அவர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப் பெற்றிருக்கிறது. உரோமை ஆயரின் பதிலாள்களாக அவர்களைக் கருதக்கூடாது. ஏனெனில், அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரம் அவர்களுக்கே உரித்தானது. உண்மையாகவே தாங்கள் வழிநடத்தும் மக்களின் தலைவர்கள் எனவும் அவர்கள் அழைக்கப் பெறுகின்றனர்95
எனவே அவர்களது அதிகாரம் ஒப்புயர்வற்ற, அனைத்துலகிலும் பரந்த திருத்தந்தையின் அதிகாரத்தால் அழிக்கப்படுவதில்லை. மாறாக, தமது திருச்சபையில் ஆண்டவர் கிறிஸ்து ஏற்படுத்திய ஆட்சி அமைப்பைத் தூவி ஆவி தவறாமல் காத்துவருவதால், இவ்வதிகாரம் உறுதிபெற்று, உரமபெற்று, நிலைநாட்டப் பெறுகிறது.96
குடும்பத் தலைவராகிய தந்தை இறைவன் தமது குடும்பத்தை வழிநடத்த ஆயரை அனுப்புகிறார். எனவே ஆயர் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் (காண் மத 20:28; மாற் 10:45), மக்கள் குழுவாகிய ஆடுகளுக்குத் தம் உயிரைத் தரவும் வந்தவரான (காண் யோவா 10:11), நல்ல மேய்ப்பரின் மாதிரியைத் தம் கண்முன் கொண்டிருப்பாராக மனிதரிடமிருந்து தேர்ந்துகொள்ளப்பட்டவரும், வலுவின்மைக்கு உட்பட்டவருமாக அவர் இருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் அவர் பரிவுகாட்ட முடியும் (காண் எபி 5:1-2). தம் பொறுப்பில் உள்ளவர்களை அவர் உண்மையான பிள்ளைகளாகப் பேணுவாராக் தம்மோடு ஆர்வமுடன் ஒத்துழைக்க அவர்களைத் தூண்டுவாராக. அவர்களுக்குச் செவிமடுக்க அவர் மறுத்தலாகாது. அவர்களைப் பற்றிக் கடவுளிடம் ஒருநாள் கணக்குக் கொடுக்க வேண்டிய ஆயர் (காண் எபி 13:17) இறைவேண்டலாலும், பறைசாற்றலாலும், பிறரன்புப் பணிகளாலும் அவர்களை மடடுமின்றி, இன்னும் ஆண்டவரில் தம்மிடம் ஒப்படைக்கப் பெற்றவர்களாகக் கருதிக் கவனித்துக்கொள்வாராக. திருத்தூதரான தூய பவுலைப்போல் அனைவருக்கும் அவர் கடமைப்பட்டவராய் இருப்பதால் எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கும் (காண் உரோ 1:14-15), திருத்தூது மற்றும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளிலே ஈடுபடத் தம் இறைமக்களை ஊக்குவிக்கவும் ஆவலுடன் செயல்படுவாராக. நம்பிக்கை கொண்டவர்களோ, அனைத்தும் ஒன்றித்திருப்பதற்காகவும்97 கடவுளது புகழ் விளங்குவதற்காகவும் (காண் 2 கொரி 4:15) திருச்சபை கிறிஸ்துவுடனும், கிறிஸ்து தந்தையுடனும் இருப்பது போல் ஆயருடன் இணைந்திருக்க வேண்டும்.

திருப்பணியாளர்கள்

28. தந்தை, கிறிஸ்துவை அர்ப்பணித்து உலகிற்கு அனுப்பினார் (காண் யோவா 1036). கிறிஸ்து தம் திருத்தூதர்களின் வாயிலாக, அவர்களுக்கு பின் ஆயர்களைத் தமது திருநிலைப்பாட்டிலும், தாம் பணிப்பொறுப்பைத் திருச்சபையில் தம் கீழ் உள்ள பல்வேறானவர்களுக்குப் பல்வேறு நிலைகளில் முறையாக அளித்திருக்கின்றனர். இவ்வாறு, கடவுலால் நிறுவப்பட்ட திருச்சபையின் பணியை முற்காலத்திலிருந்தே ஆயர்கள், திருப்பணியாளர்கள், திருத்தொண்டர்கள் என அழைக்கப் பெறுபவர்கள்99 வேறுபட்ட நிலைகளில் நிறைவேற்றி வருகின்றனர். திருப்பணியாளர்கள், திருப்பணி நிலையின் உச்சநிலையைப் பெற்றிராதிருப்பினும், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஆயரைச் சார்ந்திருப்பினும், திருப்பணிநிலை மேன்மையில் ஆயருடன் ஒன்றுபட்டிருக்கின்றனர்;100 மேலும், திருப்பணிநிலையென்னும் அருளடையாளத்தின் ஆற்றலால்,101 நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும் நம்பிக்கை கொண்டோருக்கு அருள்பணியாளராகப் பணிபுரிவதற்கும் திருவழிபாடு நிகழ்த்துவதற்கும் சாயலில் (காண் எபி 5:1-10; 7:24; 9:11-28) புதிய ஏற்பாட்னெ; உண்மையான திருப்பணியாளர்களாகத் திருநிலைப் படுத்தப்பெற்றுள்ளனர்.102 தங்களது பணியின் நிலைக்கு ஏற்ப ஒரே இணைப்பாளரான கிறிஸ்துவின் (1 திமொ 2:5) அலுவலில் பங்குபெற்று, எல்லாருக்கும் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றனர்; நற்கருணை வழிபாட்டில் அதாவது திருப்பந்தியில் மிகச் சிறந்த முறையில் தங்களது திருப்பணியை ஆற்றுகின்றனர்; இவ்வழிபாட்டில் கிறிஸ்துவுக்குப் பதிலாகச் செயலாற்றி,103 அவதரது மறைபொருளைப் பறைசாற்றி, நம்பிக்கை கொண்டோர் ஒப்புக்கொடுப்பவற்றை அவர்களின் தலைவரது பலியோடு இணைக்கின்றனர்; மாசற்ற பலிப்பொருளாக ஒரே முறை தம்மைத்தாமே தந்தைக்கு ஒப்புக் கொடுத்த (காண் எபி 9:11-28) கிறிஸ்துவின் பலியாகிய புதிய ஏற்பாட்டின் ஒரே பலியை ஆண்டவர் மீண்டும் வரும்வரை (காண் 1 கொரி 11:26) திருப்பலியில் புதுப்பித்துச் செயல்படுத்துகின்றனர்;;104 உளம் வருந்தும் நம்பிக்கை கொண்டோரைக் கடவுளோடு மீண்டும் ஒப்புரவாக்கவும், நோயுற்றிருக்கும் நம்பிக்கை கொண்டோரின் நோயைத் தணிப்பதற்குமான பணியைச் சிறப்பாக நிறைவேற்றுகின்றனர்;; நம்பிக்கை கொண்டோரின் தேவைகளையும் வேண்டல்களையும் இறைத் தந்தையின் முன் கொணர்கின்றனர் (காண் எபி 5:1-4);; தங்கள் அதிகாரத்தின் எல்லைக்குள் நின்று அருள்பணியாளரும் தலைவருமான கிறிஸ்துவின் பணியை நிறைவேற்றி,105 கடவுளின் குடும்பத்தை ஒருமனப்பட்ட சகோதரக் குழுவாக106 ஒன்று கூட்டுகின்றனர்;; தூய ஆவியால் இறைத் தந்தையிடம் கிறிஸ்துவின் வழியாக அதை இட்டுச் செல்கின்றனர். மக்கள் கழுவின் நடுவில் நின்று, கடவுளை அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் வழிபடுவர் (காண் யோவா 4:24). இறுதியாக, ஆண்டவரின் சட்டத்தில் தாங்கள் தியானித்து வாசிப்பதை நம்பி, நம்புவதைப் போதித்து, போதிப்பதை வாழ்வில் கடைபிடித்து,107 கற்பிப்பதிலும் இறைவார்த்தையை அறிவிப்பதிலும் ஈடுபட்டு உழைக்கின்றனர் (காண் 1 திமோ 5:17).
திருப்பணியாளர்கள் ஆயர்குழுவின் முன்மதியுள்ள உடன் உழைப்பாளர்களாகவும்108 அதன் உதவியும் கருவியுமாகவும் விளங்குகின்றார்கள்;; கடவுளின் மக்களுக்கு ஊழியம் செய்ய அவர்கள் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள். பல்வேறுபட்ட அலுவல்களில் திருப்பணியாளர்கள் ஈடுபட்டிருப்பினும் தங்களது ஆயரோடு சேர்ந்த ஒரே திருப்பணியாளர் குழுவாக அமைகின்றனர்.109 நம்பிக்கையுடனும் பெருந்தன்மையுடனும் தங்கள் ஆயருடன் இணைந்துள்ள இவர்கள், நம்பிக்கை கொண்டோரின் வட்டாரச் சபை ஒவ்வொன்றிலும் அவரை ஒருவகையில் உடனிருக்கச் செயலாற்றுகிறார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டவரது மக்கள் குழுவின் பகுதியை ஆயரின் அதிகாரத்தின் கீழ்த் தூய்மைப்படுத்தி வழிநடத்தும் அவர்கள், அனைத்துலகத் திருச்சபையைத் தங்கள் வட்டாரத்தில் காணக்கூழய முறையில் விளங்கச் செய்கிறார்கள்;; கிறிஸ்துவின் முழு உடலைக் கட்டி எழுப்புவதிலும் அவர்கள் சிறந்த முறையில் உதவி அளிக்கிறார்கள் (காண் எபே 4:12). ஆகையால், அவர்கள் கடவுளின்பிள்ளைகளது நலனையே எப்போதும் நாடி நின்று மறைமாவட்டம் முழுவதிலும் ஏன் திருச்சபை முழுவதிலும் அருள்பணி நடைபெறுமாறு உதவ முயற்சி செய்வார்களா. இவவாறு, ஆயரின் திருப்பணி நிலையிலும், அலுவலிலும் பங்கு கொள்வதால் திருப்பணியாளர்கள் உண்மையாக அவரைத் தம் தந்தையாக ஏற்று, மரியாதையுடன் அவருக்குக் கீழ்ப்படிவார்களாக. கிறிஸ்மு தம் சீடர்களைப் பணியாளர்கள் என்றல்ல, மாறாக நண்பர்கள் என்று அழைத்ததுபோல் (காண் யோவா 15:15) ஆயரும் தம் உடன் உழைப்பாளர்களான திருப்பணியாளர்களும் தங்கள் நிலையாலும் பணியாலும் ஆயர்குழுவோடு இணைக்கப் பெற்றிருக்கின்றனர்; அஃதுடன் தங்களது அழைப்பிற்கும் அருளுக்கும் ஏற்பத் திருச்சபை முழுவதின் நலனுக்காக ஊழியம் செய்கின்றனர்.
தாங்கள் யாவருக்கும் பொதுவான திருப்பணிநிலையாலும் அலுவலாலும் எல்லாத் திருப்பணியாளரும் தம்முள் நெருங்கிய உறவு கொண்ட சகோதரராய் இணைக்கப்பெற்றிருக்கின்றனர். அருள் வாழ்வுக்குரிய மற்றும் உலகு சார்ந்த காரியங்களிலும் அருள்பணியிலும் தனி வாழ்விலும் குழுக்களிலும், வாழ்வாலும் பணியாலும் அன்பாலும் ஒன்றித்து ஒருவர்க்கொருவர் உதவி செய்வதில்தான் இந்தச் சகோதர உறவு துலங்கும்.
கிறிஸ்துவில் தம்மைத் தந்தையராகக் கருதி திருமுழுக்காலும் போதனையாலும் தாங்கள் அருள்முறையில் பெற்றெடுத்த நம்பிக்கை கொண்டோரை (காண் 1 கொரி 4:15; 1 பேது 1:23) அவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரே இறைமக்கள் குலம் முழுமையாகக் கடவுளது திருச்சபை என்னும் பெயரால் தங்கள் வட்டாரச் சமூகமும் தகுதியுடன் அழைக்கப் பெறுவதற்காக மன உவப்புடன் மக்கள் குழுவுக்கு முன் மாதிரிகளாக நின்று (1 பேது 5:3), ஏற்ற முறையில் தலைமை தாங்கி, அதற்குத் தொண்டு செய்ய வேண்டும் (காண் 1 கொரி 1:2; 2 கொரி 1:1, பர). தங்களது அன்றாட வாழ்வாலும் அக்கறையாலும் நம்பிக்கைகொண்டோருக்கும் நம்பிக்கை இல்லாதாருக்கும், கத்தோலிக்கருக்கும் கத்தேரிக்கர் அல்லாதாருக்கும் உண்மையிலேயே திருப்பணியாளருக்குரிய அருள்பணியின் தன்மையைக் காட்ட வேண்டும் என்பதையும், வாய்மையாலும் வாழ்வாலும் எல்லாருக்கும் தாங்கள் நற்சான்று பகரவேண்டும் என்பதையும் கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றிருந்தும் அருளடையாள வார்;வைக் கைவிட்டுவிட்டவர்களை அல்லது நம்பிக்கையையே உதறிவிட்டவர்களை நல்லஅருள்பணியாளர்களைப் போலத் தாமே தேடிச் செல்ல வேண்டும் (காண் லூக் 15:4-7) என்பதையும் நினைவில் கொண்டிருப்பார்களாக.
அரசியல், பொருளாதார, சமூக ஒன்றிப்பை நோக்கி மனிதகுலம் மேன்மேலும் விரைந்துகொண்டிருக்கும் இக்காலத்தில், கடவுளது குடும்பத்தில் மனிதகுலம் முழுவதும் ஒன்றினையும் படியாக ஆயர்களதும் உரோமைம ஆயரதும் தலையின்கீழ் இணைந்து அக்கறை காட்டி உழைத்து; பிளவுக்கு வழிவகுக்கக் கூடிய யாவற்றையும் திருப்பணியாளர்கள் அழித்தொழிப்பார்களாக.

திருத்தொண்டர்

29. திருச்சபையினது ஆடசியமைப்பின் தாழ்ந்ததொரு படியில் திருத்தொண்டர்கள் இடம்பெறுகின்றனர். ''திருப்பணியாளர் நிலைக்காக அல்ல, தொண்டுக்காகவே'' இவர்கள் மீது கைகள் வைக்கப்படுகின்றன.110 அருளடையாள அருளால் வலிமைபெற்று திருவழிபாட்டுப் பணியிலும், வார்த்தைப் பணியிலும், அன்புப் பணியிலும் ஆயருடனும் அவரது திருப்பணியாளர் குழுவுடனும் ஒன்றித்து இறைமக்களுக்கு இவர்கள் ஊழியம் செய்கின்றனர். முறையான அதிகாரிகள் அளிக்கும் ஒழுங்குகளுக்கு ஏற்ப ஆடம்பரமாகத் திருமுழுக்கு அளிப்பதும், நற்கருணையைப் பாதுகாப்பதும் பகிர்ந்தளிப்பதும், திருச்சபையின் பெயரால் திருமணத்தில் சாட்சியாய் நின்று ஆசி அளிப்பதும், சாகும் நிலையில் இருப்பவர்களுக்கு இறுதி வழியுணவு கொண்டுவருவதும், விவிலியத்தை நம்பிக்கை கொண்டோருக்கு வாசிப்பதும்ஈ, மக்களுக்கு அறிவுரை நல்கி அவர்களை ஊக்குவிப்பதும், நம்பிக்கை கொண்டோரது வழிபாட்டிற்கும் இறைவேண்டலுக்கும் தலைமை வகிப்பதும், அருள்வேண்டல் குறிகள் அளிப்பதும், இறுதிச் சடங்குகளையும் அடக்கச் சடங்குகளையும் நிறைவெற்றுவதும் திருத்தொண்டரைச் சார்ந்த கடமைகளாகும். அன்பு செய்யும் கடமையும் வழிநடத்தும் கடமையும் பூண்டுள்ள திருத்தொண்டர்கள் தூய பொலிக்கார்ப்பின் அறிவுரையைக் கருத்தில் கொள்வார்களாக: ''இரக்கமுள்ளவர்களாகவும், கடமையில் கருத்து உள்ளவர்களாகவும், எல்லாருக்கும் பணியாளராக மாறிய ஆண்டவரைப் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருங்கள்''.111
திருச்சபையின் வாழ்விற்கு மிகத்தேவையான இக்கடமைகளை இன்று இலத்தீன் சபையில் வழக்கிலிருக்கும் ஒழுங்கின்படி பற்பல பகுதிகளில் எளிதாக நிறைவேற்ற முடிவதில்லை. எனவே, வருங்காலத்தில் திருத்தொண்டர் நிலையைத் திருச்சபையினது ஆட்சியமைப்புக்கே உரிய, நிலையான ஒருன பணிப்பொறுப்பாகத் திரும்பவும் அமைக்கலாம். அருள்பணிக்கு இத்தகைய திருத்தொண்டர்களை நியமிப்பது ஏற்றதா என்றும், எங்கெங்கு நியமிப்பது என்றும் முடிவு செய்வது பல்வேறு மண்டலங்களில் திருத்தந்தையின் ஒப்புதலுடன் அமைந்திருக்கும் தகுதிவாய்ந்த ஆயர் குழுக்களுக்கு உரியது. உரோமை ஆயரின் அனுமதியுடன் சற்று முதிர்ந்த வயதினரான ஆண்கள் - அவர்கள் திருமணமானவர்களாயினும் - இத்திருத்தொண்டர் நிலையைப் பெறலாம். தகுதி n பற்று இளைஞர்களுக்கும் இது வழங்கப் பெறலாம். எனினும், இவர்களைப் பொறுத்தமட்டில் மணத்துறவுச் சட்டம் நிலைத்திருக்க வேண்டும்.

இயல் 4
பொதுநிலையினர்

திருச்சபையில் பொது நிலையர்

30. திருச்சபை ஆட்சியாளரின் அலுவல்களைத் தெளிவுபடுத்தியபின் பொது நிலையினர் என அழைக்கப்படும் கிறிஸ்தவ நம்பிக்கைகொண்டோரின் நிலையைப் பற்றி ஆராய்வதிலே விருப்புடன் தன் கவனத்தைச் செலுத்துகின்றது திருச்சங்கம் இறைமக்களைப் பற்றிக் கூறப்பட்டவை அனைத்து; பொது நிலையினர், துறவறத்தார், திருப்பணி நிலையினர் ஆகிய யாவருக்கும் பொதுவானவையே. எனினும், ஆண், பெண் எனும் இருபாலரும் அடங்கிய பொது நிலையினரின் நிலைமை, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணி ஆகியவற்றின் காரணமாக மேற்கூறப்பட்டவற்றில் சில தனிப்பட்ட முறையில் இவர்களுக்குப் பொருந்துவனவாகும். இன்றைய தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, இவற்றின் அடிப்படைகளை அதிகமாக ஆராய வேண்டும். முழுத் திருச்சபையின் நன்மைக்குப் பொது நிலையினர்pன் உதவி எத்துணை தேவையானது என்று அருள்பணியாளர் நன்கு அறிவர். ஏனெனில், உலகை மீட்கும் பணியாகிய திருச்சபையின் அலுவல் முழுவதையும் தாங்கள் மட்டுமே தனிமையில்செய்து மடிக்கத் தங்களைக் கிறிஸ்து நியமிக்கவில்லை என அவர்கள் அறிவார்கள், மாறாக, தங்கள் கிறிஸ்தவ மக்கள் அவரவர் நிலைமைக்குத் தகுந்தாற்போல் ஒருமனதாய்த் திருச்சபையின் பொதுப்பணியில் ஒத்துழைக்குமாறு அவர்கள்தம் பணிகளையும் அருள்கொடைகளையும் இசைந்து ஏற்றுக் கொள்வது தங்களது சீரிய கடமை என்பதை அருள்பணியாளர்கள் நன்கு அறிவர். ஏனெனில், ''அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால் தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசை நார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது'' (எபே 4:15-16).

பொது நிலையினரின் இயல்பும் பணியும்

31. பொது நிலையினர் என்னும் சொல் திருப்பணி நிலையினரும் திருச்சபையின் இசைவு பெற்ற துறவற நிலையினரும் நீங்கலாக ஏனைய கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் எல்லாரையும் குறிக்கும். இவர்கள் திருமுழுக்கின் மூலம் கிறிஸ்துவோடு ஓருடலாக்கப் பெற்று, இறைமக்களாக உருப்பெறுகின்றனர்; தங்களுக்கே உரித்தான முறையில் கிறிஸ்துவின் திருப்பணி நிலை, இறைவாக்கு உரைக்கும், மற்றும் அரச அலுவல்களில் பங்குகொள்கின்றனர்; திருச்சபையில் கிறிஸ்தவர் அனைவரும்ஆற்ற வேண்டிய பணியிலே தங்களுக்குரிய பங்கை உலகிலே ஆற்றி வருகின்றனர்.
உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொது நிலையினருக்கு உரியதும், தனிப்பட்ட விதத்தில் அவர்களைச் சார்ந்ததுமாகும். திருப்பணிநிலையினர் சில வேளைகளில் உலகு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம்; உலகத்தாருக்குரிய வார்;க்கைத் தொழிலையே மேற்கொண்டிருக்கலாம். இருப்பினும், தங்களது தனிப்பட்ட அழைப்பினால், திருப்பணிக்கடுத்த அலுவல்களுக்காகவே அவர்கள் சிறப்பாக, தனிப்பட்ட விதத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறர்கள். இவ்வாறே, துறவற வாழ்வைத் தழுவியோரும் மலைப்பொழிவின் மனப்பான்மையாலன்றி வேறுவகையில் உலகை மாற்றி அமைக்கவும் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கவும் இயலாது எனும் உண்மைக்குத் தங்களது துறவற நிலையினர்மூலம் சிறப்பு மிக்கச் சான்று கூறி நிற்கின்றனர். உலகுசார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு உழைக்குங்கால், அவற்றைக் கடவுளின் திட்டப்படி நெறிப்படுத்துவதின் மூலம் கடவுளின் ஆட்சியை அமைக்கத் தேடுவது தங்களின் தனிப்பட்ட அழைப்பால் பொது நிலையினரைச் சார்ந்தது. இவ்வுலகில் அதாவது பல்வேறான உலக அலுவலகள், வேலைகள், சாதாரண குடும்ப, சமூக வாழ்க்கை நிலைகள் ஆகியவற்றின் நடுவில் அவர்கள் வாழ்கின்றனர். இவற்றோடு அவர்களது வாழ்வு, ஒருவாறு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. இங்குதான் கடவுளின் அழைப்பை அவர்கள் எதிர்கொள்கின்றனர். நற்செய்தி மனப்பான்மையால் வழிநடத்தப் பெற்றுத் தங்களுக்குரிய அலுவலை ஆற்றுவதன் மூலம் அவர்கள் புளிப்புமாவு போல உலகிலிருந்துகோண்டே உலகைத் தூய்மைப்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர்; மேலும், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு அவைகளினால் ஒளிர்கின்ற தங்கள் வாழ்வின் சான்றால் கிறிஸ்துவைப் பிறருக்குக் காட்டுகின்றனர். தங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் உலகுசார்ந்த செயல்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்து, அவற்றை ஒழுங்குபடுத்தும் பணி தனிப்பட்ட முறையில்பொது நிலையினரைச் சார்ந்தது. இப்பணியால் உலகு சார்ந்த செயல்பாடுகள் கிறிஸ்துவின் மனத்திற்கேற்ப அமைந்து, வளர்ந்து, படைத்தவரும் மீட்பவரும் ஆகிய கடவுளுகு;குப் புகழாக அமையும்.

கடவுளின் மக்கள் என்னும் முறையில் பொது நிலையினரின் மேன்மை

32. தூய திருச்சபை கடவுள் நிறுவியபடி, வியத்தகு வேறுபாடுகளுடன் அமையப்பெற்று ஆளப்பெறுகின்றது. ''ஒரே உடலில் நமக்கு உறுப்புகள் பல உள. அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை. அது போலவே, நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்து இருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்'' (உரோ 12:4-5). எனவே, தேர்ந்துகொள்ளப்பட்ட இறைமக்கள் குலம் ஒன்றே; ''ஆண்டவர் ஒருவNர் நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே'' (எபே 4:5). கிறிஸ்துவில் அடைந்த மறுபிறப்பினால் பிறக்கும் மாண்பு அதன் உறுப்பினர் யாவருக்கும் பொதுவானதே; பிள்ளைகளுக்குரிய அருளும், நிறைவை அடைய அவர்கள் பெற்றுள்ள அழைப்பும் பொதுவனவையே; ஒலரே நிறைவாழ்வு, ஒரே எதிர்நோக்கு மற்றும் பிளவுபடா இறையன்பு அவர்களுக்கு உரியது. எனவே, கிறிஸ்துவிலும்திருச்சபையிலும் இனம், நாடு, சமூக நிலைமை, பால் என்பனவற்றின் அடிப்படையிலே எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை. ஏனெனில் ''இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும் அடிமைகள் என்றும் உலிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்'' (கலா 3:28 கிரேக்க மூலம்; காண் கொலோ 3:11).
எனவே, திருச்சபையிலே அனைவரும் ஒரே வழியில் நடந்து செல்லாவிடினும் இதில் தூய்மை நிலையடைய யாவரும் அழைக்கப்பெறுகின்றனர்; கடவுளினால் விளைந்த ஏற்புடமையின் அடிப்படையில் மதிப்புயர்ந்த ஒரே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர் (காண் 2 பேது 1:1) கிறிஸ்துவின் திருவுளப்படி சிலர் போதகர்களாகவும் அருளடையாளங்களை வழங்குபவர்களாகவும், அருள்பணியாளர்களாகவும் பிறருக்காக நியமிக்கப்பெற்று இருக்கின்றனர். இருப்பினும் மேன்மையிலும், கிறிஸ்துவின் கடலை வளர்ச்சியுறச் செய்ய நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் பொதுவாயுள்ள பணியிலும் யாவரும் உண்மையிலேயே சமமான பங்கு பெறுகின்றனர். ஏனெனில் திருப்பணியாளர்களுக்கும் ஏனைய இறைமக்களுக்கம் இடையே ஆண்டவர் ஏற்படுத்திய வேறுபாடு ஒரு பிணைப்பையும் கொண்டுள்ளது; அதாவது, அருள்பணியாளர்களும் நம்பிக்கை கொண்டோர்களும் பொதுவான தேவையினால் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பெற்று கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றித் திருச்சபையின் அருள்பணியாளர் ஒருவரொருவருக்கும் நம்பிக்கைகொண்ட பிறருக்கும் பணிபுரிய வேண்டும்; நம்பிக்கை கொண்டோரும் ஆர்வமுடன் திருப்பணியாளர்களோடும் போதகர்களோடும் ஒத்துழைத்து உதவ வேண்டும். இவ்வாறு தங்களிடையேயுள்ள பணி வேறுபாட்டால் கிறிஸ்துவின் உடலிலுள்ள வியத்தகு ஒற்றுமைக்கு அனைவரும் சான்று பகர்கின்றனர். ஏனெனில், அருள்கொடைகளும் பணிகளும் வேலைகளும் பலவாறாக இருப்பினும், அவை கடவுளின் பிள்ளைகளை ஒன்றாக இணைக்கின்றன. ஏனெனில் ''அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செலய்படுத்துகிறர்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்'' (1 கொரி 12:11).
அனைவருக்கும் ஆண்டவராக இருந்தாலும், தொண்டு ஏற்பதற்கல்ல. தொண்டாற்றுவதற்கே வந்து கிறிஸ்துவை, கடவுளின் திருவுளத்தால் பொது நிலையினர் சகோதரராகப் பெற்றிருக்கிறார்கள் (காண் மத் 20:28); அதேபோல் திருப்பணிக்காக நியமிக்கப்பெற்று, அன்பின் புதிய கட்டளை அனைவராலும் நிறைவேற்றப்பெறும வண்ணம் கிறிஸ்துவின் அதிகாரத்தால் போதித்தும் தூய்மைப்படுத்தியும் வழிநடத்தியும் கடவுளின் குடும்பத்திற்கு அருள் பணியாளராய் நின்று பணிபுரிபவர்களையும் தங்கள் சகோதரர்களாகப் பெற்றிருக்கின்றனர். இதையே தூய அகுஸ்தின் மிகவும் அழகாகக் கூறுகிறார்: ''உங்களுக்கு நான் ஓர் ஆயர் என்பது என்னை அச்சுறுத்துகிறது; உங்களோடு நானும் ஒரு கிறிஸ்தவர் என்பது எனக்கு ஆறுதல் அளிக்கின்றது. ஆயர் என்பது கடமையின் பெயர். கிறிஸ்தவர் என்பது அருளின் பெயர். அது ஆபத்தின் பெயர், இது''.112

பொது நிலையினரின் திருத்தூதுப்பணி

33. பொதுநிலையினர் கடவுளின் மக்களாக இணைக்கப்பெற்று, கிறிஸ்துவின் ஒரே உடலில் ஒரே தலையின் கீழ் அமைக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் யாராயிருப்பினும் சரி, உயிருள்ள உறுப்பினர்களாக, படைத்தவரின் கொடையினாலும் மீட்பரின் அருளினாலும் தங்கள் முழு ஆற்றலுடன் திருச்சபைக்கு வளர்ச்சியளிக்கவும். தொடர்ந்து அதைத் தூய்மைப்படுத்தவும் பாடும்படி அழைக்கப் பெறுகின்றனர்.
திருச்சபையின் நிறைவாழ்வுப் பணியில் பங்குபெறுவதே பொதுநிலையினரின் திருத்தூதுப்பணியாகும். இந்தத் திருத்தூதுப்பணியை ஆற்றுவதற்கே திருமுழுக்கு, உறுதிப் பூசுதல் ஆகியவற்றின் மூலம் அனைவரும் ஆண்டவரால் அதிகாரப் பூர்வமாக அனுப்பப்பெற்றிருகின்றனர். திருத்தூதுப் பணி அனைத்திற்கும் உயிராகத் திகழும் இறையன்பும் பிறரன்பும் அருளடையாளங்களின் மூலம், முக்கியமாலகத் தூய்மை மிகு நற்கருணையின் மூலம் வழங்கப்பட்டு ஊட்டம் பெறுகின்றது. எந்தெந்த இடங்களில் பொது நிலையினரால் மட்டுமே திருச்சபை மண்ணுலகிற்கு உப்பாகத் திகழ முடியுமோ அந்தந்த இடங்களிலும் சூழ்நிலைகளிலும் திருச்சபையை உடனிருக்கச் செய்து, செயலாற்றுவதாய் ஆக்கவே அவர்கள் தனிப்பட்ட முறையிலே அழைக்கப்பெற்றிருக்கின்றனர்.113 இவ்வாறு, தங்களுக்கு வழங்கப் பெற்ற கொடைகளின் மூலம் எல்லாப் பொது நிலையினரும் ''கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுற்கேற்ப'' (எபே 4:7) திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணியின் சாட்சிகளாகவும், அதே நேரத்தில் அதன் உயிருள்ள கருவிகளாகவும் இருக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் அனைவரையுமே சார்ந்துள்ள இந்தத் திருத்தூதுப்பணியைத் தவிர திருச்சபை ஆட்சியாளரின் திருத்தூதுப்பணியிலே பலவகையில் இன்னும் நேரிடையாக ஒத்துழைக்கப் பொது நிலையினர் அழைக்கப்பெறலாம்.114
இந்த ஒத்துழைப்பானது நற்டிசய்திக்காகத் தூய பவுலோடு ஆண்டவரில் பெரிதும் உழைத்த ஆண் பெண் அனைவரது உதவிக்கு ஒத்ததாகும் (காண் பிலி 4:3; உரோ 16:3 தொ.). மேலும், அலுவல்களை நிறைவேற்றத் திருச்சபை அதிகாரிகளால் அவர்கள் சிறப்பாக அழைக்கப்பெறுவதற்கும் தகுதி பெற்றிருக்கின்றனர்.
எனவே, கடவுளின் நிறைவாழ்வுத் திட்டம் எல்லாக் காலங்களிலும் இடங்களிலும் வாழும் மக்கள் அனைவரையும் மேன்மேலும் தழுவும்படியாகப் பணிபுரிய வேண்டிய தலையாயக் கடமை பொது நிலையினர் அனைவருக்கும் உண்டு. அதன் மூலம் அவர்களின் ஆற்றலுக்கும் காலங்களின் தேவைகளுக்கும் ஏற்பத் திருச்சபையின் மீட்பு அலுவலிலே ஆர்வமுடன் பங்குபெற அவர்களுக்கு எல்லா வழிவகைகளும் அளிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவின் திருப்பணி நிலையில் பொது நிலையினரின் பங்கு

34. ஒப்புயர்வற்ற, என்றும் வாழும் திருப்பணியாளராகிய இயேசு கிறிஸ்து தம் சான்றும் சேவையும் பொது நிலையினரின் வழியாகவும் தொடர்ந்து நடைபெற வேண்டுமென விரும்புகிறார். எனவே, அவர்களுக்குத் தம் ஆவியால் உயிரளித்து நிறைவான நற்செயல் அனைத்தையும் புரிய இடைவிடாது தூண்டுகிறார்.
தம்முடைய வாழ்வோடும் பணியோடும் அவர்களை இறுகப் பிணைத்து, கடவுளின் மாட்சிக்காகவும் மக்களின் நிறைவாழ்வுக்காகவும் ஆவிக்குரிய வழிபாட்டை நிறைவேற்றும்படி, கிறிஸ்து தம்முடைய திருப்பணி அலுவலில் அவர்களுக்குப் பங்களிக்கிறார். இதே காரணத்திற்காகவே, கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியினால் அருள் பொழிவு அர்;ப்பணிக்கப்பெற்று, தூய ஆவியினால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள் என்ற முறையில் பொது நிலையினர் ஆவியாரின் கொடைகளை அதிகமாகப் பெறும்படியாக வியத்தகு முறையிலே அழைக்கப்பட்டு ஆயத்தம் செய்யப்படுகின்றனர். அதாவது, அவர்களின் எல்லா வேலைகளும், இறைவேண்டல்களும், திருத்தூது அவர்களின் எல்லா வேளைகளும், இறைவேண்டல்களும், திருத்தூது முயற்சிகளும் திருமண, குடும்ப வாழ்வும் அன்றாட வேலைகளும், ஆன்ம, உடல் ஓய்வும் ஆவியாரில் நிறைவேற்றப்பட்டால், வாழ்வின் துயரங்கள் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவையாவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்குகந்த ஆவிக்குரிய பலிகளாக மாறுகின்றன (காண் 1 பேது 2:5). அவை நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஆண்வடவரின் உடலோடு நற்கருணைக் கொண்டாட்டத்தில் ஆண்டவரின் உடலோடு பக்தியுடன் தந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு எங்கும் தூய்மையாகச் செயல்பட்டு வழிபடுபவர் என்ற முறையில் பொதுநிலையினர் உலகையே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

கிறிஸ்துவின் இறைவாக்குரைக்கும் அலுவலிலே பொது நிலையினரின் பங்கு

35. மாபெரும் இறைவாக்கினரான கிறிஸ்து தமது வாழ்வின் சான்றினாலும் போதனையின் வல்லமையினாலும் தந்தையின் ஆட்சியைப் பறைசாற்றினார். இவ்வாட்சியின் முழு மாட்சியும் வெளித்தோன்றும் காலம்வரை இறைவாக்குரைக்கும் தம் அலுவலைத் தொடர்ந்து ஆற்றுகிறார். அவர் தம்முடைய பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கும் திருச்சபை ஆட்சியாளர் மூலம் மட்டுமல்ல, பொதுநிலையினர் வழியாகவும் இவ்வலுவலை ஆற்றிவருகின்றார். இதற்காக, அவர்களின் அன்றாட குடும்ப, சமூக வாழ்விலே நற்செய்தியின் வல்லமை திகழும்படி, அவர்களைத் தம் சாட்சிகளாக நியமித்து, நம்பிக்கை உணர்வையும் அருள் வழங்கும் வார்த்தையையும் அளித்துள்ளார் (காண் திப 2:17-18; திவெ 19:10). நம்பிக்கையிலும் எதிர்நொக்கிலும் வலுப்பெற்று, இக்காலத்தைர நன்கு பயன்படுத்தி (காண் எபே 5:16 கொலோ 4:5), வருங்கால மாட்சிமையைத் தாராள மனதுடன் எதிர்பார்ப்பார்களானால் (காண் உரோ 8:25), தாங்கள் வாக்குறுதியின் மக்கள் என அவர்கள் எண்பிப்பார்க்ள. இந்த எதிர்நோக்கை இதயத்தின் ஆழுத்திலே வைத்து மறைத்துவிடாது, தொடர் மனமாற்றத்தினாலும் ''இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடு'' (எபே 6:12) புரியும் போரினாலும் உலகியல் வாழ்க்கை முறைகளாலும் வெளிக்காடடுவார்களாக.
நம்பிக்கை கொண்டோரின் வாழ்வையும் திருத்தூதுப் பணியையும் பேணி வளர்க்கும் புதிய உடன்படிக்கையின் அருளடையாளங்கள் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் (காண் திவெ 21:1) முன்குறிக்கின்றன. அதுபோலவே அவர்கள் நம்பிக்கை வாக்குறுதியை நம்பிக்கை வாழ்வோடு தயக்கமற இணைத்தால்தான், எதிர்நோக்கி இருப்பவை (காண் எபி 11:1) மீது கொள்ளவேண்டிய நம்பிக்கையை நன்முறையில்பறைசாற்றுபவர்களாகத் திகழ்வார்கள். உலகின் சாதாரணச் சூழ்நிலைகளில் இந்நற்செய்தியை அறிவிக்கும்போது அதாவது, வாழ்வென்னும் சான்றினாலும் போதகத்தினாலும் கிறிஸ்துவைப் பிறருக்கு எடுத்துரைக்கும்போது, இந்நற்செய்தி அறிவிப்பு தனிச்சிறப்பு வெறும்; தனிப்பட்ட முறையில் பயனையும் விளைவிக்கும்.
இந்த இறைவாக்குரைக்கும் அலுவலைப் பொறுத்தமட்டில் தனி அருளடையாளத்தால் தூய்மையாக்கப்பட்ட திருமண, குடும்ப வாழ்வு மிகவும் முக்கியமானது. கிறிஸ்தவ சமயம் முழுமையாக ஊடுருவி நாளுக்கு நாள் அதிகமாக உருமாற்றுகிற வாழ்வு மைப்பு இதுவேயாதலால் இங்குதான் பொது நிலையினர் திருத்தூதுப்பணி செயலாக்கம் பெறுகிறது; இவ்வாழ்வு அமைப்பே திருத்தூதுப்பணியின் சிறந்த பள்ளியாகவும் அமைகின்றது. இங்குதான் கணவர் மனைவியர் ஒருவரொருவர் முன்னிலையிலும், தம்மக்கள் முன்னிலையிலும் கிறிஸ்துவின் அன்பிற்கும் அவர் மெலுள்ள நம்பிக்கைக்கும் சாட்சிகளாக நின்று தமக்கே உரிய அழைத்தலுக்கு ஏற்ப வாழ்கின்றனர். கிறிஸ்தவக் ;குடும்பம் இறையாட்சியின் இன்றைய ஆற்றலையும் வரவிருக்கும் பேறுநிலை வாழ்வின் முPது உள்ள நம்பிக்கையையும் உரத்த குரலில் பறைசாற்றுகின்றது. இவ்வாறு தன் முன்மாதிரியாலும் சான்றினாலும் உலகினர் கொண்டுள்ள தவறான கருத்துகளை எடுத்துக்காட்டுகிறது; உண்மையைத் தேடுவோருக்கு அது ஒளியாக அமைகின்றது.
ஆகவே, உலகக் கவலைகளுகு;கிடையே வாழும்போதும் பொதுநிலையினர் உலகிலே நற்செய்தியை அறிவிக்கச் சிறந்த பணி ஆற்ற முடியும், ஆற்றவும் வேண்டும். திருப்பணியாளர்கள் இல்லா இடங்களிலும் திருமறையைத் துன்புறுத்தும் ஆட்சி முறைகளால் அவர்கள் தடை செய்யப்பட்ட நேரத்திலும் பொதுநிலையினரில் சிலர் தங்களால் முடிந்தவரை சில திருப்பணிகளுக்கு உதவுகின்றனர். இவர்களுள் பலர் தங்கள் முழு ஆற்றலையும் திருத்தூதுப் பணிக்கென அர்ப்பணித்து இருக்கின்றனர். எனினும், அனைவரும் கிறிஸ்துவின் ஆட்சி உலகில் பரவி வளர்வதற்கு ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். எனவே, வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் பற்றி ஆழ்ந்த அறிவு பெறப் பொது நிலையினர் திறம்பட முயல்வார்களாக் ஞானமெனும் ;கொடையைக் கடவுளிடமிருந்து பெற அயராது இறைஞ்சி வேண்டுவார்களாக.

கிறிஸ்துவின் அரச அலுவலிலே பொது நிலையினரின் பங்கு

36. கிறிஸ்து சாவை ஏற்கும் அளவிற்குக் கீழ்படிந்து அதனால் தந்தையால் உயர்த்தப் பெற்று (காண் பிலி 2:8-9) தமது அரசின் மாட்சிமையில் நுழைந்தார். கடவுள் அனைத்திலும் அனைத்துமாய் இருக்குமாறு (காண் 1 கொரி 15:27-28), கிறிங்து தம்மையும் படைப்புகள் அனைத்தையும் தந்தைக்கு அடிபணியச் செய்யும் வரை, அனைத்தும் கிறிங்துவுக்கு அடிபணிந்தே இருக்கும். தம் சீடர்களும் அரச சுதந்திரம் கொண்டவர்களாய், தன்னலமறுப்பாலும் தூய வாழ்வாலும் தம்மில் பாவத்தின் ஆட்சியை வெல்லவும் (காண் உரோ 6:12) தம்மை அடுத்திருப்போரில் கிறிஸ்துவுக்குப் பணி செய்து, மனத்தாழ்மையுடனும் தாராளப்பண்புடனும் தங்கள் சகோதரர் சகோதரிகளையும் கிறிஸ்துவிடம் கூட்டிவரவுமே இந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். கிறிஸ்துவுக்கு ஊழியம் செயகூnது ஆள்வதாகும். ஆண்டவர் தமது ஆட்சியைப் பொது நிலையினரின் மூலமாகவும் பரப்ப விரும்புகிறார். இவ்வாட்சி உண்மையின் ஆட்சி, வாழ்வின் ஆட்சி, தூய்மையின் ஆட்சி, அருளின் ஆட்சி, நீதியின் ஆட்சி, அன்பின் ஆட்சி, அமைதியின் ஆட்சி;115 இந்த ஆட்சியில் படைப்பு அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு, கடவுளின் பிள்ளைக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெறும் (காண் உரோ 8:21). உண்மையில், மாபெரும் வாக்குறுதியும் மாபெரும் கட்டளையும் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன: ''அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்'' (1 கொரி 3:23).
எனவே, கிறிஸ்தவர்கள் படைப்பனைத்தின் உள்ளியல்பையும் மதிப்பையும் அவை எவ்வாறு கடவுளின் புகழ்பாட ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிய வேண்டும். உலகம் கிறிஸ்துவின் மனப்பான்மையில் ஊறி, நீதியிலும் அன்பிலும் அமைதியிலும் தன் குறிக்கோளைச் சிறந்த முறையிலே அடையும் வண்ணம் இன்னும்தூய்மைமிக்க வாழ்வு வாழ உலக அலுவல்களின் மூலமும் ஒருவருக்கொருவர் உதவவேண்டும். இந்தப் பணியை எங்கும் நிறைவேற்றுவதிலே பொது நிலையினர் முதலிடம் பெறுகின்றனர். உலக அறிவுத் துறையிலே கிறிஸ்துவின் அருளால் உள்;ர உயர்த்தப்பட்ட அவர்களது தகுதியையும் செயல்களையும்கொண்டு படைத்தவரின் திட்டத்திற்கும் அவரது வார்த்தையின் ஒளிக்கும் ஏற்ப மனித உழைப்பாலும் தொழில் நுட்பக் கலையாலும் நாட்டுப் பண்பாட்டாலும் மக்களனைவருக்கும் நன்மையளிக்கும் நிலையில் படைப்பு நலன்கள் நிறைவுபெற வேண்டும்; மனித மற்றும் கிறிஸ்தவ சுதந்திரத்தில், மக்கள் வளர்ச்சியடையும் வகையில் இப்படைப்பு நலன்கள் தமக்குரிய முறையில் துணைபுரிய வேண்டும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு பொதுநிலையினர் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்களாக. இவ்வாறு, திருச்சபையின் உறுப்பினர்களின் மூலம் மனித சமுதாயம் முழுவதற்கும் கிறிஸ்து தமது நிறைவாழ்விலன் ஒளி கொண்டு தொடர்ந்து அறிவூட்டுவார்.
மேலும், உலக அமைப்புகளும், வாழ்க்கைச் சூழல்களும் பொதுவாகப் பாவத்திற்குத் தூண்டுதலாக அமையுமேயானால், பொதுநிலையினர் தங்கள் ஆற்றலனைத்தையும் திரட்டி அவற்றைத் திருத்தி அமைத்து, அதன்மூலம் அவை அனைத்தையும் நீதிநெறிக்கேற்பச் சீர்;படுத்தி, நற்பண்புடைத்த வாழ்விற்குத் தடையாக அவை அமையாமல் உறுதுணையாக இருக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மனிதப் பண்பாடும் செயல்களும் அறநெறி மதிப்புப் பெறும்படி செய்கின்றனர். அதே நேரத்தில், உலமென்னும் விளைநிலமும் கடவுளின் வார்த்தை என்னும் விதைக்கு ஏற்றாற்போல் நன்றாக ஆயத்தம் செய்யப்படுகிறது; அமைதியின் தூதை உலகிற்கு அறிவிக்கத் தேவையான வாயில்கள் திருச்சபைக்கு இன்னும் அகலத் திறக்கப்படுகின்றன.
நிறைவாழ்வுத் திட்டத்திற்கு ஏற்ப நம்பிக்கை கொண்டோர்கள், தாங்கள் திருச்சபையின் உறுப்பினர் என்னும்முறையிலே உருவாகும் உரிமைகள், கடமைகள் ஆகியவற்றிற்கும், தாங்கள் மனித சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்னும் முறையில் உருவாக்கும் உரிமைகள் கடமைகள் ஆகிவற்றிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிய வேண்டும். உலகு சார்ந்த செயல்பாடுகள் அனைத்திலும் கிறிஸ்தவ மனச்சான்றையே பின்பற்ற வேண்டும் என்பதை மனத்தில் நிறுத்தி, அவர்கள் மேற்கூறிய இரண்டையும் இசைவித்து ஒன்றுபடுத்த முயல வேண்டும். ஏனெனில், உலகு சார்ந்த செயல்பாடுகளிலும்கூட எவ்வித மனிதச் செயலையும் கடவுளின் ஆளுகையிலிருந்து அகற்றிட முடியாது. திருச்சபையின் பணி இன்றைய உலகின் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்ற முறையிலே அமையும்படி, நாம் வாழும் இக்காலத்திலே இந்த வேறுபாடும் இசைவும் நம்பிக்கை கொண்டோரின் செயல் முறையில் மிகவும் தெளிவாகத் தோன்ற வேண்டும். இவ்வுலகுசார்ந்த சயெல்பாடுகளின் உரிமையோடு ஈடுபட்டிருக்கும் இவ்வுலகுச் சமூகம் அதற்குரிய தத்துவங்களால்ஆளப்பட வேண்டுமென்பது யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியது. ஆனால், சமயத்தோடு யாதொரு தொடர்புமே இல்லாத முறையில் சமுதாயத்தை உருவாக்க முயன்று, குடிமக்களின் சமயச் சுதந்திரத்தை எதிர்த்துப் போராடி அழிக்கும் தவறான கோட்பாட்டைக் கட்டாயம் உதறித் தள்ள வேண்டும்.116

திருச்சபை ஆட்சியாளரோடு பொது நிலையினர் கொண்டுள்ள தொடர்பு

37. எல்லாக் கிறிஸ்தவ மக்களையும்போல், திருச்சபையின் அருள் நலன்களை, முக்கியமாகக் கடவுளின் வார்த்தையையும் அருளடையாளங்களையும் அருள்பணியாளர்களிடமிருந்து வளமாகப் பெறப் பொது நிலையினர் உரிமை பெற்று இருக்கிறார்கள்.117 எனவே, கடவுளின் பிள்ளைகளுக்கும் கிறிஸ்துவின் சகோதரர் சகோதரிகளுக்குமுரிய சுதந்திரத்தோடும் நம்பிக்கையோடும் இவர்கள் தங்கள் தேவைகளையும் விருப்பங்களையும்இந்த அருள்பணியாளர்களிடம் தெரிவிப்பார்களாக. தம் அறிவு, தகுதி, மேன்மைக்கேற்பத் திருச்சபையின் நலனைச் சார்ந்;தவற்றில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உண்டு; சில வேளைகளில் அது அவர்களது கடமையும் ஆகின்றது.118 இந்த அலுவல், இதற்கென்றே திருச்சபையால் அமைக்கப்பெற்ற அமைப்புகளின் மூலம் தேவைகளுக்கேற்ப நிறைவேற்றப்படலாம்; மேலும், தங்கள் திருப்பணி காரணமாகக் கிறிஸ்துவின் உருவில் நிற்கும் யாவருக்கும் மரியாதையும் அன்பும் செலுத்தி எப்பொழுதும் வாய்மையோடும் துணிவோடும் முன்மதியோடும் இதை நிறைவேற்றுவார்களாக.
கிறிஸ்துவின் பதிலாள்களாக நிற்கும் அருள்பணியாளர்கள் போதகர்கள், கழிகாட்டிகள் என்னும் முறையிலே நிலைநாட்டுபவற்றை எல்லாக் கிறிஸ்தவ மக்களையும்போல் பொதுநிலையினரும், கிறிஸ்தவர்க்குரிய கீழ்ப்படிதலுடன் ஆர்வத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சாவை ஏற்குமளவுக்குக் கீழ்படிந்து கடவுளின் பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தின் தூய வழியை எல்லாமனிதருக்கும் காட்டிய கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி மேற்கூறியவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தம்மைப் பற்றிக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதால் என்றும் விழிப்பாய் இருக்கிற வழிகாட்டிகள், மனத்துயரத்தோடல்லாது மகிழ்ச்சியுடன் இப்பணியை நிறைவேற்றும்படி (காண் எபி 13:17) பொதுநிலையினர் இறைவனை வேண்ட மறக்க வேண்டாம்.
அருள்பணியாளர்களோ, திருச்சபையில் பொது நிலையினர் கொண்டுள்ள மேன்மையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு அவற்றை மேம்படச் செய்ய வேண்டும். பொது நிலையினரின் முன்மதியுள்ள அறிவுரையை விருப்புடன் அவர்கள் பயன்படுத்துவார்களாக. திருச்சபையின் பணிப்பொறுப்புகளை அவர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து, அவர்கள் சுதந்திரத்தோடு செயல்புரிய வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், தாங்களாகவே பணிகளை ஏற்று நடத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பொது நிலையினர் பரிந்துரைக்கும் திட்டங்களையும், கருத்துகளையும் ஆவல்களையும் தந்தைக்குரிய அன்புடன் கிறிஸ்துவின் மனநிலையோடு தனிப்பட்ட விதமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.119 இந்த மண்ணக நகரிலே அனைவருக்குமே உரித்தான சுதந்திரத்தை அருள்பணியாளர்கள் மதிப்புடன் ஏற்று ஒப்புக்கொள்ளவேண்டும்.
அருள்பணியாளர்களுக்கும் பொது நிலையினருக்கும் இடையே உள்ள இந்த உள்ளங்கலந்த உரையாடலின் மூலம் திருச்சபைக்குப் பல நன்மைகள் உண்டாகும். இதனால் பொது நிலையினரிடையே பொறுப்புணர்வு வலுப்பெற்றுஇ ஆர்வம் வளர்ந்து, அருள்பணியாளர்களின் பணியோடு அவர்களின் ஆற்றல் அதிக எளிதாக இணைந்து செயல்பட ஏதுவாகும். அருள்பணியாளர்கள் பொது நிலையினரின் அனுபவத்தால் பயன்பெற்று அருள்வாழ்வு, மற்றும் உலகு சார்ந்த செயல்பாடுகளில் இன்னும் தெளிவாகவும் ஏற்ற முறையிலும் முடிவுகள் எடுக்கமுடியும். இதன் மூலம் முழுத் திருச்சபை தன் ஒவ்வொரு உறுப்பினராலும் வலுப்பெற்று, உலகை வாழ்விப்பதற்கான தன் பொறுப்பை அதிகப் பயன்தரு முறையிலே நிறைவேற்றும்.

பொது நிலையினரின் சாற்று வாழ்வு

38. பொது நிலையினர் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் வாழ்விற்கும் உயிர்த்தெழுதலுக்கும் உலகில் சான்றாக நின்று, வாழும் கடவுளின் அடையாளமாகத் திகழ வேண்டும். பிறரோடு இணைந்தும் தனித்தும் தங்களால் இயன்றவரை ஆவியின் கனிகளால் உலகுக்கு உணவூட்ட வேண்டும் (காண் கலா 5:22). 'பேறுபெற்றார்' என்று ஆண்டவர் நற்செய்தியில் அழைத்த (காண் மத் 5:3-9) ஏழையர், கனிவுடையோர், அமைதி ஏற்படுத்துவோர் ஆகிய அனைவருக்கும் உயிரூட்டம் அளிக்கின்ற ஆவியை உலகில் பொழிய வேண்டும். கருங்கக்கூறின், ''உடலுக்கு உயிர்போல, உலகுக்குக் கிறிஸ்தவர்கள் அமைவார்களாக''.120


இயல் 5
திருச்சபையின் தூய்மைநிலை அடைய அனைவருக்கும் அழைப்பு

திருச்சபையில் தூய்மைநிலை

39. மறைபொருள் எனத் திருச்சங்கம் எடுத்துரைத்துள்ள திருச்சபை தவற இயலாத முறையிலே தூய்மையாக உள்ளதாக நாம் நம்புகிறோம். ஏனெனில், தந்தையோடும் ஆவியாரோடும் 'அவர் ஒருவரே தூயவர்' என்று புகழப்படும் இறைமகன் கிறிஸ்து121 திருச்சபையைத் தூய்மைபடுத்துவதற்காகத் தம்மையே கையளித்து (காண் எபே 5:25-26) தம் மணமகளைப் போல அதனிடம் அன்பு செலுத்தினார். கடவுளின் மாட்சிக்காகத் தமது உடல்போல் அதைத் தம்மோடு ஒன்றிணைத்து, தூய ஆவியின் கொடையினால் நிரப்பியுள்ளார். எனவே, ''நீங்கள் தூயோராவதே கடவுளுடைய திருவுளம்'' (1 தெச 4:3; காண் எபே 1:4) எனும் திருத்தூதரின் வாக்குக்கொப்பத் திருச்சபையில் உள்ள யாவரும் அதாவது திருச்சபை ஆட்சியாளரும் அவர்களது மக்கள் குழுவைச் சார்ந்தவர்களும், திருச்சபையில் தூய்மை நிலைக்கு அழைக்கப் பெறுகின்றனர். திருச்சபையின் இந்தத் தூய்மைநிலை, நம்பிக்கை கொண்டோரிடம் ஆவியானாவர் விளைவிக்கும் அருள்கனிகளின் மூலம் இடைவிடாது வெளிக்காட்டப்பெறுகிறது, வெளிக்காட்டப் பெறவும் வேண்டும். தங்களது வாழ்க்கையிலே மற்றவர்க்கு முன்மாதிரியாக நின்று, அன்பின் நிறைவை நாடும் மனிதரிடையே அது பலவகைகளில் வெளிக்காட்டப்பெறுகிறது: நற்செய்தி அறிவுரைகள் என வழங்கப்பெறும் நெறிகளைக் கடைப்படிப்பதிலேயும் அது தனிப்பட்ட முறையில் விளங்குகின்றனது. தூய ஆவியினால் தூண்டப்பெற்று, தனிமையிலோ திருச்சபையின் ஒப்புதல் பெற்ற நிலையிலோ பல கிறிஸ்தவர்கள் இந்த அறிவுரைகளைக் கடைப்பிடித்து வாழ்தல் உலகிலே திருச்சபையின் தூய்மைநிலைக்குச் சிறப்புமிகு சாட்சியாகவும் மாதிரியாகவும் அமைகின்றது, அமையவும் வேண்டும்.

தூய்மைநிலை அடைய அனைவருக்கும் அழைப்பு

40. நிறைவு அனைத்தின் இறை ஆசிரியரும் மாதிரியுமானவர் ஆண்டவர் இயேசு; வாழ்வுக்குத் தூய்மைநிலையை அருள்பவரும் அதனை நிறைவு செய்பவரும் இவNர் இத்தூய்மைநிலையை எல்லா நிலைகளிலுமிருந்த தம் சீடர்கள் அனைவருக்கும் அவர்களுள் ஒவ்வொருவருக்கும் இயேசு பறைசாற்றினார்: ''ஆதலால் உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்'' (மத் 5:48).122 முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அனைவரும் கடவுளிடம் அன்பு கூரவும் (காண் மாற் 12:30) தாம் அவர்களிடம் அன்பு செலுத்தியதுபோல அவர்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவும் (காண் யோவா 13:34; 15:12) தூய ஆவியினால் உள்ளிருந்தே தூண்டப்படும் பொருட்டு, கிறிஸ்து அவர்கள் அனைவர் மீதும் அதே ஆவியை அனுப்பினார். கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் தங்களின் சொந்தச் செயல்களால் அல்லாது, கடவுளின் திட்டத்திற்கும் அருளிற்கும் ஏற்பக் கடவுளால் அழைக்கப்பெற்று, ஆண்டவர், இயேசுவில் ஏற்புடைமை பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கையின் திருமுழுஃக்கினால் உண்மையிலே கடவுளின் பிள்ளைகளாக்கப் பெற்று, இறைத் தன்மையில் பங்கு பெற்று, இதனால் மெய்யாகவே தூயோராக்கப் பெற்றிருக்கின்றனர். எனவே, கடவுளிடமிருந்து, அவர்கள் அடைந்துள்ள இத்தூய்மை நிலையை வாழ்வில் காத்து, அதனை நிறைவு செய்ய வேண்டும். ''இறை மக்களுக்கு ஏற்ற நடத்தை''யைத் (எபே 5:3) தங்களை அணிச்செய்து கொண்டு, தூய்மைநிலை அடைவதற்காகத் தூய ஆவியின் கனிகளைப் பெறவேண்டும் என அவர்களுக்குத் திருத்தூதர் அறிவுரை வுறுகின்றார் (காண் யாக் 3:2), கடவுளின் கருணை இடைவிடாது நமக்குத் தேவைப்படுகிறது; ''எங்கள் குற்றங்களை மன்னியும்'' (மத் 6:12)123 என நாளும் இறைவேண்டல் செய்யவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே, எந்த நிலையிலும், பணிப்பொறுப்பிலும் இருப்பினும் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும் அன்பின் நிறைவுக்கும் அழைக்கப் பெற்றிருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெளிவாகிறது.124 இத்தூய்மை நிலையால் இம்மண்ணுலகச் சமுதாயத்திலும் இன்னும் சிறந்த மனிதராய் வாழ முடியும். இந்த நிறைவை அடைவதற்கு நம்பிக்கை கொண்டோர்கள் கிறிஸ்துவிடம் இருந்து பெற்ற கொடையின் அளவுக்கேற்பத் தங்கள் திறனைப் பயன்படுத்த வேண்டும்; இதனால் அவர்தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவரது உருவிற்கு ஒத்தவர்களாய் ஆக்கப்பெற்று, எல்லாவற்றிலும் தந்தையின் விருப்பத்திற்குப் பணிந்து, கடவுளின் மாட்சிக்காகவும் பிறர் பணிக்காகவும் தங்களையே முழுமனத்தோடு தியாகம் செய்ய முடியும். இவ்வாறு, இறைமக்களின் தூய்மைநிலை மிகுதியாகக் கனிதரும் முறையில் வளர்கின்றது. இது திருச்சபை வரலாற்றிலே பல தூயோரின் வாழ்வின் மூலம் வெளிப்படையாகக் காணக்கிடக்கிறது.

ஒரே தூய்மை நிலையின் பல செயல்பாடுகள்

41. கடவுளின் ஆவியால் வழிநடத்தப்பெற்று, தந்தையின் குரலுக்குப் பணிந்தவர்களாய் இறைத் தந்தையின் உண்மை இயல்புக்கு ஏற்ப அவரை உள்ளத்தில் வழிப்பட்டு, ஏழ்மையும் மனதாழ்மையும் கொண்டவராகிச் சிலுவையைத் தாங்கும் கிறிஸ்துவை அவரது மாட்சியில் பங்குக் கொள்ளும் தகுதி பெறும்பொருட்டுப் பின்பற்றுகின்ற அனைத்து மனிதரின் பல்வேறு வாழ்க்கை முறைகளிலும் பணிப்பொறுப்புகளிலும் ஒரேவகை தூய்மைநிலையே செயலாக்கம் பெறுகிறது. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய கொடைகளுக்கும் அலுவல்களுக்கும் தக்கவாறு, எதிர்நோக்கைத் தூண்டி எழுப்பி, அன்பினால் செயல்படும் உயிருள்ள நம்பிக்கையின் பாதையிலே தயக்கமின்றி வழிநடக்கவேண்டும்.
முதலில், நம் அருள்நிலைப் பணியாளரும் ஆயருமான ஒப்புயர்வற்ற, என்றும் வாழும் திருப்பணியாளராகிய கிறிஸ்துவைப் பின்பற்றி, அவரது மக்கள் குழுவின் அருள்பணியாளர்கள் தங்கள் பணியைத் தூய்மையாகவும் ஆர்வத்தோடும் மனத் தாழ்மையோடும் துணிவோடும் நிறைவேற்ற வேண்டும்; இதுவே அவர்களுக்கும் தூய்மைநிலை அடைவதற்கான தலைசிறந்த வழியாக அமையும். அவர்கள் திருப்பணிநிலையின் முழுமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அருளடையாள அருளைப்பெற்றிருப்பதன் நோக்கம்: இறைவேண்டலாலும் ஒப்புக்கொடுத்தலாலும் பறைச்சாற்றலாலும் ஆயரின் எல்லா வகையான அக்கறையாலும் பணியாலும் அருள்பணியாளருக்குரிய அன்பு அலுவலை முழுமையாக நிறைவேற்றுவது;125 தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்கள் குழுவுக்காகத் தங்கள் உயிரை இழக்கத் தயங்காதிருப்பது; அம்மக்கள் குழுவுக்கு முன்மாதிரியாய் இருந்து (காண் 1 பேது 5:3), தங்களின் முன்மாதிரியின் மூலமாகவும் திருச்சபையை நாளும் அதிகத் தூய்மை நிலைக்கு இட்டுச் செல்வது ஆகியவையே ஆயர்களின் அருள்மணி முடியாக உள்ள திருப்பணியாளர்கள்126 ஆயர்தம் நிலையை ஒத்தவிதத்தில், என்றும் வாழும் ஒரே இணைப்பாளரான கிறிஸ்துவின் மூலம் ஆயர்களின் பணியின் அருளிலே பங்குப் பெற்று, தங்கள் அன்றாடக் கடமையை நிறைவேற்றுவதனால் இறை அன்பிலும் பிறர் அன்பிலும் வளர்வார்களாக் திருப்பணியாளர்களிடையே உள்ள நட்புறவின் பிணைப்பைப் பாதுகாப்பார்களாக் எல்லா அருள் நலன்களிலும் நிறைந்து விளங்குவார்களாக் எளிமையிலும் மறைந்த விதத்திலும் பணிபுரிந்தவர்களாய் நூற்றாண்டுகளின் காலப்போக்கில் தூய்மை நிலையின் சீரிய முன்மாதிரியை அளித்துச் சென்ற திருப்பணியாளர்களைக் கண்டுபாவித்து, அனைவருக்கும் உயிருள்ள சான்றாய்த் திகழ்வார்களாக.127 இவர்களின் கீழ் கடவுளின் திருச்சபையிலே நின்று நிலவுகிறது. தாங்கள் செய்வனவற்றை உணர்ந்து நடத்தையில் தாங்கள் கையாளுவனவற்றை ஒத்தவர்களாய்128 தங்கள் மக்களுக்காகவும் கடவுளின் மக்கள் அனைவருக்காகவும், இறைவேண்டல் செய்யவும் பலி ஒப்புக் கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கின்றனர் திருப்பணியாளர்கள். இவர்கள் திருத்தூது அலுவலாலும் இடையூறுகளாலும் கடின உழைப்பாலும் தடைசெய்யப்படாமல், அவற்றினால் இன்னும் உயரிய தூய்மை நிலையை அடைவார்களாக. கடவுளின் திருச்சபை முழுவதன் மகிழ்வுக்காக, ஆழ்நிலைத் தியானத்தின் நிறைவால் தங்கள் செயலுக்கு ஊட்டமும் வளர்ச்சியும் அளிப்பார்களாக. திருப்பணியாளர் அனைவரும், முக்கியமாகத் தங்கள் திருநிலைப்பாட்லிருந்து பிறக்கும் தனி உரிமையினால் மறைமாவட்டத் திருப்பணியாளர் என அழைக்கப்படுவோர், தங்கள் ஆயரோடு நம்பிக்கையுடன் இணைத்திருப்பதும் மனமுவந்து ஒத்துழைப்பதும் தங்களின் தூய்மை நிலைக்கு எவ்வளவு துணையாய் இருக்கிறது என்பதை மனதில் நிலைநிறுத்த வேண்டும்.
தாழ்ந்த நிலைப் பணியாளர்கள் சிறப்பாகத் திருத்தொண்டர்கள் ஒப்புயர்வற்ற திருப்பணியாளராம் கிறிஸ்துவின் பணியிலும் அருளிலும் தங்களுக்குரிய முறையிலே பங்குபெறுகின்றனர். கிறிஸ்துவுடையவும் திருச்சபைவுடையவும் மறைப் பொருளுக்குப் பணிபுரியும்129 இவர்கள் எல்லாவகைக் குற்றங்களிலிருந்தும் தங்களையே தூய்மையாகக் காக்கவும் கடவுளுக்கு உகந்தவர்களாக நடக்கவும் மக்கள் முன்னிலையில் எல்லா நன்மைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவும் வேண்டும் (காண் 1 திமோ 3:8-10ம் 12-13ம்). ஆண்டவரால் அழைக்கப்பெற்று, அவரது தனி உடைமையாக ஒதுக்கப்பட்ட திருப்பணிநிலையினர் அருள்பணியாளர் கண்காணிப்பிலே பணியாளருக்குரிய கடமைகளைச் செய்வதற்கென்று தங்களை ஆயத்தம் செய்கின்றனர். அவர்கள் சிறப்புமிக்க தம் அழைத்தலுக்கேற்ப தங்கள் மனமும் இதயமும் இசைந்துசெயல்படச் செய்வார்களாக. இறைவேண்டலிலே நாட்டம் கொண்டு, அன்பிலே தழைத்து, உண்மையான, நேர்மையான நற்புகழ் வாய்ந்த எல்லாவற்றையும் எண்ணி, அனைத்தையும் கடவுளின் மாட்சிக்காகவும் புகழுக்காகவும் செய்வார்களாக. கடவுளால் தேர்ந்துக்கொள்ளப்பட்ட பொதுநிலையினரும் இவர்களோடு ஒத்துழைக்கின்றனர். இப்பொதுநிiயினர் தங்களை முழுவதும் திருத்தூது அலுவல்களுக்கென கையளிக்க ஆயரால் அழைக்கப்பெற்று, கடவுளின் தோட்டத்திலே மிகுந்த கனிதரும் விதத்தில் உழைத்து வருகின்றனர்.130
கிறிஸ்தவத் தம்பதிகளும் பெற்றோர்களும் தங்களுக்குரிய பாதையில் வழநடந்து, உண்மையான அன்பினால் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரொருவரை அருளிலேஆதரிக்க வேண்டும். கடவுளிடமிருந்து அன்புடன் பெற்றுக்கொண்ட தங்கள் குழந்தைகளுக்குக் கிறிஸ்தவப் படிப்பினைகளையும் நற்செய்தியின் நற்பண்புகளையும் ஊட்ட வேண்டும். ஏனெனில், இவ்வாறு செய்வதனால் அவர்கள் மனிதர் அனைவருக்கும் தளர்வற்ற, தாராள அன்பின் மாதிரிகளாகத் திகழ்கின்றனர்; சகோதரஅன்பை வளர்ச்சியுறச் செய்கின்றனர்; திருச்சபைத் தாயின் வளமைக்குச் சாட்சிகளாகவும் அவரோடு ஒத்துழைப்பவர்களாகவும் அமைகின்றனர். தம் மணமகளிடம் அன்பு கொண்டு அவருக்காகத் தம்முயிரையே அளித்த131 கிறிஸ்துவின் அன்பிற்கு அடையாளமாக விளங்கி அதில் பங்கு பெறுபவர்களாகவும் இருக்கின்றனர். இதே மாதிரியை மற்றொரு வகையிலே கைம்பெண்களும் மணமாகாதவர்களும் காட்டுகின்றனர். திருச்சபையின் தூய்மை நிலைக்கும் பணிக்கும் இவர்களும் பெரிதும் உதவ முடியும். மேலும், கடின உழைப்புகளில் ஈடுபடுவோர் மனிதருக்குரிய தங்கள் அலுவல்களினால் தங்களையே நிறைவுபடுத்த வேண்டும்; உடன் குடிமக்களுக்கும் உதவவேண்டும்; சமுதாயம் அனைத்தையும் படைப்பையும் இன்னும் மேல் நிலைக்கு உயர்த்த வேண்டும்; தொழில்புரிபவரும் தந்தையுடன் அனைவரின் நிறைவாழ்வுக்காக என்றும் பணியாற்றுபவருமான கிறிஸ்துவின் உயிருள்ள அன்பை அவர்கள் பின்பற்ற வேண்டும். மேலும் நம்பிக்கையிலே உளம் மகிழ்ந்தும், ஒருவரொருவர் வாழ்க்கைச் சுமைகளைத் தாங்கியும் தங்கள் அன்றாட அலுவலின் மூலம் இன்னும் உயர்ந்த தூய்மை நிலைக்கு, ஏன் திருத்தூது அலுவலின் தூய்மை நிலைக்குக்கூட எழ வேண்டும்.
சிறப்பாக, வறுமையினாலும் வலுவின்மையினாலும் நோயினாலும் மற்றும் பற்பல துன்பங்களினாலும் ஒடுக்கப்படடவர்கள் அல்லது நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படபவர்கள் உலக மீட்புக்காகத் துன்புறும் கிறிஸ்துவோடு தனிப்பட்ட முறையிலே தாங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்துக்கொள்வார்களாக. இவர்களையே பேறுபெற்றோர் என ஆண்டவர் நற்செய்தியில் அழைக்கின்றார்; ''எல்லா அருளும் நிறைந்த கடவுள் இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிதுகாலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்;ப்படுத்தி உறுதிப்படுத்தி வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்'' (1 பேது 5:10) என்னும் திருவாக்கு இவர்களுக்குப் பொருந்தும்.
எனவே, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அனைவரும் யாவற்றையும் நம்பிக்கையுடன் விண்ணகத் தந்தையின் கையிலிருந்து ஏற்று, கடவுளின் திருவுளத்தோடு ஒத்துழைத்து, கடவுள் உலகுக்குக் காட்ழய அதே அன்பை இவ்வுலகுக்குப் புரியும் Nசையிலேயே எடுத்துக்காட்டி வாழ்வார்களாயின், தங்கள் வாழ்க்கை நிலைமைகள், கடமைகள், சூழ்நிலைகள் ஆகியவற்றிலும், அவையனைத்தின் வழியாகவும், நாளுக்குநாள் அதிகமாகத் தூய்மையடைவார்கள்.

தூய்மையடைய உதவும் வழிகள்

42. ''கடவுள் அன்பாயிருக்கிறார், அன்பில் நிலைத்திருப்பவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்'' (1 யோவா 4:16). நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாகக் கடவுள் தமது அன்பை நம் உள்ளங்களில் பொழிந்து;ளார் (காண் உரோ 5:5). எனவே, முதன்மையானதும் மிகத் தேவையானதுமான கொடை அன்பு. இதே அன்பினால்தான் எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளிடமும் அவரை முன்னிட்டு நம்மை அடுத்திருப்பவரிடமும் நாம் அன்பு கொள்கிறோம். இந்த அன்பு நல்ல விதையைப் போல் உள்ளத்தில் வளர்ந்து பயன்தர வேண்டுமானால், நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையை விருப்புடன் கேட்டு, அவரது திருவுளத்தை அவர் அருளின் துணை கொண்டு தம் செயலினால் நிறைவேற்ற வேண்டும்; அருளடையாளங்களிலும் முக்கியமாக நற்கருணையிலும் திருவழிபாட்டிலும் அடிக்கடி பங்குபெற வேண்டும்; இறைவேண்டலிலும் தன்னல மறுத்தலிலும் செயல் முறையில் சகோதரர் சகோதரிகளுக்குப் பணி புரிவதிலும், எல்லா நற்பண்புகளையும் கடைப்பிடிப்பதிலும் தம்மையே இடையறாது ஈடுபடுத்த வேண்டும். ஏனெனில், நிறைவின் பிணைப்பும் திருச்சட்டத்தின் நிறைவுமான (காண் கொலோ 3:14; உரோ 13:10) இந்த அன்பு தூய்மையடைய உதவும் எல்லா வழிகளுக்கும் தலையாய் விளங்கி அவற்றிற்குப் பொருள்தந்து அவற்றை நிறைவுக்குக் கொண்டுவருகிறது.132 எனவே, கடவுளிடமும் அடுத்திருப்பவரிடமும் காட்டுகின்ற அன்பே கிறிஸ்துவின் உண்மை ஊழியனுக்குரிய அடையாளம் ஆகின்றது.
இறைமகன் இயேசு தம்முயிரை நமக்காகக் கையளித்ததின் மூலம்; தம் அன்பை வெளிக்காட்டினார். எனவே, அவருக்காகவும் தம் சகோதரர் சகோதரிகளுக்காவும் உயிரைக் ;கொடுப்பவரை விட வேறு யாரும் உயர்ந்த அன்பு கொண்டவரில்லை (காண் 1 யோவா 3:16; யோவா 15:13). ஆகவே, அனைவர் முன்னிலையிலும், முக்கியமாகத் துன்புறுத்துவோர் முன்னிலையிலும் அன்பிற்கு மிகச் சிறந்த சான்று பகரச் சில கிறிஸ்தவர்கள் தொடக்கக் காலத்திலிருந்தே அழைக்கப் பெ;றிருந்தனர்; என்றும் அழைக்கவும் பெறுவர். இதனால்தான் மறைச்சாட்சியம் சிறப்புமிக்கக் கொடையாகவும்அன்பின் தலைசிறந்த சான்றாகவும் திருச்சபையால் கருதப்படகிறது. மறைச்சாட்சியாவதால் ஒரு சீடர் உலக மீட்புக்காகச் சாவை விருப்புடன் ஏற்றுக்கொண்ட தன் குருவைப் போலாகின்றார்; இரத்தம் சிந்துவதால் அவரை ஒத்தவர் ஆகின்றார். இந்த வாய்ப்பு சிலருக்குத்தான் கிடைக்க நேர்ந்தாலும், யாவரும் கிறிஸ்துவை மக்கள் முன்னால் வெளிப்படையாக அறிக்கையிடவும், திருச்சபைக்கு என்றுமே நேரிடும் துயரங்களுக்கு நடுவில் சிலுவையின் பாதையில் அவரைப் பின்பற்றவும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
இன்னும், நற்செய்தியில் அண்டவர் தம் சீடர்கள் கடைபிடிப்பதற்காக எடுத்துரைத்த பற்பல அறிவுரைகள் வழியாகத் திருச்சபையின் தூய்மைநிலை சிறந்த முறையிலே பேணி வளர்க்கப்பெறுகிறது.133 இவற்றில் கன்னிமையிலும்மனத்துறவிலும் பிளவுபடா உள்ளத்தோடு (காண் 1 கொரி 7:32-34) கடவுளுக்கு மட்டுமெ தங்களை எளிதாகக் கையளிக்குமாறு134 தந்தை சிலருக்கு வழங்கியுள்ள விலையுயர்ந்த தெய்வீக அருள்கொடை மிகச் சிறந்ததாகும் (காண் மத் 19:11; 1 கொரி 7:7). விண்ணுலக ஆட்சிக்காக ஏற்றுக் கொள்ளப்பெறும் இந்த நிறைவான இச்சையடக்கம் அன்பின் அடையாளமாகவும் தூண்டுதலாகவும் உலகில் அருள் வளமையின் சிறப்பான ஊற்றாகவும் திருச்சபையால் உயர்மதிப்போடு என்றும் கருதப்பெற்று வந்திருக்கிறது.
திருத்தூதர் பவுலின் அறிவுரையையும் திருச்சபை இங்கு நினைவில் கொள்கிறது. அன்புகொள்ளுமாறு தூண்டும் அவர் கிறிஸ்து இயேசுவிடமிருந்தே அதே மனநிலை நம்பிக்கை கொண்டோரிடமும் இருக்கும்படி பின்வருமாறு அறிவுறுத்துகிறார்: ''தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையேத் தாழ்த்திக் கொண்டார்'' (பிலி 2:7-8); ''அவர் செல்வமிக்கவராய் இருந்தும் உங்களுக்காக எழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்'' (2 கொரி 8:9).
கிறிஸ்துவின் இந்த அன்பையும் மனத்தாழ்மையையும் சீடர்கள் என்றும் பின்பற்றி அதற்குச் சாட்சிகளாகத் திகழ்வது இன்றியமையாதது; ஆயினும், தம்மைத்தாமே வெறுமையாக்குவதிலே மீட்பரை மிக நெருங்கிப் பின்பற்றி, கடவுளின் பிள்ளைக்குரிய சுதந்திரத்தில் ஏழ்மை நிலையை ஏற்று; தங்களின் சொந்த விருப்பங்களையும் மறுத்துச் செயல்புரிவதன் வழியாக அதனை இன்னும் தெளிவாக வெளிக்காட்டும் பல ஆண்களும் பெண்களும் தன்மடியிலே தவழ்வதைக் கண்டு களிப்புறுகிறார் திருச்சபைத் தாய். கீழ்ப்படிந்த கிறிஸ்துவை முற்றிலும் ஒத்திருக்கும்பொருட்டு, நிறைவாழ்வுக்கு அடுத்தவற்றில் கட்டளையின் கோரிக்கைக்கும் மேலாக, அவர்கள் கடவுளுக்காக மனிதருக்குத் தங்களையே கீழ்ப்படுத்துகிறார்கள்.135
எனவே, எல்லாக் கிறிஸ்தவ மக்களும் தூய்மை நிலையையும் தங்களின் நிலைமைக்கேற்ற நிறைவையும் அடைய அழைக்கப் பெறுகின்றனர்; இதற்கு அவர்கள் கடமைப்பட்டுமிருக்கின்றனர். ஆகவே, இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்தும்முறையாலும் நற்செய்தியில் காணும் ஏழ்மை மனப்பான்மைக்கு எதிராகச் செல்வங்களில் பற்றுக் கொண்டிருப்பதாலும், உண்மை அன்பைப் பின்பற்றுவதற்குத் தடை ஏற்படாதவாறு, அனைவரும் தங்கள் எண்ணங்களை நல்வழி நடத்திச் செல்வதிலே கவனம் செலுத்த வேண்டும்; இதுவே திருத்தூதரின் அறிவுரை. ''உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது'' (1 கொரி 7:31 கிரேக்க மூலம்).136

இயல் 6
துறவிகள்

திருச்சபையின் வாழ்வில் நற்செய்தி அறிவுரைகள்

43. கடவுளுக்கு ஒருவரை அர்ப்பணிக்கும் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் நற்செய்தி அறிவுரைகள் நம் ஆண்டவரின் சொற்களையும் முன்மாதிரியையும் அடிப்படையாகக் கொண்டவை; திருத்தூதர்கள், தந்தையர், திருச்சபை வல்லுநர், அருள்பணியாளர் ஆகியவர்களால் போற்றப்பெற்றவை. இவ்வறிவுரைகள் கடவுளின் கொடைகள்; அவற்றைத் திருச்சபை தன் ஆண்டவரிடமிருந்து பெற்றுள்ளது; அவரது அருளால் அவ்றறை என்றும் பாதுகாத்தும் வருகிறது. தூய ஆவியால் நடத்திச் செல்லப்பட்டு, இவ்வறிவுரைகளைக் கருத்துடன் விளக்கிப் பொருள் கூறவும், இவற்றைக் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தவும், இவற்றை அடிப்படையாகக் கொண்ட நிலையான வாழ்க்கை முறைகளை வகுத்தளிக்கவும் திருச்சபை ஆட்சியாளர்கள் கருத்துச் செலுத்தியுள்ளார்கள். இவ்வாறு தனி வாழ்வையோ பொதுவாழ்வையோ கொண்ட பல்வேறு வாழ்க்கை முறைகளும் குடும்பங்களும் பெருகியுள்ளன் இவை ஆண்டவரின் விளைநிலத்தில் கடவுள் தந்த விதத்திலிருந்து வியத்தகு முறையிலும்மிகுதியான அளவிலும் கிளை பரப்பிய ஒரு மரத்தைப் போன்றுள்ளன் இவ்வாழ்க்கை முறைகளும் குடும்பங்களும் தங்கள் உறுப்பினரின் முன்னேற்றத்திற்கும் கிறிஸ்துவின் முழு உடலின் நலனுக்கும் பெரிதும் உதவுகின்றன.137 நிலையான வாழ்க்கைமுறை, நிறைவாழ்வை அடைவதற்கான நல்ல படிப்பினைகள், கிறிஸ்துவின் படையினர் கொண்டிருக்க வேண்டிய சகோதர உறவு, கீழ்ப்படிதலால் உறுதிபெற்ற சுதந்திரம் ஆகிய உதவிகளை இக்குடும்பங்கள் தம் உறுப்பினருக்கு அளிக்கின்றன. இதனால் தங்கள் துறவற நேர்ச்சைப்பாட்டை உதவியுடன் நிறைவேற்றவும் உண்மையாய்ப் பாதுகாக்கவும் அவர்களால் முடிகிறது; உள மகிழ்வோடு அன்புப் பாதையில் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இயலும்.138
கடவுளிடமிருந்து திருச்சபை பெற்றுள்ள திருச்சபை ஆட்சி அமைப்பை நோக்கின், இத்தகைய துறவற நிலை திருப்பணி நிலையினருக்கும் பொதுநிலையினருக்கும் இடைப்பட்ட ஒரு நிலை அல்ல் மாறாக, திருச்சபை வாழ்விலே தனிப்பட்ட கொடையைப் பெறவும், தத்தமக்குரிய முறையிலே திருச்சபையின் நிறைவாழ்வுப் பணிக்கு உதவவும், சில கிறிஸ்தவ மக்கள் இவ்விரு நிலைகளிலிருந்துமே கடவுளால் அழைக்கப் பெறுகிறார்கள்.139


துறவற நிலையின் இயல்பும் முக்கியத்துவம்

44. நேர்;ச்சைப்பாடுகளின் மூலம் அல்லது இவற்றிற்கு நிரான மற்ற தூய ஒப்பந்தங்களின் மூலம் மேற்கூரிய மூன்று நற்செய்தி அறிவுரைகளுக்குத் தம்மையே கட்டுப்படுத்தும் ஒரு கிறிஸ்தவர் உன்னத முறையிலே தான் அன்பு கொள்ளும் கடவுளிடம் தம்மையே முழுமையாய் அர்ப்பணிக்கிறார். இவ்வாறு அர்;ப்பணிப்பதன் மூலம் கடவுளுக்குப் பணிபுரியவும், அவரைப் பெருமைப்படுத்தவும் தனிப்பட்ட ஒரு புதிய உரிமையோடு அவர் தம்மைக் கையளிக்க முடியும். திருமுழுக்கால் பாவத்திற்குச் செத்துக் கடவுளுக்கெனத் தூய்மைப்படுத்தப்பெறினும், திருமுழுக்கு அருளின் செழுமை செறிந்த பலனைத் தாம் அடைய இயலும் பொருட்டு நற்செய்தி அறிவுரைகளைத் திருச்சபையில் வெளிப்படையாக ஏற்பதன் மூலம், அன்பின் ஆர்வத்திலிருந்தும் இறைவழிபாட்டின் நிறைவிலிருந்தும் தம்மை அகற்றிச் செல்லும் இடையூறுகளிலிருந்து தம்மையே விடுவிக்க அவர் விரும்புகின்றார்; கடவுளுக்குப் பணிபுரிய மிக நெருங்கிய முறையில் அர்ப்பணிக்கப் பெறுகிறார்.140 அவர் கொண்டுள்ள மிக உறுதியான, நிலையான பிணைப்புகள் கிறிஸ்து தம் மணமகளான திருச்சபையோடு கொண்டுள்ள பிரிக்கவியலாப் பிணைப்பை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றனவோ அந்த அளவுக்குத்தான் அவரது அர்ப்பணம் மிக நிறைவுள்ளதாய் திகழும்.
நற்செய்தி அறிவுரைகளைக் கடைப்பிடிப்பவர்களை, அவை அன்புக்கு இட்டுச் செல்கின்றன.141 இவ்வன்பின் மூலம் அவர்கள் திருச்சபையோடும் அதன் மறைபொருளோடும் தனிப்பட்ட முறையிலே இணைக்கப்படுகிறார்கள். எனவே, இவர்களின் அருள்வாழ்வு திருச்சபை முழுவதின் நலனுக்காகக் கையளிக்கப்பட வேண்டும். இதிலிருந்து கிறிஸ்துவின் ஆட்சியை மக்களிடம் வேரூன்றிச் செய்யவும் உறுதிப்படுத்தவும் திக்கெட்டும் அதைப் பரப்பவும் வேண்டிய கடமை எழுகின்றது. தங்கள் ஆற்றலுக்கும் தங்களது தனிப்பட்ட அழைத்தலின் இயல்புக்கு; ஏற்றவாறு இறை வேண்டலாலோ செயல் ஈடுபாட்டாலோ இவர்கள் இதை நிறைவேற்ற வேண்டும். எனவேதான் திருச்சபையும் பல்வேறு துறவறச் சபைகளின் தனிப்பண்பைப் பாதுகாத்துப் பேணி வருகின்றது.
ஆகவே, திருச்சபையில் எல்லா உறுப்பினர்களும் தங்கள் கிறிஸ்துவ அழைத்தலின் கடமைகளை ஊக்கத்துடன் நிறைவேற்றுவதற்குப் பயன்தரு முறையிலே அவாகளை ஈர்க்க வல்லதும் ஈர்க்க வேண்டியதுமான ஓர் அடையாளமாக நற்செய்தி அறிவுரைகளை ஏற்று வாழும் நேர்ச்சைபாட்டு வாழ்வு விளங்குகிறது. ஏனெனில், இறைமக்கள் இன்மையிலே நிலையான நகரைக் கொண்டிராமல், வரவிருக்கும் ஒன்றையே எதிர்பார்க்கின்றனர். எனவே, உலகக் கலலைகளினின்று தன் உறுப்பினர்களுக்கு அதிக விடுதலையளிக்கும் துறவற நிலையானது ஏற்கெனவே இவ்வுலகில் இருக்கின்ற வானக நன்மைகளை நம்புவோர் அனைவருக்கும் அதிகமாக எடுத்துக்காட்டுகின்றது; கிறிஸ்துவின் மீட்பினால் பெற்ற புதிய, நிலையான வாழ்வுக்குச் சிறப்பான சான்று பகர்கின்றது; வரவிருக்கும் உயிர்த்தெழுதலையும் வானக ஆட்சியின் மாட்சிமையையும் முன்னறிவிக்கின்றது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வையகம் வந்தபோது இறைமகன் ஏற்றுக் கொண்டதும் தம்மைப் பின்பற்றும் சீடருக்கு அவர் எடுத்தியம்பியதுமாகிய அதே வாழ்க்கை முறையைத்தான் இத்துறவற நிலையும் மிக நெருங்கிப் பின்பற்றுகிறது; அதைத் திருச்சபையிலே என்றென்றும் பிரதிபலிக்கச் செய்கிறது. இறுதியாக, இல்வாழ்க்கை நிலை வையகப் பொருட்கள் அனைத்திற்குமேல் இறையாட்சிக்குள்ள உயர்வையும், அதன் உன்னதத் தேவைகளையும் தனிப்பட்ட முறையிலே அறிவிக்கின்றது. கிறிஸ்து அரசரின் ஆற்றலின் உயர்மிகு பெருமையையும் திருச்சபையில் வியத்தகு முறையிலே செயல்படும் தூய ஆவியின் வரம்பில்லா வல்லமையையும் மக்கள் அனைவருக்கும் இத்துறவற வாழ்க்கை முறை எடுத்துக் காட்டுகின்றது.
ஆகவே, நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதால் உருவாகும் இந்த வாழ்க்கை நிலை திருச்சபையின் ஆட்சி அமைப்பில் இடம்பெறாவிடினும், அதன் வாழ்வோடும் தூய்மை நிலையோடும் ஐயமறு விதத்தில் தொடர்பு கொண்டிருக்கிறது.

திருச்சபை ஆட்சியின் கீழ் துறவறவாழ்வு

45. மக்களுக்கு அருள்பணியாளராய் நின்று மிக வளமான வாழ்வுக்கு அவர்களை இட்டுச் செல்வதே (காண் எசே 34:14) திருச்சபை ஆட்சியாளர்களின் அலுவல். எனவே, இறையன்பு, பிறர் அன்பு ஆகிவற்றின் நிறைவைத் தனிப்பட்ட முறையிலே பேணிகாக்கும் நற்செய்தி அறிவுரைகளைக் கடைபிடிக்கும் முறையைத் தம் ஒழுங்குகளால் ஞானமுடன் சீர்படுத்துவது அவர்களையேச் சார்ந்தது.142 மேலும், சிறப்பு வாய்ந்த ஆண்களும் பெண்களும் தூய ஆவியின் ஏவுதலைப் பணிவுடன் பின்பற்றித் தொகுத்தளித்த ஒழுங்குகளை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்; இன்னும் இவ்வொழுங்குகள் பற்றிய பிற்காலச் சீர்திருத்தங்களுக்கும் அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளிக்கின்றார்கள். கிறிஸ்துவின் உடல் வளர்ச்சிக்காக ஆங்காங்கு அமைக்கப்பட்ட சபைகள் அவற்றை நிறுவியவர்களின் எண்ணத்திற்கேற்றபடி தழைத்து வளரத் தங்கள் அதிகாரத்துடனும் விழிப்போடும் பாதுகாப்போடும் கவனித்து வருகின்றார்கள்.
ஆண்டவருடைய மக்கள்குழு முழுவதின் தேவைகளைச் சீரிய முறையில் நிறைவு செய்வதற்காக, தூய்மைநிலையின் நிறைவை நாடும் எந்தச் சபையையும், அதன் உறுப்பினர் எவரையும், பொதுநன்மையைக் கருதி தலத் திருச்சபை முதல்வர்களின் ஆட்சியுரிமையிலிருந்து விடுவித்து, தம் நேர் ஆளுகைக்குள்ளாகத் திருத்தந்தை கொண்டுவரமுடியும்.143 முழுத் திருச்சபையின்மீது திருத்தந்தை கொண்டுள்ள தலைமை நிலையின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்ய முடிகிறது. இவ்வாறே அவர்களுக்குரிய மறைத்தந்தையரின் அதிகாரத்தின் கீழ் அவர்களை விட்டுவிடவோ, ஒப்படைக்கவோ செய்யலாம். தாங்கள் தழுவிய தனிப்பட்ட வாழ்க்கை முறையின்படி வாழ்வதின் மூலம் இவ்வுறுப்பினர்கள் திருச்சபைக்குப் பணியாற்றும்போது திருச்சபைச் சட்டங்களுக்கு ஏற்ப, ஆயர்களை மதித்து அவர்களுக்குக் கீழ்படியக் கடமைப்;பட்டுள்ளனர். இந்த ஆயர்கள் தினப்பட்ட சபைகளின் மேல் அருள்பணியாளருக்குரிய அதிகராம் கொண்டிருப்பதும் திருத்தூது அலுவலிலே ஒன்றிப்பும் மன இசைவும் தேவைப்படுவதுமே இதற்குக் காணம்.144
திருச்சபை துறவற வாழ்க்கை முறைக்கு ஒப்புதல் அளித்து, அதனை அதிகாரப்பூர்வமான நிலையாக நிறுவியதுமன்றி, அது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலை என்பதைத் தனது வழிபாட்டுக் கொண்டாட்டத்தாலும் எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், திருச்சபை கடவுள் தன்னிடம் ஒப்படைத்த அதிகாரத்தால் துறவிகள் கொடுக்கும் நேர்ச்சைப்பாடுகளை ஏற்கிறது; தன் பொது இறைவேண்டலால் அவர்களுக்கு உதவியும் அருளும் ஈய கடவுளை இறைஞ்சுகிறது; அவர்களின் அர்ப்பணத்தை நற்கருணைப் பலியோடு ஒன்றித்துக் கடவுளிடம் அவர்களைக் கையளிக்கிறது; அவர்களுக்கு அருள் ஆசியையும் வழங்குகிறது.

துறவற அர்ப்பணத்தைப் போற்றுதல்

46. நம்பிக்கைக் கொண்டோர் நம்பிக்கை இல்லாதோர் யாவருக்கும் கிறிஸ்துவைத் தங்கள் வழியாகத் திருச்சபை என்றும் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவ்றாகத் துறவிகள் அக்கறையுடன் முயல்வார்களாக. மலைமீது தியானிப்பவராகவும், இறையாட்சியை மக்கள் கூட்டத்திற்கு அறிவிப்பவராகவும், நோயாளிகளையும் துன்புறுவோரையும் நலப்படுத்துபவராகவும், நல்வாழ்விற்குப் பாவிகளை மனந்திருப்புபவராகவும், சிறுவர்களுக்கு ஆசி அளிப்பவராகவும், அனைவருக்கும் நன்மை செய்பவராகவும், தம்மை அனுப்பிய தந்தையின் திருவுளத்திற்கு எப்பொழுதும் பணிந்து நடப்பவராகவும்145 கிறிஸ்துவை எல்லாருக்கும் வெளிக்காட்டுவதற்குத்துறவிகள் அக்கறையுடன் முயல்வார்களாக.
இறுதியாக, நற்செய்தி அறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதனால் உண்மையிலேயே உயர்வாக மதிக்கப்படும் நலன்களைத் துறக்க வேண்டியிருந்தாலும், மனித ஆளுமை வளர்ச்சிக்கு அது தடை செய்யாது; மாறாக, தன் இயல்பினாலேயே அந்த வளர்ச்சிக்குச் சிறந்த முறையிலே உதவுகிறது என யாவரும் நன்கு அறிவார்களாக. ஏனெனில், இச்சபைகளை நிறுவிய தூயோர் பலரின் முன்மாதிரிகளை எண்பிப்பதுபோல், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அழைத்தலினால் அவரவர் விரும்பியேற்ற இவ்வறிவுரைகள் இதயத் தூய்மைக்கும், ஆவிக்குரிய சுதந்திரத்திற்கும் மிகவும் உதவுகின்றன் அன்பின் ஆர்வத்தை அயராது தூண்டுகின்றன் சிறப்பாக ஆண்டவர் கிறிஸ்து தமக்கெனத் தேர்ந்து கொண்டதும், அவருடைய கன்னித்தாய் தழுவியதுமான கன்னிமையோடு கூடிய ஏழ்மை வாழ்வைச் சீரிய முறையில் ஒத்து வாழக் கிறிஸ்தவர்களுக்குத் துணை:ரிகின்றன. தம்மையே அர்ப்பணிப்பதனால் துறவிகள் மற்ற மக்களுக்கு அந்நியராகவோ வையகநகரிலே பயனற்றராகவோ ஆவதாக எவரும் கருதவேண்டாம். ஏனெனில், சில வேளைகளில் தங்கள் காலத்தவரோடு நேரிழையாகத் தொடர்பு கொள்ளாமல் இருப்பினும், மிகவும் சிறந்த முறையில் கிறிஸ்துவின் ;உள்ளத்தில் அவர்களோடு ஒன்றித்திருக்கின்றனர்; அவர்களுடன் அருள் முறையில் ஒத்துழைக்கின்றனர். இவர்களுடைய ஒத்துழைப்பின் மூலம் மண்ணக நகரைக் கட்டி எழுப்புவோரின் உழைப்பு வீணாகப் போய்விடாதபடி, இக்கட்டடம் எப்பொழுதும் ஆண்டவரிலே அடித்தளம் இடப்பட்டு அவரைச் சார்ந்து நிற்கின்றது.146
இறுதியாக, துறவற மடங்களிலும் பள்ளிகளிலும் மருந்தகங்களிலும் நற்செய்தி அறிவிப்புத் தளங்களிலும் பணியாற்றுகின்ற ஆண்கள், பெண்கள், சகோதரர் சகோதரிகள் மனத்தாழ்மையோடும் உறுதியான பற்றோடும் துறவற அர்ப்பணத்தின் வழியாகக் கிறிஸ்துவின் மணமகளை அணி செய்கின்றனர்; மக்கள் அனைவருக்கும் பெருந்தன்மையோடு பல்வேறு பணிகளைப் புரிகின்றனர். இவர்களைத் திருச்சங்கம் ஊக்குவிக்கிறது; பாராட்டுகிறது.

துறவற வாழ்வில் நிலைத்திருக்க வேண்டுகோள்

47. இவ்வறிவுரைகளை வெளிப்படையாக ஏற்பதற்கு என்று அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும், கடவுள் தங்களுக்கு விடுத்த இந்த அழைப்பிலே நிலைத்திருந்து மேன்மேலும் சிறந்து விளங்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். தூய்மை நிலையில் திருச்சபை வளரும்பொருட்டும், கிறிஸ்துவிலும், கிறிஸ்துவின் வழியாகவும் தூய்மை நிலையனைத்தின் ஊற்றும் சுனையுமான ஒரே, பகுபடா மூவொரு கடவுள் உயர் மாட்சி பெறும் பொருட்டும் இவ்வாறு செயல்படுவார்களாக.


இயல் 7
பயணத்திருச்சபையின் இயல்பும் விண்ணகத் திருச்சபையோடு இதன் ஒன்றிப்பும்

நமது அழைப்பின் நிறைவுக்கால இயல்பு

48. தூய்மைநிலை அடைவதற்காகத் திருச்சபையில் இணைய கிறிஸ்து இயேசுவில் நாமனைவரும ;அழைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் அருளால் யாவும் சீர்படுத்தப்படும் காலம் என்று வருகிறதோ (திப 3:21), என்று மனிதரோடு நெருங்கிப் பிணைக்கப்பட்டு, அவர்கள் வழியே தன் குறிக்கோளை அடையும் அனைத்துலகும் மக்களினத்தோடு கிறிஸ்துவுக்குள் நிறைவுறப் புதுப்பிக்கப் பெறுகிறதோ (காண் எபெ 1:10; கொலோ 1:20; 2 பேது 3:10-13) அன்றுதான் விண்ணுலக மாட்சியில் திருச்சபை முழுமை பெறும்.
கிறிஸ்து உலகிலிருந்து உயர்த்தப்பெற்றபின் அனைவரையும் தம்பால் ஈர்த்துக்கொண்டார் (காண் யோவா 12:32 கிரேக்க மூலம்); இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட அவர் (காண் உரோ 6:9), உயிரளிக்கும் தம் ஆவியாரைச் சீடர்களுக்கு அனுப்பினார்; இவர் வழியாகவே திருச்சபையாகிய தமது உடலைக் கிறிஸ்து அனைவருக்கும் நிறைவாழ்வின் அருளடையாளமாக நிறுவினார்; மனிதர்களைத் திருச்சபைக்குக் கொணரவும் அதன் மூலம் அவர்களைத் தம்மோடு நெருங்கி இணைக்கவும் அவர்களுக்குத் தமது உடலையும் இரத்தத்தையும் ஊட்டுவதன்மூலம் தம் மாட்சி நிறைவாழ்வில் அவர்கள் பங்கு பெறச் செய்யவும் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்த வண்ணம் அவர் உலகிலே தொடர்ந்து செயல்புரிகின்றார். எனவே, நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாக்களிக்கப்பட்ட இந்தச் சீரமைப்பு கிறிஸ்துவில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது; தூய ஆவியின் வரவால் இது வளர்ச்சியுறுகிறது; இவர் வழியாகத் திருச்சபையிலே தொடர்ந்து நிகழ்கிறது. உலகில் தந்தை நம்மிடம் ஒப்படைத்த அலுவலை, வருங்கால நன்மைகளின் எதிர்நோக்கோடு இறுதிவரை நிறைவேற்றி, நமது மீட்பிற்காக நாம் உழைக்கும்போது (காண் பிலி 2:12) இத்திருச்சiபியிலே நம் மண்ணக வாழ்வின் பொருளையும்நம்பிக்கை நமக்குக் கற்பிக்கிறது.
எனவே, இறுதிக்காலம் நம் நடுவே ஏற்கெனவே வந்துவிட்டது (காண் 1 கொரி 10:11); உலகு புதுப்பிக்கப்படும் என மாற்றமுடியாத முறையிலே தீர்மானிக்கப்பட்டுவிட்டது; இப்புதுப்பித்தல் உலகிலே ஒருவிதத்தில் முன்கூட்டியே தொடங்கி விட்டது; ஏனெனில் நிறைவற்றதானாலும் உண்மையான தூய்மை நிலையால் இவ்வுலகிலேயே திருச்சபை அணிசெய்யப் பெற்றிருக்கிறது. நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் வரை (காண் 2 பேது 3:13) பயணத் திருச்சபை இக்காலத்திற்குரிய தன் அருடைளயாங்களாலும் அமைப்புகளாலும், கடந்து செல்லும் இவ்வுலகின் தோற்றத்தையே பெற்றிருக்கிறது; இந்நாள் வரை பேறுகால வேதனையுற்றுத் தவித்து கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் பேராவலோடு காத்திருக்கும் படைப்போடுதான் திருச்சபையும் வாழ்கின்றது (காண் உரோ 8:19-22).
ஆகவே, திருச்சபையில் கிறிஸ்துவோடு ஒன்றிக்கப் பெற்ற, ''நாம் உரிமைப் பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிற'' (எபே 1:14), தூய ஆவியினால் குறியிடப்பெற்று உண்மையிலே கடவுளின் மக்கள் என நாம் அழைக்கப்படுகிறோம்; மக்களாகவே இருக்கிறோம் (காண் 1 யோவா 3:1). ஆனால் கிறிஸ்துவொடு இன்னும் நாம் மாட்சி பொருந்தியவராய்த் தோன்றவில்லை (காண் கொலோ 3:4) ஆகவே, ''இவ்வுடலில் குடியிருக்கும் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம்'' (2 கொரி 5:6). முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட நாமும் பெருமூச்சு விட்டுக்கொண்டு (காண் உரோ 8:23), கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்றும் ஆவல் கொண்டுள்ளோம் (காண் பிலி 1:23). நமக்காக இறந்து (காண் 2 கொரி 5:15) உயிர்பெற்று எழுந்த அவருக்காக அதிக ஊக்கத்துடன் வாழ இதே அன்பு நம்மைத் தூண்டுகிறது. ஆகவே, எல்லாவற்றிலும் ஆண்டவருக்கு உகந்தவராய் இருப்பதே நம் நோக்கம் (காண் 2 கொரி 5:9). அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நின்று, பொல்லாத நாள் வரும்போது தடுத்து நிறுத்தக் கடவுள் அருளும் படைக் கலன்களை அணிகிறோம். (காண் எபே 6:11-13); ஏனெனில், நமது இந்த ஒரே மண்ணக வாழ்வு முடிந்தபின் (காண் எபி 9:27) ஆண்டவரோடு மணவிழாவில் கலந்து ஆசி பெற்றவர்களோடு எண்ணப்பட தகுதி பெறவும் (காண் மத் 25:31-46), பொல்லாத சோம்பேறிப் பணியாளர்களைப் போல், (காண் மத் 25:26) என்றும் அணையாத, நெருப்பிலேயும் (காண் மத் 25:41) ''அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கின்ற'' மத் 2:13; 25:30) புற இருளிலேயும் போடுங்கள் என்ற ஆணைக்கு உள்ளாகாமல் இருக்கவும், நாளோ வேளையோ உங்களுக்கும் தெரியாது என்று ஆண்டவர் நம்மை எச்சரிப்பதாலும் நாம் எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும். ஏனெனில், மாட்சிநிறை கிறிஸ்துவோடு அரசாளுமுன்னே, ''நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறு பெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்'' (2 கொரி 5:10). உலக முடிவிலே ''நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயென செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர்'' (யோவா 5:29; காண் மத் 25:46). ''இக்காலத்தில் நாடும் படும்துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை'' (உரோ 8:18; 2 திமோ 2:11-12) என்று எண்ணி நம்பிக்கையில் உறுதிபெற்று, ''மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது'' (தீத 2:13); ''அவர்... தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணிய வைக்கவும் வல்லவர்: (பிலி 3:21). ''இறைமக்கள் அவரைப் போற்றிப் புகழ்வர்; நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்ற'' அவர் வருவார் (2 தெச 1:10).

விண்ணகத் திருச்சபைக்கும் பயணத் திருச்சபைக்கும் இடையே உள்ள ஒன்றிப்பு

49. எனவே, ஆண்டவர் வான தூதர் அனைவரும் புடைசூழ மாட்சியுடன் வரும்வரை (காண் மத் 25:31)இ சாவு அழிக்கப்பட்டு, யாவும் அவருக்கு அடிபணியும் வரை (காண் 1 கொரி 15:26-27), அவருடைய சீடர்களில் சிலர் இம்மணிலே பயணம் செய்கின்றனர்; இவ்வுலக வாழ்வை முடித்த சிலர் தூய்மைப்படுத்தப் பெறுகின்றனர்; சிலர் ''மூவரும் ஒருவருமான கடவுளை அவர் இருப்பது போலவே தெளிவாக''147 கண்டு மாட்சியடைகின்றனர். எனினும், நாமனைவரும் வௌ;வேறு அளவிலும் முறையிலும் என்றாலும் கூட, ஒரே இறையன்பிலும் ஒரே பிறரன்பிலும் பங்கு பெறுகிறோம்; நம் கடவுளுக்கு ஒரே மாட்சிப் பாடல் இசைக்கிறோம். ஏனெனில், கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்கும் அனைவரும் அவர்தம் ஆவியாரைக் கொண்டிருந்து ஒரே திருச்சபையாய் அமைந்து, அவரில் ஒருவரோடொருவர் ஒன்றிக்கின்றனர் (காண் எபே 4:16). எனவே, கிறிஸ்துவின் அமைதியில் துயில்கொண்ட சகோதரர் சகோதரிகளுக்கும் வழிப்போக்கர்களாகிய நமக்குமிடையே உள்ள ஒன்றிப்பு சிறிதும் அறுந்துவிடவில்லை; மாறாக, திருச்சபையின் நிலையான நம்பிக்கையின்படி அருள் நலன்களைப் பரிமாறிப் பகிர்ந்து கொள்வதன் வழியாக இவ்வொன்றிப்பு உறுதிப்பெறுகின்றது.148 ஏனெனில், விண்ணகத்தில் உள்ளோர் கிறிஸ்துவோடு மிக நெருங்கி ஒன்றித்திருப்பதால் திருச்சபை முழுவதையும் தூய்மை நிலையில் அதிக உறுதியாக வலுப்படுத்துகின்றனர்; திருச்சபை இவ்வுலகில் கடவுளுக்குச் செலுத்தும் வழிபாட்டை அவர்கள் மேன்மை பெறச்செய்து, அது இன்னும் வளரப் பலவிதத்தில் உதவுகின்றனர் (காண் 1 கொரி 12:12-27).149 ஏனெனில், தாய்நாட்டிற்குள் வரவேற்கப்பட்டு, ஆண்டவரோடு குடியிருக்கும் அவர்கள் (காண் 2 கொரி 5:8) கிறிஸ்து வழியாக, கிறிஸ்துவோடு, கிறிஸ்துவில் தந்தையிடம் நமக்காக அயராது பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.150 கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரே இணைப்பாளரான கிறிஸ்து இயேசுவின் வழியாக (காண் 1 திமோ 2:5) உலகிலே அவர்கள் பெற்ற பேறுகளைக் காணிக்கையாக்கியும், எல்லாவற்றிலும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தும், கிறிஸ்து மேலும் படவேண்டிய வேதனையைத் திருச்சபையாகிய அவரது உடலுக்காகத் தங்கள் உடலில் ஏற்று நிறைவு செய்தும் (காண் கொலோ 1:24)151 அவர்கள் பரிந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால், அவர்களின் சகோதர அக்கறை நமது பலவீனத்திற்குப் பெரிதும் துணை புரிகிறது.

பயணத் திருச்சபைக்கும் விண்ணகத் திருச்சபைக்கும் உள்ள உறவுகள்

50. கிறிஸ்து இயேசுவின் மறையுடல் முழுவதும் கொண்டுள்ள இவ்வொன்றிப்பை விருப்புடன் ஏற்று, கிறிஸ்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்தே வழிப்போக்கர்களின் திருச்சபை இறந்தவர்களின் நினைவை வணக்கத்தோடு கொண்டாடி வந்துள்ளது.152 ஏனெனில், ''பாவங்களின்று மீட்கப்படும்படி இறந்தவர்களுக்காக வேண்டிக் கொள்வது புனிதமும் பயனுள்ள எண்ணமாய் இருக்கின்றது'' (2 மக் 12:46) (வுல்); எனவே, அது அவர்களுக்காகச் செபங்களும் ஒப்புக் கொடுத்துள்ளது. இரத்தம் சிந்தி, நம்பிக்கைக்கும் அன்பிற்கும் ;ஒப்புயர்வற்ற சாட்சி தந்த திருத்தூதர்களும் கிறிஸ்துவின் மறைச்சாட்சிகளும் மநம்மோடு கிறிஸ்துவில் நெருங்கி இணைக்கப்பட்டிருக்கின்றனர் எனத் திருச்சபை என்றும் நம்பி வந்திருக்கிறது; தூய கன்னிமரியாவோடும் தூய வான தூதர்களோடும் சிறந்த பக்தியுடன் அவர்களை வேண்டிவந்திருக்கிறது;153 அவர்கள் பகிர்;ந்து உதவ பக்தியுடன் அவர்களை வேண்டி வந்திருக்கிறது. கிறிஸ்துவின் கன்னிமையையும் ஏழ்மையையும்அ திகமாக நெருங்கிப் பின்பற்றியவர்கள் விரைவில் அவர்களோடு எண்ணப்பட்டனர்.154 இறுதியாகக் கிறிஸ்தவ நற்பண்புகளைக் கடைப்பிடித்ததாலும்155 கடவுளின் அருள்கொடைகளாலும் நம்பிக்கை கொண்டோரின் பக்திக்குரிய வணக்கத்திற்கும் மாதிரிகைக்கும் உரியவர்களென எடுத்துரைக்கப்பெறும் மற்றவர்களும், அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.156
ஏனென்றால், கிறிஸ்துவை உண்மையுடன் பின்பற்றியவர்களின் வாழ்வை நாம் கண்ணோக்கும்பொழுது, வரப்போகும் நகரை நாடிச்செல்ல (காண் எபி 13:14ம் 11:10ம்) புதிய முறையில் தூண்டப்படுகிறோம்; அஃதுடனே உலகின் மாறுப்ட நிலைகளினூடே ஒவ்வொருவருக்குமுரிய தகுதிக்கும் நிலைமைக்கும் ஏற்பக் கிறிஸ்துவோடு முழுஒன்றிப்புப் பெறுவதற்கு, அதாவது தூய்மை நிலயை அடைவதற்கு வழிகோலும் மிகவும் பாதுகாப்பான பாதையும் நமக்குக் காட்டப்படகிறது.157 நமது மனிதத் தன்மையிலே பங்கு பெற்றாலும் கிறிஸ்துவின் சாயலாக மேன்மேலும்நிறைவுற மாற்றம் அடைகின்றவர்களின் வாழ்வில் (காண் 2 கொரி 3:18) தம் உடனிருப்பையும் முகத்தையும் கடவுள் தெளிவாக ஒளிரச் செய்கின்றார். அவர்களில் கடவுளே நம்முடன் உரையாடுகின்றார்; தமது ஆட்சியின் அடையாளத்தையும் நமக்குக் காட்டுகிறார்.158 எண்ணிக்கையில்லாச் சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க (காண் எபி 12:1), நற்செய்தியின் உண்மைக்கு இத்தகைய சான்று கொண்டுள்ள நாம் இந்த ஆட்சியை நோக்கி ஊக்கமுடன் ஈர்க்கப்படுகிறோம்.
நாம் விண்ணகத் தூயோரின் நினைவைப் போற்றுவது அவர்கள் காட்டிய மாதிரிகைக்காக மட்டுமல்ல் இன்னும் மேலாக, சகோதர அன்பைச் செயல்படுத்துவதனால் திருச்சபை முழுவதன் ஒன்றிப்பு ஆவியாரில் உறுதிபெறும் என்பதற்காகவுமே (காண் எபே 4:1-6). ஏனெனில், வழிப்போக்கர்கள் நடுவிலுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்பு நம்மைக் கிறிஸ்துவிடம் மிகவும் நெருங்கிய முறையில் கூடடிச் செல்வது போலவே தூயவர்களோடு நாம் கொண்டிருக்கும் தோழமையும் நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கிறது; இவரே அருளனைத்திற்கும், இறைமக்களது வாழ்விற்கும் ஊற்றும் தொடக்கமுமாயுள்ளார்.159 எனவே, கிறிஸ்து இயேசுவின் நண்பர்களும் உடன் உரிமையாளர்களுமான நம் சகோதரர் சகோதரிகள் மேலும், சிறந்த நற்செயல்கள் புரிந்தோர் மேலும் நாம் அன்பு காட்டுவது மிகவும் சரியே. மேலும் அவர்களுக்காகத் தகுந்த முறையில் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் பொருத்தமானது.160 ''அவர்களைப் பணிவுடன் வேண்டுவதும், கடவுளிடமிருந்து அவரது மகனும் நம் ஆண்டவரும் நம் ஒரே மீட்பரும் விடுதலையாளருமான கிறிஸ்து இயேசுவின் வழியாக நன்மைகளைப் பெற, அவர்களின் இறைவேண்டல்களையும் ஆற்றலையும் உதவியையும் நாடிச் செல்வதும்போற்றத்தக்கது.''161 ஏனெனில், நாம் விண்ணகத் தூயோருக்கு அளிக்கும் அன்பின் உண்மைச் சான்றனைத்தும் தன் இயல்பாகவே ''தூயோர் அனைவருடையவும் மணிமுடியான''162 கிறிஸ்துவை நோக்கிச் சென்று அவரிலே முற்றுப் பெறுகிறது; இவர் வழியாகவே தம் தூயவர்களில் வியப்புக்குரியவரும், அவர்களில் மாட்சி பெறுகின்றவருமான கடவுளையும் நோக்கிச் சென்று முற்றுப் பெறுகின்றது.163
தூய ஆவியின் ஆற்றல் சிறப்பாகத் திருவழிபாட்டில் அருளடையாளச் சின்னங்களின் வழியாக நம்மில் செயலாற்றுகிறது. இந்தத் திருவழிபாட்டிலே இறைமாட்சியின் புகழை மகிழ்வுடன் ஒன்றுகூடி நாம்கொண்டாடும் பொழுதும்164 எல்லாக் குலங்களிலும் மொழியினரிலும் இனத்தாரிலும் நாடுகளிலுமிருந்து கிறிங்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்று (காண் திவெ 5:9) ஒரே திருச்சபையில் அன்றிக்கப்பெற்ற அனைத்து மக்களும், மூவரும் ஒருவருமான கடவுளை ஒரே புகழ்ச்சிப் பாவால் வாழ்த்தும் பொழுதுமே விண்ணகத் திருச்சபையோடு நமக்குள்ள ஒன்றிப்பு மிகவும் சீரிய முறையிலே செயலாக்கம் பெறுகிறது. எனவே, நற்கருணைப்பலிசெலுத்தும்போது மாட்சிமிக்க என்றும் கன்னியான மரியாவுடனும் தூய யோசேப்புடனும் தூய திருத்தூதர்களுடனும் மறைச் சாட்சிகளுடனும் தூயோர் அனைவருடனும் உறவு கொண்டு அவர்களின் நினைவைப் போற்றும் நாம் விண்ணகத் திருச்சபையின் வழிபாட்டுடன் உயரிய விதத்தில் ஒன்றிக்கப் பெறுகின்றோம்.165
இரண்டாம் நீசேயா,166 புளோரன்ஸ்,167 திரிதெந்து168 திருச்சங்கங்களின் தீர்வுகளை மீண்டும் எடுத்துரைக்கின்றது. அதே நேரத்தில் சில தவறான செயல்கள், வரம்: கடந்த செயல்கள், குறைகள் அங்குமிங்கும் தலைதூக்கினால், அவைகளைத் தடுக்கவோ, திருத்தி அமைக்கவோ முயன்று, அனைத்தையும் கிறிஸ்துவினுடையவும் கடவுளுடையவும் நிறைவுமிகு புகழ்சிக்காகச் சீரமைக்குமாறு இதில் சம்மந்தப்பட்ட யாவருக்கும் அருள்பணி சார்ந்த தன் பரிவினால் இத்திருச்சங்கம் அறிவுரை கூறுகின்றது. எனவே, உண்மையான தூயோர் வழிபாடு வெளிச் செயல்களைப் பெருக்குவதில்லை; மாறாக நமது செயலார்வமுள்ள அன்பின் ஆழத்திலேதான் அடங்கியிருக்கிறது என அவர்கள் நம்பிக்கை கொண்டோர்களுக்குக் கற்பிப்பார்களாக. இதே அன்பினால் தான் நம்முடையவும் திருச்சபையுடையவும் பெருநன்மைக்காகத் ''தூயவர்களின் வாழ்விலே மாதிரிகையும், அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும், அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகிறோம்''169 அதே நேரத்தில், விண்ணகத்தாரோடு நாம்கொள்ளும் உறவானது நிறைவான நம்பிக்கை ஒளியில் புரிந்துகொள்ளப்படும்போது, தூய ஆவியில் கிறிஸ்துவின் வழியாக இறைத்தந்தைக்கு அளிக்கப்படும் ஆராதனையை ஒருபோதும் குறைவுபடுத்துவதில்லை, மாறாக அதனபை; பெரிதும் வ ளப்படுத்துகிறது என நம்பிக்கை கொண்டோருக்கு அவர்கள் போதிப்பார்களாக.170
ஏனெனில் கடவுளின் பிள்ளைகளாகவும், கிறிஸ்துவில் ஒரே குடும்பமாகவும் இருக்கும் நாம் அனைவரும் (காண் எபி 3:6). ஒருவரொருவருக்கு அன்புக் காட்டித் தூயவராம் மூவொரு கடவுளை இணைந்து புகழ்ந்து ஒருவரோடு ஒருவர் உறவாடும்போது, திருச்சபையின் ஆழ்ந்த அழைத்தலுக்குச் செவிமடுக்கிறோம்; நிறைவுக்கால மாட்சிமிகு திருவழிபாட்டை முன்கூட்டியே சுவைத்து, அதில் பங்கு பெறுகிறோம்.171 ஏனெனில், கிறிஸ்து தோன்றும் பொழுதும், இறந்தவர்களறின் மாட்சிமிக்க உயிர்தெழுதலின் பொழுதும் கடவுளின் மாட்சி விண்ணக நகரை ஒளிரச்செய்யும்; ஆட்டுக்குட்டியே அதன் விளக்காக இருப்பார் (காண் திவெ 21:24). அப்போது, தூயவர்களின் திருச்பை முழுவதும் அன்புநிறை உன்னத பேரின்பத்தில் கடவுளையும் ''கொல்லப்பட்ட ஆட்டுக் குட்டியையும்'' (திவெ. 5:12) ஆராதிக்கும்; ''அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டு குட்டிக்கும், புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன'' (திவெ 5:13) என ஒரே குரலில் பறைசாற்றும்.

இயல் 8
கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும்
மறைபொருளில் இறை அன்னை தூய கன்னி மரியா

முன்னுரை

கிறிஸ்துவின் மறைபொருளில் தூய கன்னி மரியா

52. அளவில்லாக் கருணையும் ஞானமுமுள்ள கடவுள் உலகை மீட்க ஆவல் கொண்டு ''காலம் நிறைவேறியபோது... நம்மை மீ;ட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக... அனுப்பினார்''. (கலா. 4:4-5). ''இந்த மகன் மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இறங்கினார். தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்தார்''.172 மீட்பின் இந்த மறைபொருள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுத் திருச்சபையில் தொடர்ந்து நீடிக்கிறது.
இத்திருச்சபை ஆண்டவர் தமது உடலாக ஏற்படுத்தினார். இத்திருச்சபையில் தலைவராகிய கிறிஸ்துவோடும் அவருடைய தூயர் அனைவரோடும் ஒன்றித்து, ''நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு''173 நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்.

மரியாவும் திருச்சபையும்

53. ஏனெனில், வானவர் தூது சொன்னதும் கன்னிமரியா தன் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்றார்; வாழ்வை உலகிற்கு அளித்தார். எனவே, அவர் உண்மையாகவே கடவுளும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக் கொள்ளப் பெற்றுப் போற்றப் பெறுகிறார். தம்மகனின் பேறுபலன்களை முன்னிட்டு அவர் சீரிய முறையில் மீட்கப் பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப்பெற்று இருக்கிறார். இறைமகனின் தாய் என் இந்த உன்னத நிலையானலும் பெருமையாலும் அணி செய்யப் பெறுகின்றார். இதன் காரணமாக, தந்தைக்கு மிகவும் உகந்த மகளாகவும் தூய ஆவியின் திருக்கோயிலாகவும் திகழ்கின்றார். இந்த மேன்மையான அருள்கொடையினால் வானகத்திலும் வையத்திலுமுள்ள மற்ற எல்லாப் படைப்புகளையும் விட மிகவும் சிறப்புற்று விளங்குகின்றார். ஆயினும், அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப் பெறவேண்டிய மக்களனைவருள் அவரும் ஒருவராகின்றார். ''உண்மையிலே அவர் கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்குத் தாய்; ஏனெனில், அந்த தலையானவரின் உறுப்பினராக நம்பக்கை கொண்டோர் திருச்சபையிலே பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தார்''.174 இதனால்தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப் பெற்ற, முற்றிலும் தனிமைவாய்ந்த உறுப்பாகவும் நம்பிக்கையினுடையவும் அன்பினுடையவும் முன்குறியாகவும் மரியா போற்றப் பெறுகின்றார்; கத்தோலிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்பு மிகும் தாயாக அவரை ஏற்கின்றது.

திருச்சங்கத்தின் நோக்கம்

54. எனவே, இறை மீட்பர் தம் மீட்பு ஆவலை ஆற்றிவரும் களமான திருச்சபையைப் பற்றிய படிப்பினைகளை விளக்குகையிலே, மனிதரான வார்த்தையுடையவும் மறையுடலுடையவும் மறைபொருளில் தூய கன்னி மரியா கொண்டுள்ள பங்கையும் மீட்கப்பெற்ற மக்கள் இறையன்னைபால் கொண்டுள்ள கடமைகளையும் திருச்சங்கம் கருத்துடன் விளக்குகிறது. இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய். எனினும், மரியாவைப் பற்றிய படிப்பினை முழுவதையும் எடுத்துரைக்கத் திருச்சங்கம் விரும்பவில்லை. எனவே, கிறிஸ்துவுக்குப்பின் திருச்சபையிலே மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறவரும் நமக்கு மிக நெருங்கியவருமான மரியாவைப் பற்றிக் கத்தோலிக்க இறையியல் குழுக்களிடையே சுதந்திரமாக வாதிக்கப்படும் கருத்துகள் சட்டமுறையானவையே.175

ஆ. நிறiவாழ்வுத் திட்டத்தில் தூய கன்னியின் பங்கு

பழைய ஏற்பாட்டில் மெசியாவின் தாய்

55. பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டுத் திருநூல்களும் மாண்புக்குரிய மாரபும் நிறவாழ்வுத்திட்டத்தில் மீட்பரின் தாய்க்குரிய பணியை மேன்மெலும் அதிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன் அதுபற்றி நம் கவனத்தை ஈர்க்கின்றன. எவ்வாறு உலகிலே கிறிஸ்துவின் வருகை படிப்பழயாகத் தயார் செய்யப்பட்டு வந்தது என்னும் மீட்பு வரலாற்றைப் பழைய ஏற்பாட்டு நூல்கள் விவரிக்கின்றன. தொன்மை வாய்ந்த இந்நூல் திருச்சபையில் வாசிக்கப்பெற்று, பிற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் ஒளியில் உணரப்பெறும்போது மீட்பரின் தாயான ஒருபெண்ணின் உருவைப் படிப்படியாகத் தெளிவாய்க் காட்டுகின்றன. முதற் பெற்றோர் பாவம் புரிpந்தபின் அலகையின் மேல் பெறப் போகும் வெற்றியைப் பற்றிய வாக்குறுதி அவர்களுக்கு அளிக்கப் பெற்றது. இவ்வாக்குறுதியில் மரியா இறைவாக்காக முன்னுருவகிக்கப் பெற்றதை மேற்கூறிய பிற்கால முழு வெளிப்பாட்டின் ஒளியில் நாம் காணலாம் (காண் தொநூ 3:15). அதுபோல் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' எனப் பெயர் பெறப் போகும் மகனைக் கருத்தாங்கிப் பெற்றெடுப்பார் என்று கூறப்பெற்ற கன்னியும் இவரே (காண் எசா. 7:14; மிக் 5:2-3; மத் 1:22-23). ஆண்டவரில் மனத்தாழ்மையும் ஏழ்மையும்கொண்டோர் நம்பிக்கையோடு மீட்பை அவரிடமிருந்து எதிர்பார்த்து அதைப் பெறுகின்றனர்; இவ்வாறு மீட்புப் பெறுவோர் நடுவில் அவர் சிறந்து விளங்குகின்றார். இறுதியாக, சீயோனின் மாண்புமிக்க மகளான அவரோடு, வாக்குறுதியை எதிர்ப்பார்த்திருந்த நீண்டகாலம்; முடிந்து புதிய திட்டம் உருவாக்கப் பெறுகிறது. இத்திட்டத்திலே மனிதரைப் பாவத்தினின்று தம் உடலில் நிகழ்ந்த மறைநிகழ்ச்சிகள் வாயிலாக மீட்க இறைமகன் அவரிடமிருந்தே மனித இயல்பை எடுத்துக் கொண்டார்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

56. ஒரு பெண்ணால் சாவு வந்ததுபோல் மற்றொரு பெண்ணால் வாழ்வும் வரவேண்டும் என்பதற்காக, கிறிஸ்து மனிதர் அவதற்கு முன்பே, அவருடைய தாயாக முன்னியமிக்கப்பட்டவரின் இறைவு பெறவேண்டும் என்று இரக்கம் நிறை தந்தை ஆவல் கொண்டார். அனைத்திற்கும் புத்துயிர் அளிக்கும் வாழ்வானவரையே உலகிற்கு ஈந்தவரும், இத்தகைய மாபெரும் நிலைக்குரிய கொடைகளால் கடவுளால் அணி செய்யப் பெற்றவருமான இயேசுவின் அன்னையிடத்தில் இந்த ஆவல் சிறந்த முறையில் நிறைவேறுகின்றது. எனவே, இறை அன்னை முற்றிலும் தூயவர், பாவக்கறை எதுமில்லாதவர், தூய ஆவியினால் புதிய படைப்பாக உருவாக்கப்பெற்றவர் என்று அவரை அழைக்கும் வழக்கம் திருத்தந்தையரிடத்தில் நிலவியிருந்ததில் வியப்பொன்றுமில்லை.176 கருவான முதல் நொடியிலிருந்தே தனிச் சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்து நாசரேத்துக் கன்னியை, கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானத்தூதர் ''அருள்மிகப் பெற்றவரே'' (காண் லூக் 1:28) என்று வாழ்த்துகின்றார். இக்கன்னியும், ''நான் ஆண்டவரின் அடிமை; உமது சொல்படியே எனக்கு நிகழட்டும்'' (லூக் 1:38) என மறுமொழி கூறுகின்றார். இவ்வாறு ஆதாமின் மகளான மரியா கடவுள் வாக்குக்கு இசைவு அளித்ததால் இயேசுவின் தாயானார். பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருளத்தை ஏற்றுத் தம் மகனுக்கும்அவரின் அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு அவருக்குக் கீழும் அவருடனும் எல்லாம் வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியல்ல் மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர் எனத் திருத்தந்தையர் கருதுவது சரியே. தூய இரேனெயு கூறுவதுபோல, ''மரியா தன் கீழ்ப்படிதலால் தானும் மனித இனம் அனைத்தும் நிறைவாழ்வு பெறக்காரணமானார்''177 எனவே, இவரோடு வேறுபல பழங்காலத் தந்தையரும் தன் மறையுரைகளிலே பின்வருமாறு கூறுகின்றனர்: ''ஏவாளின் கீழ்ப்படியாமையால் விளைந்த முடிச்சு மரியாவின் கீழ்ப்படிதலால் அவிழ்க்கப்பட்டது; நம்பிக்கையின்மையால் கன்னி ஏவாள் கட்டியதை நம்பிக்கையால் கன்னிமரியா அவிழ்த்துவிட்டார்''.178 ஏவாளோடு ஒப்பிட்டு மரியாவை ''வாழ்வோரின் தாய்'' எனவும் அவர்கள் அழைக்கின்றனர்.179 ''ஏவாளால் சாவு, மரியாவால் வாழ்வு'' எனத் திரும்பத்திரும்ப எடுத்துரைக்கின்றனர்.180

மரியாவும் இயேசுவின் குழந்தைப் பருவமும்

57. மீட்புப் அலுவலில் மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பைக் கிறிஸ்து கன்னியிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம்: முதன்முதலில், தன்னைக் காண எழுந்து விரைந்து வந்த மரியாவை வாக்களிக்கப் பெற்ற மீட்பில் அவர் கொண்டிருந்த நம்பிக்கைக்காகப் பேறுபெற்றவர் என எலிசபெத்து வாழ்த்தவே, அப்போது இவர் வயிற்றிலிருந்து முன்னோடி துள்ளினார் (காண் லூக் 1:41-45); கிறிஸ்துவின் பிறப்பின்போது தன் கன்னிமையின் நிறைவைக் குறைப்படுத்தாது அதனைத் தூய்மைப்படுத்திய181 தன் முதற்பேறான மகனைக் கன்னிமரியா இடையர்களுக்கும் ஞானிகளுக்கும் மகிழ்ச்சி பொங்கக் காட்டினார்; ஏழைகளின் காணிக்கையை ஒப்புக் கொடுத்தப்பின், கோவிலில் ஆண்டவருக்குத் தம் மகனைக் கையளித்தபோது சிமியோன், 'இவர்' எதிர்க்கப்படும் அடையாளமாக இரப்பார்இ தாயின் உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும். இதனால் பலருடைய மனங்களிலிருந்தும் எண்ணங்கள் வெளிப்படும், என்று இறை வாக்காக முன்னுரைத்ததைக் கேட்டார் (காண் லூக் 2:34-35). காணாமற்போன குழந்தை இயேசுவை வருத்தத்தோடு தேடி அலைந்த அவர்தம் பெற்றோர் அவர் கோவிலில் தந்தையின் அலுவல்களிலே ஈடுபட்டிருக்கக் கண்டனர். மகனின் சொற்கள் அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், அவருடைய தாயோ இவை யாவற்றையும் தன் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார் (காண் லூக் 2:41-51).

இயேசுவின் பொது வாழ்விலே மரியா

58. இயேசுவின் பொது வாழ்வில் அவருடைய தாய் குறிப்பிடத்தக்க முறையில் தோன்றுகிறார். கலிலேயா நாட்டின் கானாவில் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து, அவர் தம் முதல் அருள் அடையாளத்தைச் செய்யுமாறு (காண் யோவா 2:1-11) தூண்டும் வேளையில் முதன் முறையாக மரியா தோன்றுகிறார். உடல் இரத்த உறவுகளையு; அவற்றின் பிணைப்புகளையும் கடந்ததே தமது ஆட்சி என்று கூறி, தம் அன்னை நம்பிக்கையோடு செய்து வந்தது போல் (காண் லூக் 2:19ம் 51ம்) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றவர் எனக் கிறிஸ்து பறைசாற்றியபோது (காண் மாற் 3:35 ஒத்; லூக் 11:27-28), இவ்வார்த்தைகளை அவர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு தூய கன்னியும் நம்பிக்கைத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார்; தம் மகனோடு கொண்;ட ஒன்றிப்பை சிலுவைவரை விடாது காத்துன வந்தார்; கடவுளின் திட்டத்திற்கேற்பச் சிலுவையின் அருகே நின்றார் (காண் யோவா 19:25); தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற்றார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார்; தான் பெற்றெடுத்த மகனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார். இறுதியாக, 'அம்மா, இவரே! உம் மகன்' (காண் யோவா 19:26-27)182 என்னும் சொற்களால் சிலுவையிலே உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே மரியாவைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்.

விண்ணேற்புக்குப்பின் தூய கன்னி

59. கிறிஸ்துவால் வாக்களிக்கப்பெற்ற ஆவியார் வரும்வரை மனிதகுல நிறைவாழ்வின் மறைபொருளை ஆடம்பரமாக வெளிப்படுத்தக் கடவுள் விரும்பவில்லை. எனவே, பெந்தகோஸ்து நாள் வரை திருத்தூதர்கள் ''சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்'' (திப 1:14) என்று படிக்கிறோம். ஏற்கெனவே - வானவர் தூதுரைத்த நேரத்திலேயே தன்மேல் நிழலிட்ட ஆவியாரின் கொடைக்காக மரியா வேண்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். இறுதியாகஈ மாசற்ற கன்னி ஆதிப் பாவக்கறை எதுவுமின்றிப் பாதுகாக்கப்பெற்று,183 தம் மண்ணுலக வாழ்வு நிறைவுற்றதும் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணுலக மாட்சிக்கு எடுத்துச் செல்லப்பெற்றார்;184 அனைத்துலக அரசியாக கடவுளால் உயர்த்தப்பெற்றார்; ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரானவரும் (காண் திவெ 19:16) பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கண்டவருமான தம் மகனுக்கு இன்னும் அதிக நிறைவாக ஒத்தவராகுமாறு இவ்வாறு உயர்த்தப்பெற்றார்.185

இ. தூய கன்னியும் திருச்சபையும்

மரியாவும் ஒரே இணைப்பாளாராகிய கிறிஸ்துவும்

60. ''கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும்ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்'' (1 திமோ 2:506) என்ற திருத்தூதரின் கூற்றிற்கேற்ப, நம் இணைப்பாளர் ஒருவரே. இந்த இணையற்ற இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவருமில்லை, குறைவதுமில்லை; மாறாக, அதன் ஆறறல் இதன் வழியாக வெளிப்படுகிறது. ஏனெனில், மக்கள் தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும்கட்டாயத் தேவையாலன்று, கடவுளின் விருப்பத்திலிருந்தே உருவாகிறது; கிறிஸ்துவினுடைய பேறுபலன்களின் நிறைவுப் பெருக்கத்தினின்றே வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அப்பணியை முற்றிலும் சார்ந்ததாய் இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது; நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நேர்முக ஒன்றிப்பை இச்செல்வாக்கு எவ்வகையிலும் தடுப்பதில்லை; மாறாக அதைப் போற்றி வளர்க்கின்றது.

நிறைவாழ்வு அலுவலில் மரியாவின் ஒத்துழைப்பு

61. இறைவாக்கு மனிதர் ஆனதின் காரணமாக கடவுளின் பராமரிப்புத் திட்டத்தில் நித்தியத்திலிருந்தே கடவுளின் தாய் என முன் நியமனம்பெற்றவர் தூய கன்னி. இவ்வுலகில் இவர் இறை மீட்பரின் அன்பு அன்னையாகவும், எவரையும் விஞ்சும் முறையிலே ஆண்டவரோடு தாராளமாக ஒத்துழைத்த துணையாளராகவும் மனத்தாழ்மை கொண்ட அடியாராகவும் விளங்கினார். கிறிஸ்துவைக் கருத்தாங்கிப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்தார்; கோவிலில் தந்தைக்கு அர்ப்பணித்து இறுதியாகச் சிலுவையில் உயிர்விடும் தம்மகனோடு அவரும் துன்புற்றார். இவ்வாறு மனிதருக்கு அருள்வாழ்வைத் திரும்பப் பெற்றுத்தரக் கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, பற்றி எரியும் அன்பு என்பவற்றால் நிறைவாழ்வு அலுவலில் மிகச் சிறப்பான விதத்தில் ஒத்துழைத்தார். தனால்தான் அருள் நிலையைப் பொறுத்த மட்டில் மரியா நமக்குத் தாயாக அமைந்தார்.

நிறைவாழ்வு அலுவலில் மரியாவின் பணி சார்புநிலையானது

62. வானவர் தூய சொல்ல வந்த நேரத்தில் நம்பிக்கையுடன் தாம்அளித்த இசைவைக் கன்னிமரியா சிலுவைவரை தயங்காது காத்து வந்தார். இவ்வாறு இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கெர்ளப்பட்டவர்கள் முடிவில்லா நிறைவு பெறும்வரை அருள் திட்டத்தின்படி மரியாவின் தாய்மையும் தடையின்றி நீடிக்கும். ஏனெனில், விண்ணேற்றத்திற்குப் பின்பும் இந்நிறைவாழ்வு அலுவலை அவர் விட்டுவிடவில்லை. மாறாக பலவிதங்களில் பரிந்துபேசி நிலையான நிறைவாழ்வடைய நமக்குத்தேவையான கொடைகளை எப்போதும் பெற்றுத் தருகின்றார்.186 பல இன்னல் இக்கட்டுகளிடையே இன்னும் பயணம் செய்து கொண்டிருக்கும் தம் மகனின் சகோதரர் சகோதரிகளை, அவர்கள் தங்கள் மகிழ்ச்சி நிறை தாய்நாடு வந்து சேரும்வரை, தாய்குரிய அன்போது காத்து வருகின்றார். எனவேதான், கன்னிமரியா திருச்சபையிலே பரிந்துரைப்பவர், துணையாக நிற்பவர், உதவி அளிப்பவர், எனப்பல சிறப்புப் பெயர்களால் பேர்றப் பெறுகிறார்.187 கன்னிமரியாவின் இந்நிலை ஒரே இணைப்பாளரான கிறிஸ்துவின் மாண்பையும் பயன்தரு ஆற்றலையும் சிறிதளவும் குறைக்கவோ கூட்டவோ செய்வதில்லை என188 நாம் நன்கு உணர வேண்டும்.
ஏனெனில், எந்தப் படைப்பையும் மனிதரான வாக்குக்கு நிகராக ஒருபோதும் கருத முடியாது. மாறாக, திருப்பணியாளர் ஒருபுறமும் நம்பிக்கை கொண்டவர்களான மக்கள் மற்றொரு புறமும் கிறிஸ்துவின் திருப்பணி நிலையில் வௌ;வேறு வகைகளில் பங்கு பெறுவது போலவும், கடவுளுக்குரிய ஒரே நன்மைப் பண்பு படைப்புக்களுக்கு வௌ;வேறு முறைகளில்உ ண்மையிலேயே பொழியப்படுவது போலவும், மீட்பர் கிறிஸ்துவின் ஒரே இணைப்பாளர் பணி, இப்பணியில் பங்குபேறும் படைப்புகளின் பல்வகை ஒத்துழைப்பை நீக்காது, அதை உருவாக்குகிறது.
மரியா இத்தகைய சார்புநிலையில்தான் பணியாற்றி வருகிறார் என்பதைத் திருச்சபை வெளிப்படையாக ஏற்கத் தயங்கவில்லை; அனுபவ வாயிலாகவும் திருச்சபை இதை என்றும் உணர்கிறது. இந்தத் தாய்க்குரிய துணையினால் ஊக்குவிக்கப்பட்ட நம்பிக்கை கொண்டோர் இணைப்பாளரும் மீட்பருமான கிறிஸ்துவோடு இன்னும் நெருங்கிய விதத்தில் இணையுமாறு மரியாவின் பணியைத் தம் இதயத்தில் கொள்ளுமாறு திருச்சபை பணிந்துரைக்கின்றது.

கன்னியும் தாயுமான மரியா திருச்சபைக்கு முன் மாதிரி ஆவார்

63. தூய கன்னி 'கடவுளின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். தூய அம்புரோக ஏற்கெனவே கற்பித்ததுபோல் நம்பிக்கை, அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறை ஒன்றிப்பு ஆகியவற்றால் இறையன்னை திருச்சபையின் முன்மாதிரி.189 அன்னையும் கன்னியும் என்று சரியாக அழைக்கப் பெறுகின்ற இத்திருச்சபையின் மறைபொருளிலே தூய கன்னி மரியா கன்னிமைக்கும் தாய்மைக்கும் தனிப்பட்ட சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக190 முன் நின்றார். ஏனெனில், கணவரையே அறியாத அவர் தூய ஆவி நிழலிடத் தன் நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் தந்தையின் மகனையே உலகில் பெற்றெடுத்தார். புதிய ஏவாளாகிய அவர் ஆதிப்பாம்பாகிய அலகைக்குச் செவிமடுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதுவரிடம் ஐயமற்ற நம்பிக்கை கொண்டார். பல சகோதரர் சகோதரிகளிடையே அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப்பேறாக (உரோ 8:29) கடவுளால் நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார். இவர்களை நம்பிக்கை கொண்டோராகப் பெற்றெடுத்து வளர்ப்பதில் மரியா தாய்ககுரிய அன்போடு ஒத்துழைக்கிறார்.

கன்னியும் தாயுமான திருச்சபை

64. மரியாவிடம் மறைந்து நிற்கும் தூய்மை நிலையைத் திருச்சபை தியானிக்கிறது; அவரது அன்பைக் கண்டு பாவிக்கிறது; தந்தையின் திருவுளத்தை உண்மையாய் நிறைவேற்றுகிறது; இவ்வாறு, கடவுளின் வார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதின்மூலம் திருச்சபையும் ஓர் அன்னை ஆகின்றது; ஏனெனில், மறையுரையாலும் திருமுழுக்காலும் பிள்ளைகளைப் புதிய அழிவில்லா வாழ்வுக்குப் பெற்றெடுக்கிறது; இப்பிள்ளைகள் தூய ஆவியால் கருவுற்றுக் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். திருச்சபையும் ஒரு கன்னியே. ஏனென்றால், தன் மணமகன் தந்த நம்பிக்கையை முழுமையாகவும் தூய்மையாகவும் காக்கிறது; தன் ஆண்டவரின் தாயைக் கண்டு பாவித்து, தூய ஆவியின் வல்லமையால் முழு நம்பிக்கை, தளரா எதிர்நோக்கு, உண்மை அன்பு191 இவற்றைக் கன்னிமைப் பண்போடு காக்கிறது.

மரியாவின் நற்பண்புகள் திருச்சபைக்கு முன்மாதிரி

65. தூய்மைமிகு கன்னிமரியாவில் திருச்சபை கறைதிரை ஏதுமில்லாத் தூய்மையின் நிறைவை ஏற்கெனவே அடைந்துவிட்டது (காண் எபே 5:27); எனினும், கிறிஸ்தவர்கள் மக்களின் பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற இன்னும் முயற்சி செய்கின்றனர். எனவே, தேர்ந்து கொள்ளப்பட்டோரின் குழுவனைத்திற்கும் நற்பண்புகளின் முன்மாதிலியாக மிளிரும் மரியாவை நோக்கித் தம் கண்களை அவர்கள் உயர்த்துகின்றனர். திருச்சபை பக்தியுடன் அவரைத் தியானித்து, மனிதரான வாக்கின் ஒளியில் அவரைக் கண்டு, அதன்வழி மனிதராதல் எனும் பெரும் மறைபொருளை வணக்கத்துடன் ஆராய்ந்து மேலும் மேலும் தன் மணமகனைப் போன்றதாகின்றது. ஏனெனில், நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கிறார். தாம் பறைசாற்றப்படும்போதும் வணங்கப்படும்போதும் நம்பிக்கை கொண்டோரைத்தம் மகனிடமும் அவரது பலிக்கும் தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். திருச்சபையும் கிறிஸ்துவின் மாட்சிக்காக உழைத்துக் கொண்டே தன் சீரிய மாதிரிகைக்கு அதிக அளவில் ஒத்ததாகிறது. நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றில் இடையறாது முன்னேறி, யாவற்றிலும் கடவுளின் திருவுளத்தைத் தேடி அதை நிறைவேற்றி வருகிறது. எனவே, தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை நாடுவது முறையே; ஏனெனில் திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளரவேண்டும் என்பதற்காகவே, தூய ஆவியால் கருவாகி அவர் கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார். மக்களின் மறுபிறப்புக்காகத் திருச்சபை ஆற்றும் திருத்தூதுப் பணியில் ஒத்துழைக்கும் அனைவருக்கும் மரியாவின் இத்தாயன்பு எழுச்சியூட்ட வேண்டும்.

ஈ. திருச்சபையில் தூய கன்னிக்கு வணக்கம்

இவ்வணக்கத்தின் இயல்பும் அடிப்படையும்

66. திருச்சபை மரியாவைத் தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. ஏனெனில், தம் மகனுக்குப் பிறகு, எல்லா வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் மேலாகக் கடவுளின் அருளால் உயர்த்தப்பட்டவரும், கிறிஸ்துவின் மறைநிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவருமாகிய இவர் கடவுளின் தூய்மைமிகு தாய் ஆவார். தூய கன்னியை தொடக்க முதலே, நம்பிக்கை கொண்டோர் ''கடவுளின் தாய்'' என்றழைத்து வணங்கினர். தங்கள் துன்பங்கள், தேவைகள் அனைத்திலும் அவரை மன்றாடி, அவரது அடைக்கலத்தில் புகலடைந்திருக்கின்றனர்.192 குறிப்பாக எபேசுத் திருச்சங்கத்திற்குப் பிறகு, வியத்தகு முறையில் கடவுளின் மக்கள் மரியாவை அதிகமதிகம் வணங்கவும் அன்பு செய்யவும்உதவிக்கழைக்கவும் கண்டுபாவிக்கவும் முற்பட்டனர். ''அவர் தம் அடிமையின் தார் நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத்தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'' (லூக் 1:48) என்று அவரே முன்மொழிந்ததற்கு ஏற்ப, இது நிறைவேறியது. திருச்சபையில் என்றும் இருந்துள்ள இவ்வணக்கம் உண்மையிலேயே தனிப்பட்டது; மனிதரான வாக்குக்கும் தந்தைக்கும் தூய ஆவியார்க்கும் நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே இது வேறுபட்டது; இந்த ஆராதனையை இவ்வணக்கம் மிகச் சிறந்தவிதமாய் ஊக்குவிக்கும் எனலாம். திருச்சபை கால, இடச் சூழ்நிலைகளையும், நம்பிக்கை கொண்டோரின் குண இயல்புகள், மன நிலைகள் ஆகியவற்றையும் மனதில் கொண்டு வழுவற்ற மரபுக் கோட்பாட்டிலிருந்து மாறுபடாத, இறையன்னைக்குரிய பல்வகையான பக்தி முயற்சிகளுக்;கு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பக்தி முயற்சிகளின் பயனாக நாம் தாயைப் பெருமைப்படுத்தும்போது, மகனை அறிந்து, அன்பு செய்து மாட்சிமைப்படுது;துகிறோம்; அவர் கட்டளைகளின்படி நடக்கிறோம். ஏனெனில், அவருக்காகவே அனைத்தும் உள்ளன (காண் கொலோ 1:15-16); ''தம் முழுநிறைவும் அருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்'' (கொலோ 1:19).

இவ்வணக்கம் பற்றிய அருள்பணி வழிமுறைகள்

67. திருச்சங்கம் இந்தக் கத்தோலிக்கக் கோட்பாட்டை நன்கு உணர்ந்தே கற்பிக்கிறது. அதே வேளையில் திருச்சபையின் பிள்ளைகள் அனைவரும் இத்தூய கன்னியின் வ ணக்கத்தை, சிறப்பாய்ப் பொதுவழிபாட்டு வணக்கத்தைப் பெருமனத்துடன் போற்றிப் பேணிவளர்க்க வேண்டும்; பல நூற்றாண்டுகளாய்த் திருச்சபையின் ஆசிரியம் போற்றிவரும் மரியன்னை பக்தி முயற்சிகளையும் பழக்க வழக்கங்களையும் மிகவாய் மதிக்க வேண்டும்; முன் காலங்களில் கிறிஸ்து, தூய கன்னி, தூயவர்கள் ஆகியவர்களின் உருவ வணக்கம் பற்றித் தீர்மானிக்கப்பட்டவைகளைச் சமய உணர்வுடன் கடைப்பிடிக்க வேண்டும் என மக்களுக்குத் திருச்சங்கம் அறிவுரை கூறுகிறது.193 இறையிலாரும் இறை வாக்கைப் போதிப்பவரும் கடவுளுடைய தாயின் தனிச் சிறப்பான மாண்மைப் பற்றிப் பேசும்போது, தவறான மிகைக் கூற்றுகளை ஒருபுறமும், மிகக் குறுகிய பார்வையை மறுபுறமும் கவனத்துடன் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.194 ஆசிரியத்தின் மேற்பார்வையில் அவர்கள் விவிலியம், திருத்தந்தையர், மறைவல்லுநர், திருச்சபையின் வழிபாட்டு முறைகள் பற்றிய ஆராய்ச்சியை வளர்த்துத் தூய கன்னியின் அலுவல்களையும் சிறப்பு உரிமைகளையும் சரிவர விளக்க வேண்டும். தூய கன்னியின் இவ்வலுவல்களும்உரிமைகளும் உண்மை, தூய்மைநிலை, இறைப்பற்று என்பவை அனைத்தின் ஊற்றான கிறிஸ்துவையே எப்போதும்நாடிநிற்பனவாகும். மேலும், பிற கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளாவது, வேறு எவராவது திருச்சபையின் உண்மைக் கோட்பாட்டைப் பற்றித் தவறாக எண்ண இடந்தரக்கூடிய எச்சொல்லையும் செயலையும் அவர்கள் கவனமாய்த் தவிர்ப்பார்களாக. கிறிஸ்தவ மக்கள் மனத்திலிருத்த வேண்டியதாவது; மெய்யான இறைப்பற்று பொருளற்றதும், தோன்றி மறைவதுமான உணர்ச்சிகளிலோ பயனற்ற குருட்டு நம்பிக்கையிலிருந்தே பிறக்கிறது. இந்நம்பிக்கை இறை அன்னையின் மேன்மையை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. பிள்ளைகள் என்ற நிலையில் நாம் நம் தாயிடம் அன்பு கொள்ளவும் அவருடைய நற்பண்புகளைக் கண்டு பாவிக்கவும் வேண்டுமென்னும் ஆர்வத்தையும் அது நம்மில் தூண்டுகிறது.

உ. பயணம் செய்யும் இறைமக்களுக்கு மரியா திடமான நம்பிக்கையும் ஆறுதலும்

மரியா இறைமக்களுக்கு அடையாளம்

69. பிற கிறிஸ்தவச் சகோதரர் சகோதரரிகளிடையிலும் கூட ஆண்டவரும் மீட்பருமானவரின் தாயைத்தகுந்த விதத்தில் பெருமைப்படுத்துபவர் உளர். குறிப்பாக, கீழைக் கிறிஸ்தவர்கள் எப்போதும் ஆர்வமிக்க உணர்வோடும்இறைப்பற்றுள்ள உளத்தோடும் கன்னிமரியாவுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.195 இவ்வுண்மை இத்திருச்சங்கத்திற்கு உவகையும் ஆறுதலும் அளிக்கின்றது. கடவுளுக்கும் மக்களுக்கும் தாயான கன்னி மரியா தம் இறை வேண்டலால் தொடக்கக் காலத் திருச்சபைக்கு உதவினார். அது போலவே, எல்லாத் தூயவர்களுக்கும் வான தூதர்களுக்கும் மேலாக விண்ணுலகில் உயர்த்தப்பட்டிருக்கும் இவர் இப்போதும் கூட தூயவர் அனைவருடனும் ஒன்றித்துத் தம் திருமகனிடத்தில் பரிந்து பேசுவாராக் கிறிஸ்தவர் என்னும் பெயரால் அணி செய்யப் பெற்றவராயினும் சரி, கிறிஸ்துவை இன்னும் அறியாதவராயினும் சரி, யாவரும் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் ஒரே இறைமக்கள் குலமாக, மிகத் தூய, பாகுபடா மூவொரு கடவுளின் மட்சிமைக்காய் மகிழ்வுடன் கூடும் காலம் வரை அவர் தொடர்ந்து பரிந்து பேசுவாராக் இதற்காகக் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தொடர்ந்து தம் விண்ணப்பங்களை அவரை நோக்கி எழுப்புவார்களாக.
இக்கொள்கை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளன யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூதர் ஆணையுரிமையால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவையும் இறைவனின் மாட்சிக்காகச் செயல்படுத்துமாறு ஆணையிடுகிறோம்.
பவுல்
தூய பேதுரு பேராலயம்
உரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்,
நவம்பர் 21, 1964


இரண்டாம் வத்திக்கான் தூயப் பொதுச்சங்கம் பணிகளிலிருந்து 1964 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 16ஆம் நாள் 123ஆம் பொதுக் கூட்டத்தில் மாண்புமிகு திருச்சங்கப் பொதுச் செயலர் வெளியிட்ட அறிவிப்புகள்

திருச்சபைப் பற்றிய விவாதக் கோப்பில் கூறப்பட்டு இப்போது தந்தையரின் வாக்கிற்கு விடப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் இறையியல் நிலை (Thelogical Qualification) என்ன எனும் வினா எழுப்பப்பட்டுள்ளது.
திருச்சபைப் பற்றிய விவாதக் கோப்பின் மூன்றாம் இயலிலுள்ள திருத்தப் பரிந்துரைகளைப் (Modi) பற்றி ஆய்ந்தபோது, கோட்பாட்டுப் பணிக்குழு (Commissio Doctrinalis) கீழ்க்காஞம் முறையில் இவ்வினாவிற்கு விடை பகர்ந்தது:
''அனைவரும் அறிந்த பொது ஒழுங்குகளின் பழயே எந்தச் சங்க வாசகத்தையும் விளக்கிப் பொருள் கூறவேண்டும் என்பது, தானே விளங்கும் ஓர் உண்மை''.
அப்போது, 1964ஆம் அண்டு மார்ச்சுத் திங்கள் 6 ஆம் நாள் தான் வெளியிட்டிருந்த அறிக்கையைக் கோட்பாட்டு ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டது. அதன் வாசகத்தை இவண் தருகிறோம்:
''சங்கங்களின் வழக்கத்தையும் இச்சங்கத்தின் அருள்பணி சார்ந்த குறிக்கோளையும் கருத்திற் கொண்டு நம்பிக்கையையும் அறநெறியையும் சார்ந்தவை எனத் தான் வெளிப்படையாக அறிக்கையிடுகின்றவற்றை மட்டுமே திருச்சபையில் நம்பிக்கையையும் அறநெறியையும் சார்ந்தவை என்று கொள்ள வேண்டுமெனத் திருச்சங்கம் வரையறுத்துக் கூறுகிறது.
திருச்சபையின் ஒப்புயர்வற்ற ஆசிரியத்தின் கோட்பாடுகளாகத் திருச்சங்கம் எடுத்துக்கூறும் பிறவற்றை, அதன் கருத்துப்படி, கிறிஸ்தவ மக்கள் யாவரும், அவர்கள் ஒவ்வொருவருமே, ஊற்றுத் தழுவிக் கொள்ள வேண்டும். இறையியலை விளக்கிப் பொருள் கூறும் விதிகளின்படி, பேசப்படும் பொருளிலிருந்தோ பேசும் முறையிலிருந்தோ திருச்சங்கத்தின் கருத்து விளங்கும்.
திருச்சபை பற்றிய விவாதக் கோப்பில் மூன்றாம் இயலிலுள்ள திருத்தப் பரிந்துரைகளை விளக்கும் முன்குறிப்பு ஒன்றை மேலதிகாரிகள் தந்தையர்க்கு அளிக்கின்றனர். இக்குறிப்பின் உளப்படியும் கருத்துப்படியுமே இவ்வியலிலுள்ள கோட்பாடுகளை விளக்கவும் உணர்ந்தறியவும் வேண்டும்.

விளக்கமளிக்கும் முன்குறிப்பு

திருத்தப் பரிந்துரைகளைப் பற்றி ஆராயுமுன் கீழ்க் கண்டவற்றைக் கூர்ந்து கவனிக்குமாறு ஆணைக்குழு பணிக்கிறது:
1. ''குழு'' (College) என்ற சொல்லுக்குச் சட்ட முறைமையை முழுவதும் ஒட்டி நின்று (Strictly Juridical) பொருள் கொள்ளுதல் கூடாது. அதாவது, தங்கள் அதிகாரத்தைத் தலைவரிடம் ஒப்படைத்திருக்கும்சம நிலையிலுள்ளோரின் குழுவாக இதனைக் கருதக்கூடாது. ஆனால், இது ஒரு நிலையான குழு. ஆய்ந்து அறியப்பட வேண்டும். எனவே, ''ஒரு குழுவைப் போல அதாவது ஒரு நிலையான கூட்டத்தைப்போல'' ஆண்டவர் பன்னிருவரையும் ஏற்படுத்தினார் என்று 12ஆம் திருத்தப் பரிந்துரைக்கு அளிக்கப்பட்ட பதிலில் வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும் காண் திருத்தப் பரிந்துரை 53, இ., இக்காரணத்திற்காகவே ''குழு'' (Order) ''கூட்டம்'' (Body) என்னும் சொற்களும் ஆயர் குழுவைக் குறிக்கச் சில இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன. பேதுருவுக்கும் பிற திருத்தூதர்களுக்கும் உள்ள உறவும் திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் உள்ள உறவும் இணை நிலையில் (Parallel) உள்ளன. ஆனால், இதிலிருந்து திருத்தூதர்களின் தனிச்சிறப்புக் கொண்ட அதிகாரம் அவர்கள் தம் வழித் தோன்றல்களுக்கும் தரப்படுகிறது எனப் பொருள்படுவதில்லை; தலைவர்க்கும் குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையே சமத்துவம் இல்லை என்பது தெளிவு. ஆனால், பேதுருவுக்கும் மறைத்தூதர்களுக்குமிடையே உள்ள உறவுக்கும், திருத்தந்தைக்கும் ஆயர்களுக்குமிடையே உள்ள உறவுக்குமிடையே ஒரு 'சமன்பாடு' (Proportionality) காணக் கிடக்கின்றது. எனவே, எண் 22ல் ''இதே முறையில்'' (Eadem Ratione) என்று கூறாமல் ''இதைப்போன்று'' (Pari Ratione) என்று எழுத முடிவு செய்தது ஆணைக்குழு. (காண் திருத்தப்பரிந்துரை 57)
2. ஆயர் திருநிலைப்பாட்டாலும் குழுவின் தலைவருடனும் உறுப்பினருடனும் கொண்டுள்ள திருச்சபை ஆட்சி ஒன்றிப்பினாலும் ஒருவர் குழுவின் உறுப்பினராகின்றார் காண் எண்.22 பிரிவு 1 முடிவு.
திருநிலைப்hபட்டின் வழியாகத்திரு அலுவல்களில் (Sacred functions) மெய்ப் பொருள் அடிப்படையிலான பங்கு (Ontological participation) தரப்படுகிறது. இது மரபிலிருந்து, திருவழிபாட்டு மரபிலிருந்துங்கூடத் தெளிவாகிறது. 'அதிகாரம்' (Potestas) என்னும் சொல்லைவிட 'அலுவல்' என்னும் சொல் வேண்டுமென்றே எடுத்தாளப்பட்டுள்ளது. ஏனெனில், 'அதிகாரம்' என்பது செயல்படவிருக்கும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆனால் திருச்சபை சட்டப்படி (Canonically) அல்லது சட்ட முறைமையின்படி (Juridically) திருச்சபை ஆட்சியாளர் வரையறுத்திருந்தால்தான், செயல்படவிருக்கும இந்த அதிகாரத்தைப் பெறமுடியும். ஒரு தனி அலுவலை அளிப்பதன் மூலம் அல்லது அதிகாரத்திற்கு உட்பட்ட மக்களைத் தருவதன் மூலம் திருச்சபை ஆட்சியாளர் இவ்வதிகாரத்தை வரையறுக்கலாம். ஒப்புயர்வற்ற அதிகாரத்தின் (Supreme Power) ஒப்புதல் பெற்ற விதிகளின் (Norms) படியேதான் அவர்கள் வரையறுக்க முடியும். அதிகாரத்திற்கு உட்பட்டோர் பலர், கிறிஸ்துவின் உளப்படி பல்வேறு நிலைகளில் ஒன்றுபட்டு உழைத்து இவ்வலுவல்களை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் மேற்கூறிய விதிகள் இயல்பாகவே (Nature of case) தேவையாகின்றன. இத்தகைய ஓர் ''ஒன்றிப்பு'' (Communion) சட்டத்தில் இடம் பெறும் முன்னே, காலச்சூழ்நிலைகளுக்கேற்பத் திருச்சபை வாழ்விலே இருந்து வந்திருக்கிறது.
எனவே, திருச்சபையின் தலைவரோடும் அதன் உறுப்பினரோடும் திருச்சபை ஆட்சி ஒன்றிப்பு தேவை என வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. ஒன்றிப்பு என்னும் கருத்து பழங்காலத் திருச்சபையில் மிகவும் உயர்வாக மதிக்கப்பெற்றது. (இன்றும் முக்கியமாகக் கீழைச் சபைகளில் இக்கருத்துக்குப் பெருமதிப்பு உண்டு). தெளிவற்ற ஓர் உணர்ச்சியாக இதனை நாம் கருதக்கூடாது; மாறாக அது ஓர் உடலமைப்புப் போன்றது. (Organic Reality) இதற்குச் சட்ட முறையான வடிவம் வேண்டும். அதே நேரத்தில் இது அன்பால் இயக்கப்படுகிறது. எனவே, இதனைத் திருச்சபை ஆட்சி ஒன்றிப்பு என எழுதுமாறு ஆணைக்குழு கிட்டத்தட்ட முழு இசைவுடன் தீர்மானித்தது. (40 ஆம் திருத்தப்பரிந்துரையையும் எண் 24ன் கீழ் அதிகாரப்பூர்வமான பணி (Missio Canonica) பற்றிய கூறப்பட்டவையும் காண்க.)
ஆயர்களின் ஆட்சியுரிமை (Jurisdiction) குறித்து அண்மைக்காலத் திருத்தந்தையர் விடுத்த ஆணங்கள் மேற்கூறிய, இன்றியமையாத முறையிலான அதிகார வரையறையின் (Datermination of Powers) அடிப்படையிலே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
3. தனக்கென ஒரு தலைவரின்றி இருக்க முடியாத இக்குழு ''திருச்சபை முழுவதன் மேல் ஒப்புயர்வற்ற முழு அதிகாரம் கொண்டுள்ளது'' என்றும் கூறப்பட்டிருக்கிறது. உரோமை ஆயரின் முழு அதிகாரத்துக்கு ஊறு விளையாதிருக்கும் பொருட்டு, இவ்வதிகாரம் ஏற்றுக் கொள்ளப்படத்தான் வேண்டும். கிறிஸ்துவின் பதிலாள் என்னும் முறையிலும் அனைத்துலகத் திருச்சபையின் அருள்பணியாளர் என்னும் முறையிலும் தமக்கே உரிய அலுவல்களைக் குழுவில் தலைவர் முழுமையாகக் கொண்டிருக்கிறார். குழு என்றாலே அதற்கு ஒரு தலைவர் கண்டிப்பாக எப்போதும் உண்டு என்பது தெளிவு. வேறுபாடு உரோமை ஆயருக்கும் ஒருங்கிணைந்த பிற ஆயர்களுக்குமிடையே அல்ல, ஆனால் உரோமை ஆயர் தனியாக உள்ள நிலைக்கும் பிற ஆயருடன் சேர்ந்த நிலைக்கும் இடையேதான் உள்ளது. திருத்தந்தை குழுவின் தலைவர். எனவே, சிலவற்றை அவர் மட்டுமே செய்ய முடியும். இவை எம்முறையிலும் ஆயர்களை சார்ந்தனவல்ல. குழுவைக் கூட்டுதல், அதனை இயக்குதல், செயல் சார்ந்தனவல்ல. குழுவைக் கூட்டுதல், அதனை இயக்குதல், செயல் திட்டத்திற்கான விதிகளும் ஒப்புதல் அளித்தல் போன்றன இவற்றிற்கு எடுத்துக்hகட்டுகளாகும். (காண் திருத்தப் பரிந்துரை 81). முழு மக்கள் குழுவும் திருத்தந்தையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்கள் குழுவைக் கவனிக்கும் இப்பணியை அவர் தனியாகவோ குழுவாகவோ ஆற்றலாம். காலத்தின் போக்கிலே திருச்சபையில் மாறிவரும் தேவைகளுக்கேற்ப இவற்றில் எவ்வழி சிறந்ததென தீர்மானிப்பது அவரையே சார்ந்தது. உரோமை ஆயர் தம் சொந்த முடிவின்படியும் திருச்சபையின் நலனை முன்னிட்டுமே குழுச் செயலை முறைப்படுத்தவும், ஊக்குவிக்கவும் அதற்கு ஒப்புதல் அளிக்கவும் செய்கிறார்.
4. திருச்சபையின் ஒப்புயவர்வற்ற அருள்பணியாளர் என்னும் முறையில் திருத்தந்தை தாம் விரும்பும் முறையிலே, தம் அலுவலுக்கு ஏற்றபடி, எப்போதும் தம் அதிகாரத்தைச் செயல்படுத்தலாம். குழு எப்போதுமே இருக்கின்றது; எனினும் இக்காரணத்திற்காக குழுச்செயலை இச்சொல்லின் முழு பொருளில் (Actione Stricte Collegiali) எப்போதும் இக்குழு செயல்படுத்துவதில்லை. திருச்சபை மரபிலிருந்தும் இது அறியக்கிடக்கிறது. அதாவது எப்போதும் குழு முழுமையாக செயல்படுவதில்லை (Non Semper est in actu pleno) சிலநேரங்களில் தான் முழுமையான பொருளில் குழுச் செயல் ஆற்றுகிறது; இதுவும் ''தலைவரின் இசைவுடன்'' மட்டுமே நடைபெறுகிறது. தலைவரின் இசைவுடன் என்று கூறப்பட்டிருப்பதால் யாரோ 'வெளியால்' ஒருவரைச் சார்ந்திருத்தல் என்ற எண்ணத்திற்கே இடமிருத்தல் ஆகாது. ''இசைவு'' என்னும் சொல் தலைவருக்கும் உறுப்பினருக்கும் இடையேயுள்ள ஒன்றிப்பை நினைவிற்குக் கொணருகிறது; தலைவருக்கே முறையாக உரிய இச்செயலின் அவசியத்தையும் இது குறிக்கிறது. இக்கருத்து எண் 22, பிரிவு 2ல் வெளிப்படையாகக் கூறப்பட்டிருக்கிறது; இதே எண்ணின் முடிவில் அது விளக்கவும் பெற்றிருக்கிறது 'மட்டுமே' என்னும் சொல் எல்லாச் சூழ்நிலைகளையும் தன்னுள் அடக்கி நிற்கிறது. எனவே, ''ஒப்புயர்வற்ற'' அதிகாரத்தின் ஒப்புதல் பெற்ற விதிகளை எப்போது;ம கடைப்பிடிக்க வேண்டும் என்பது தெளிவு. காண் திருத்தப் பரிந்துரை 84.
ஆயர்கள் தம் தலைவருடன் கொண்டுள்ள இணைப்புப் பற்றித்தான் பேச்சேயொழிய, திருத்தந்தையைச் சார்ந்திராது அவர்கள் செய்வனப்பற்றியல்ல என்பது அனைத்திலிருந்தும் தெளிவாகிறது. இவ்வாறாயின், தலைவர் செயல்படாமலிருக்கும் போது, 'குழு' என்ற கருத்திலிருந்தே விளங்குவதுபோல், ஆயர்களும் குழுவாகச் செயல்பட முடியாது. திருத்தந்தையுடன் எல்லா ஆயரும் கொண்டுள்ள இத்திருச்சபை ஆட்சி ஒன்றிப்பைத் திருச்சபை மரபில் நாம் ஐயத்திற்கிடமின்றிக் காண முடிகிறது.
குறிப்பு: அருளடையாள - மெய்ப் பொருள் அடிப்படையிலான அலுவலையும் (Sacramental - Ontoloigical Office), அது பற்றிய திருச்சபைச் சட்ட சட்டமுறைமையான கண்ணோட்டத்தையும் (Canonica - Juridical Aspect) வேறுபடுத்தி அறிய வேண்டும். இவற்றுள் முன்னயதைத் திருச்சபை ஆட்சி ஒன்றிப்பினின்றிச் செயல்படுத்த முடியாது. இப்பொருள் பற்றி ''சட்டத்திற்கு அமைவு'' (liceity) ''சட்டப்படி செல்லுபடியாகும்நிலை'' (validity) போன்ற சிக்கல்களை ஆயத் தேவையில்லை எனப் பணிக்குழு முடிவு செய்து இவற்றை இறையியலாரின் ஆய்வுக்கே விட்டுவிடுகின்றது. குறிப்பாக, பிரிந்து நிற்கும்கீழைச் சபையாரால் நடைமுறையில் செயல்படுத்தப்பெறும் அதிகாரத்தை விரித்துரைப்பதில் பல்வேறு கருத்து விளக்கங்கள் உளவாதலால் இறையியலாரின் ஆய்வு தேவையாகின்றது.''

ஏ பெரிக்கிளிஸ் ஃபெலிச்சி்
தூய பேதுரு பேராலயம்
உரோமை சாமோசத்தா பட்டத்தில் - பேராயர்,
இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கப் பொதுச் செயலர்.