மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 123
வேதாகமப் பகுதி : ரூத் 1:19 – 2:3
முடிவுத் திகதி : 2024-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)
திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.



1. நகோமி தனது மருமகளிடம் கூறியது என்ன?

உங்கள் தாய் வீட்டிற்குத் திரும்பிச்செல்லுங்கள்
இறந்தவர்களுக்கும் எனக்கும் ஆண்டவர் பரிவுகாட்டியதுபோல் உங்களுக்கும் பரிவு காட்டுவார்
நீங்கள் இருவரும் மீண்டும் மணம்செய்து இல்வாழ்வு நடத்த ஆண்டவர் அருள்புரிவாராக
நீங்கள் எவரும் மறுமணம்செய்யக்கூடாது
நீங்கள் என்னைவிட்டுப் பிரியக்கூடாது

2. நகோமி அவர்களை முத்தமிட்டபோது அவர்கள் அளித்த பதில் என்ன?

இல்லை அம்மா நாங்கள் உம்மோடுதான் இருப்போம்
உம்முடைய இனத்தவரிடையே இருப்போம்
நாங்கள் உம்மோடு இருக்க விரும்பவில்லை
உமது இனத்தவர் கொடியவர்கள்
உம்மோடு இருப்பதனால் உமக்கு எந்த நலனும் இல்லை

3. நகோமியின் மருமக்கள் தந்த பதிலுக்கு நகோமியின் பதில்என்ன?

என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்
நீங்கள் மணந்துகொள்ள மீண்டும் மைந்தரைப்பெற்று உங்களுக்கு தர என்னால் இயலுமா?
எனவே திரும்பிச்செல்லுங்கள்
எனக்கோ வயதாகிவிட்டது
கணவரோடு கூடிவாழும் பருவமும் கடந்து விட்டது

4. ஆண்டவர் என்னை பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார் என நெகோமி ஏன் கூறினார்?

தன் மகன்களை இழந்துவிட்டதற்காக
தனது மருமகளுக்கு கணவர் இல்லாமல் போனதற்காக
தான் வயது முதிர்ந்து போனதால்
தான் தனது மருமக்களோடு வாழமுடியாமல் போனதால்
அவளிடம் அதிகம் சொத்துக்கள் இருந்ததனால்

5. மாமியாரின் பேச்சை அடுத்து ஓர்பா என்ன செய்தார்?

அவர் மீண்டும் கதறி அழுதார்
தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்தார்
ஓர்பா பின் திரும்பிச் சென்றார்
இனத்தவரை நோக்கி திரும்பி சென்றார்
தன் தெய்வங்களை நோக்கி திரும்பி சென்றார்

6. மாமியாரின் பேச்சை அடுத்து ரூத் என்ன செய்தார்?

ரூத் மீண்டும் அழுதார்
மாமியாரை விட்டு பிரிந்து போக மறுத்து விட்டார்
மாமியாருக்கு சமையல் செய்து கொடுத்தார்
மாமியாரை ஏற்றிச்செல்ல கழுதை வாங்கினார்
மாமியாரை கழுதையில் ஏற்றிக்கொண்டு சென்றார்

7. மாமியாரின் பேச்சுக்கு ரூத்தின் பதில் என்ன?

உம்மை விட்டு பிரிந்து போக வற்புறுத்த வேண்டாம்
நீர் செல்லும் இடத்திற்கு நாம் வருவோம்
உமது இல்லமே எனது இல்லம்
உமது இனமே எனது இனம்
உமது தெய்வமே எனது தெய்வம்


8. ரூத் மாமியாரின் பேச்சுக்குப்பின் என்ன உறுதியோடு இருந்தார்?

நீர் எங்கே இறப்பீரோ அங்கே நானும் இறப்பேன்
அங்கே தான் என் கல்லறையும் இருக்கும்
சாவிலும் உம்மை விட்டு நான் பிரியமாட்டேன்
நான் உம்மை விட்டு பிரிந்தால் ஆண்டவர் என்னை தண்டிப்பாராக
ரூத் மாமியாரைவிட்டு போவதற்கு முடிவுசெய்தார்

9. ரூத்தின் மன உறுதியை அடுத்து நிகழ்ந்தது என்ன?

நகோமி வேறு ஒன்றும் கூறவில்லை
அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள்
அவர்கள் பெத்தலகேம் ஊரை அடைந்தார்கள்
அவர்கள் இயேசு பெத்லேக்கமில் பிறக்க மாட்டார் என நம்பி வேறுவழியாய் சென்றார்கள்
அங்கிருந்த இடையர் அவர்களை வழி மறித்து அங்கே தங்குமாறு கூறினார்கள்

10. நகோமி பெத்லகேம் ஊரை அடைந்தபோது என்ன நிகழ்ந்தது?

ஊரில் பரபரப்பு ஏற்பட்டது
ஊர் மக்கள் அவர்களை தாக்க வந்தார்கள்
இவள் நககோமி தானே என தங்களிடம் பேசிக்கொண்டார்கள்
நக்கோமி வேற்று உடையை உடுத்தி வந்திருந்தார்
அவர்கள் வந்த கழுதை பசியாக இருந்தது


11. பெத்லேகேமை வந்து அடைந்த நகோமி மக்களுக்கு என்ன கூறினார்?

என்னை நகோமி என அழைக்காதீர்கள்
நிறைவுடன் சென்றேன்
வெறுமையாய் வந்தேன்
ஆண்டவர் என்னை தண்டித்துவிட்டார்
ஆண்டவர் என் மீது துயரத்தை சுமத்தியுள்ளார்


12. நகோமி பெத்லகேமை வந்தடைந்தபோது அங்கு என்ன நிகழ்வு இடம்பெற்றது?

அங்கு வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது
மக்கள் பயிர் செய்யாமல் விட்டிருந்தார்கள்
பயிர்கள் மழையில் நனைந்து விட்டிருந்தது
வெள்ளம் பயிர்களை அழித்திருந்ததால் மக்கள் வாடி யிருந்தார்கள்
உற்சாகத்தோடு வாற்கோதுவை அறுவடை மக்கள்செய்யவில்லை


13. நகோமியின் உறவினர் பற்றித் தெரியவருவது என்ன?

நகொமியின் உறவினர் பெயர் போவாசு
அவர் செல்வம் உள்ளவர்
அவர் செல்வாக்கும் கொண்டவர்
அவர் எலிமலேக்கின் வழியில் உறவினர்
அவர் நகோமியின் பகைவர்


14. ரூத் நகோமியிடம் என்ன கூறினார்?

நான் கதிர் பொறுக்கிவருகிறேன்
எனக்கு அனுமதி தாரும்
ரூத் அனுமதி மறுத்தார்
நகோமி வயலுக்குச் சென்றார்
ரூத் நான் வயலுக்குச்செல்ல மாட்டேன் என்று கூறினார்


15. வயலுக்குப் போகும் போது என்ன நிகழ்ந்தது?

அறுவடை ஆட்களுக்கு பின்னால் சென்றார்
அவர்கள் சிந்திய கதிர்களை பொறுக்கிச்சேர்த்தார்
அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது
மோசேஸ் அங்கு வந்திருந்தார்
ஆரோனும் அங்கே வயலில் இருந்தார்


நீங்கள் கீழே குறிப்பிடும் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்

First Name:
Last Name:
E-mail:
Address :

City Code :
City :
Country: