ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஓ........ஞானமே



“உண்மையின் வழியை எங்களுக்குக் கற்பிக்க வந்தருள்வாய்”
மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஞானம் இன்றியமையாதது. அறிவு, புத்தி இவற்றிற்கு இடையே காணப்படும் மெய்யுணர்வே ஞானம் எனலாம்.அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஞானம் அவசியமானது. அதை தேர்ந்து தெளிவுடன் செயல் பட சீரான வாழ்வில் நெறிமுறைகள், போதனைகள், அறிவுரைகள் மற்றும் வழிகாட்டிகள் தேவை.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் அடித்தளமாக விளங்குவது ஞானம். இவ்வகை ஞானத்தை எல்லா நேரங்களிலும் சாதாரணமாக பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகிறோம். கால நேரம் குறுகியது, பணியின்அழுத்தம், போராட்டமான மனநிலை, சாவால்கள் நிறைந்த வளர்ச்சி, என மனித வாழ்வு கடமைகள், பொறுப்புக்கள் நிறைந்த தொடர் ஒட்ட சுழற்றி. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஞானத்தை வெளிப்படுத்த இறைவனின்துணை, தூண்டுதல், நம்மில்செயலாற்றவேண்டும்.

ஞானத்தினால் வரும் நன்மைகள்:-
ஞானத்தை புறக்கணியாதே: அதுஉன்னைப்பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.(நீதிமொ4:6)
ஞானத்தை தேடிப்பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.(நீதிமொ4:22)
ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்: அவருடைய சொற்களை எவரும் ஏற்பர். (நீதிமொ16:23)
ஞானத்தை அடைய வழிகள்:-

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம். (நீதிமொ9:10)
தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும்இருக்கும்.(நீதிமொ11:2)

ஞானம் வழங்கப்பட மன்றாடுதல்:-

ஞானத்தையும் அறிவையும் எனக்கு அளித்தருளும்.(2குறிப்பேடு1:10)
உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். (யாக்கோபு1:5)

வாழ்வின் உண்மை வழிகள்:-
அன்பு, பாசம், உறவு இவற்றை தேவையில் இருப்பவரோடு பகிரும் போது உண்மை வழி உதிக்கும்!
அமைதியை மேற்கொண்டு, பொறுமை கொள்ளும் போது உண்மை வழி உதிக்கும்!
இரக்கமும், நற்செல்களும் நிறையும் போது உண்மை வழி உதிக்கும்!
நடுநிலை தவறாது, வெளிவேடமற்ற வாழ்வுவாழும் போதுஉண்மை வழி உதிக்கும்!
உலகத்தோடு நட்புறவு கொண்டு எதார்த்தத்தை மகிழ்ச்சியோடு ஏற்கும் போது உண்மை வழி உதிக்கும்! இப்படிப்பட்ட வாழ்வின் உண்மை வழிகளை கற்றுக்கொடுத்து கடைப்பிடிக்க அழைக்கும் ஞானச்சுடர் ஒளியை வரவேற்ப்போம்.

செபம்:-
யோசேப்பின்ஞானபுத்திரரே!
ஞானத்தின் அரியணையில் வீற்றிருக்கும் உனது அன்பு என்னும் ஞான ஒளியை நாங்கள் மகிழ்ச்சியோடு விவேகத்தோடு மற்றவரிலும் கண்டுப் பாவிக்க வந்தருளும் இறைவா, வந்தருளும்.
[2014-12-29 19:11:01]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி