நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இணைந்து செபிப்போம்

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 33வது வாரம் திங்கள்கிழமை
2017-11-20ஆண்டவரே இயேசுவே,
நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்ற இறைவார்த்தையை வாசிக்க கேட்கிறேன் இறைவா! நான் ஆசையாய் உம்மிடம் வேண்டுகிறேன் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து விதமான நிறுவனங்களும், மக்களினங்களும் பார்வை பெற விரும்புகிறேன். ஆம் இறைவா, அன்பின் ஆழத்தை தெரிந்து கொள்ள அடுத்திருப்பவருக்கு அன்பை கொடுக்க, பிறர் நலனில் அக்கறை கொள்ள பார்வையை மீண்டும் கொடுக்க மன்றாடுகிறேன். பிரகாசமாக சுடர்விடும் உமது அரவணைப்பை மற்றவருக்கு கொடுக்க எனது நேரம், பகிர்தல், ஆறுதல் வார்த்தைகள், அருமருந்தாக கொடுக்க தாராள மனதையும், திடமான மனதையும் இன்றைய நாளின் அன்பு பரிசாக எனக்கு கொடுத்தருள மன்றாடுகிறேன். இதன் வழியாக திருச்சபை என்னிடம் இருந்து எதிர்ப்பார்க்கும் சிறிய கருவியாக நான் பயன்பட உதவும் என உறுதியாக நம்புகிறேன். இறைவா இன்று நான் பார்வை பெற விரும்பும் கருத்துகளை உம் திருநாமத்தின் பெயரால் வேண்டி கேட்கிறேன் ஆமென்.

பாசமுள்ள பார்வையில்.. நேர்மையை உணர்த்திய தாய்ஓர் ஊரில் இரத்தினசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நகருக்கு சென்று திரும்பும் வழியில் முப்பது தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டு சோர்வுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வழியில் கண்ட ஏழைத் தாய் ஒருவர்,... [2017-11-19 20:47:28]ஒப்புரவு,மன்னிப்பு,அமைதியை அறிவிக்க மியான்மாருக்கு வருகிறேன்இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியாகிய, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அமைதியை அறிவிப்பதற்காக, மியான்மாருக்கு வருகை தருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டுக்கு காணொளிச் செய்தி ஒன்றை, இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ளார். இம்மாதம் 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை மியான்மாருக்கு... [2017-11-18 21:29:07]அர்ஜென்டீனா நீர்மூழ்கி கப்பலில் காணாமல்போயுள்ளவர்க்கு செபம்“இறைமக்களின் செபங்களின் ஆதரவின்றி, பேதுருவின் வழிவருபவர் தனது திருப்பணியை நிறைவேற்ற இயலாது. உங்கள் அனைவரின் செபங்களில் நம்பிக்கை வைத்துள்ளேன்!” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் மற்றும்,... [2017-11-18 21:21:57]

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய 42 ஆவது ஆண்டு இளையோரின் சிறப்பு மலருடன் கொண்டாட்டம்கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய 42 ஆவது ஆண்டு இளையோரின் சிறப்பு மலருடன் கொண்டாட்டம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய இளையோர்; தற்போதைய ஆலயம் கட்டப்பட்ட 42 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பு மலர் வெளியிட்டுடன் கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக... [2017-11-19 23:04:03]பிரசன்னமாகியிருந்து அனைத்தையும் நெறிப்படுத்தினார்.திருச்சிலுவைச் சபை அருட் சகோதரிகள் தமது ஆன்மிக, சமூகப் பணிகளின் பரப் பெல்லையை விசாலமாக்கிக் கொள்ளும் பணி நோக்கின் மற்றொரு வளர்ச்சிக் கட்டமாக வவுனியா வேப்பன்குளம் பங்கின் பணி எல்லைக்குள் அமைந்துள்ள உக்கிளான்குளம் என்னுமிடத்தில் புதிய இல்லமொன்றை அமைத்துள்ளனர். ஏற்கனவே... [2017-11-19 22:57:59]

கத்தோலிக்க உளவியலாளர்களின் தேசிய கருத்தரங்குஉளவியலாளர்கள் மக்களின் நல்வாழ்வுக்கு உதவ வேண்டுமென்று வலியுறுத்தினார், மங்களூரு ஆயர் அலாய்சியஸ் பால் டிசூசா.

இந்தியாவின் மங்களூருவில் செப்டம்பர் மாதத்தில் நடந்துமுடிந்த கத்தோலிக்க உளவியலாளர்களின் 18வது தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் அலாய்சியஸ் டிசூசா அவர்கள், கத்தோலிக்க உளவியலாளர்கள், இயேசுவைப் பின்பற்றி,... [2017-11-20 01:52:09]உலக மாமன்றம் திருத்தந்தையின் பரிசு - சலேசிய உலகத் தலைவர்உலகின் விளிம்புகளுக்குச் சென்று, மறைப்பணியாற்ற வேண்டும் என்பதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புனித தொன் போஸ்கோவும் ஒருமித்த கருத்துடையவர்கள் என்று, சலேசிய துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Ángel Fernández Artime அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்தியாவின் மும்பை... [2017-11-20 01:42:10]

இலை மறை காயாய் இருந்த "எம்மாவு இணையத்தளம்" உறுப்பினர்களின் ஒன்று கூடல் நிகழ்வுயேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணித்தளத்தால், இணையத்தள குழுவினருக்கான ஒன்றுகூடல் சனிக்கிழமை 14, 15.10.2017 ஆகிய நாட்களில் Ratingen(Nordrhein-Westfalen) எனும் இடத்தில் மதிய உணவுடன் ஆரம்பமானது. எங்கள் ஆன்மீக இயக்குனர் அருட்பணி. நிரூபன் இலை மறை காயாய் இருந்த எமை வணக்கத்துக்குரியவர்கள் என்று மேம்மைப்படுத்தியதோடு, ஆயத்த செபமும், ஆரம்ப உரையும் எடுத்துச் சொன்னார். தொடர்ந்து எங்கள் இணையத்தள பணிகள் தொடர்பான தொகுப்பும் அருட். சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB அவர்களின் காணொளிச் செய்தியும் இடம் பெற்றது. [2017-11-03]


ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன் என்பதன் அர்த்தம் தான் என்ன?இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் [2017-11-14 01:23:11]

எழுத்துருவாக்கம்:சகோதரர். அ. அன்ரன் ஞானராஜ் றெவல்( சலேசிய சபை )விழுந்தால் எழுவோம் தோல்விகள் வாழ்க்கையில்லை.கடவுள் அவனிடம் , “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார். [2017-09-24 23:35:09]

எழுத்துருவாக்கம்: சகோ. அ. அன்ரன் ஞானராஜ் றெவல் SDB

"நற்செய்தி பகிர்வு" - அருட்தந்தை.போல் றொபின்சன்


2017-11-20

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

இயேசு கதை


2017-11-20

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2017-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! உங்கள் அன்னையாம், என்னைச் சுற்றிக் கூடிவந்திருக்கும் உங்களைப் பார்க்கும்போது, பல தூய்மையான ஆன்மாக்களை, அன்பு மற்றும் ஆறுதல் தேடும் எனது பல பிள்ளைகளைக் காண முடிகின்றது, ஆனால் அதை எவரும் அதை உங்களுக்குத் தரவில்லை. அத்துடன் எனது மகனைக் கண்டறியாத பலர், முன்மாதிரிகையாக இல்லாமல் பாவத்தில் வாழ்வதையும் காண முடிகின்றது. நல்லவை அமைதியாகவும், தூய இதயத்தின் ஊடாகப் பெருகுவதாலும், அது பலமடைந்து, இந்த உலகிற்கு வழங்கப்படுகின்றது. பல்வேறு...
2017-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! இந்த வேளையில் இரக்கத்தின் காலத்திற்காக செபிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிரச்சினைகள், தேவைகள், துன்பங்கள் மற்றும் திருப்தியடையாத நிலைமைகள் உள்ளன. புனிதர்கள் உங்களுக்கு முன்மாதிரிகையாக இருப்பதுடன் நீங்கள் தூயவர்களாக இருப்பதற்கு அவர்கள் உந்துசக்தி தருவார்கள். இறைவன் உங்களின் அண்மையாக இருப்பதுடன் அவரைத் தேடுவதால் நீங்கள் இறைவனிடம் மீண்டும் மனம்திரும்பி வாருங்கள். இந்த விசுவாசமே உங்கள் நம்பிக்கையாக இருப்பதுடன், உங்கள் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பட்டும். நீங்கள்...
2017-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பார்ந்த பிள்ளைகளே! பாரிய சோதனைகளுக்கு முகம்கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்காக, பேராசைகளைத் தவிர்ப்பதுடன், தவமிருந்து செபிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். விசேடமாக, நீங்கள் அருட்பணியாளர்கள் மற்றும் திருநிலைப்படுத்தப்பட்ட அனைவருக்காகவும்; அவர்கள் மேலும் உறுதியுடன் இயேசுவை அன்புசெய்யவும்; தூய ஆவியானவர் அவர்களின் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பவும்; வானகம் மற்றும் வானக இரகசியங்களுக்கு சாட்சிகளாய் வாழவும் செபிக்குமாறு நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன். பலரது ஆன்மாக்கள் பாவத்தில்...


திருவெளிப்பாட்டு ஆண்டு 2016/2017

27/11/2016-26/11/2017


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(யோவான் 3:16)

ஆவியின் அருட்கொடைகள்

தூய ஆவியார் ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவுசெறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவற்றை அருளுகிறார்.
(1கொரிந்தியர் 12:8-10)